தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம் என  பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடேயிற்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் கோத்தபாயவின் ஊடக பேச்சாளர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிபந்தனைகளை வாசிப்பது கூட அர்த்தமற்ற பலனற்ற விடயம் என நான்  ஏற்கனவே தெளிவாக தெரிவித்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்த இந்தக்கோரிக்கைகள் தொடர்பில்  பகிரங்கமாக கருத்து தெரிவிக்கட்டும் என நான் சவால் விடுக்கின்றேன் என  கெஹெலிய ரம்புக்வெல  தெரிவித்துள்ளார்.

56955_11-720x450-720x400  தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை கோத்தாபய வெறுப்புடன் நிராகரித்துவிட்டார்- கெஹெலிய 56955 11   e1572705341280சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பினதுர் அவரிற்கு வழங்கும் வாக்குகளிற்காக  தான் நாட்டிற்கு துரோகமிழைப்பாரா என்பதை தெரிவி;க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் வேட்பாளர் இதனை பகிரங்கமாக அறிவி;க்கவில்லையே என்ற கேள்விக்கு நான் இதனை கோத்தபாயவின் சார்பில் தெரிவிக்கின்றேன், அவர் அதனை  பார்ப்பதற்கு கூட தயாரில்லை, 13 யோசனைகளையும் அவர் வெறுப்புடன் நிராகரித்துவிட்டார் என ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் கோரிக்கைகளை விட அதிகமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர் எனவும் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.