ilakkiyainfo

ilakkiyainfo

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா?
October 06
01:49 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தன் மௌனம் காப்பதனால் நன்மை ஏற்படுமென்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (04.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீங்கள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளின் பின்னர், உங்கள் கட்சியின் தலைவர் மௌனம் சாதிக்கின்றார். கட்சி தலைவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 07 ஆம் திகதி சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் இந்தியா சென்றுவிட்டதனால் சந்திக்க முடியவில்லை.

மீண்டும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என கேட்ட போது, தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான அவசியம் எனக்கு இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சியில் யார் தீர்மானங்கள் எடுப்பவராக இருக்கின்றாரோ அவரின் தீர்மானங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன. தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் மௌனம் காப்பதனால், நன்மைகள் ஏற்படுமென்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட நேரத்தில் தலைவர் சம்பந்தன் தானே உங்களுக்கு ஆதரவாக இருந்தார் என மீண்டும் ஊடகவியலாளார் கேள்விக்கு, பொது மக்கள் கொடுத்த அழுத்தங்களின் பின்னர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால், நடவடிக்கை எடுத்தார் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News