ilakkiyainfo

ilakkiyainfo

தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியது தமிழ் காங்கிரஸ்

தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியது தமிழ் காங்கிரஸ்
December 07
08:41 2017

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

பெயர் : தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. (TamilNational Council–T.N.C)

இலக்கு: தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காககொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.

எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாதநிலை ஏற்பட்டுள்ளமையினால் மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிடும்.

எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும்.

இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள் தமது சுயாதீனத்தை பேணிக்கொள்ள முடியும்.

மேற்படி விடயங்களை வாசித்து விளங்கிக் கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 06ஆம் நாள் (06.12.2017) இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இதன் கீழ் கையொப்பமிடும் அமைப்புக்களால் கைச்சாத்திடப்படுகின்றது.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம், மற்றும் பொதுஅமைப்புக்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News