ilakkiyainfo

ilakkiyainfo

தம்பிக்கு காதல் திருமணம் செய்து வைத்த அக்கா கவுரவக்கொலை : தலையாரி, மனைவிக்கு தூக்கு தண்டனை

தம்பிக்கு காதல் திருமணம் செய்து வைத்த அக்கா கவுரவக்கொலை : தலையாரி, மனைவிக்கு தூக்கு தண்டனை
January 10
20:56 2017

 நெல்லை: நெல்லையில் தம்பிக்கு காதல் திருமணம் செய்து வைத்த அக்காவை,   கவுரவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தையான தலையாரி, அவரது மனைவி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டை  இளங்கோ நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் விஸ்வநாதன் ரயில்வே கேட் கீப்பராக உள்ளார். மகள் கல்பனா (32) அவரது கணவர் சற்குணம் மற்றும் ஒன்றரை வயது மகனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

தச்சநல்லூர் மங்களா குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (54), தலையாரி. இவரது மனைவி செல்லம்மாள். இவர்களது மகள் காவேரி.

இவரை கல்பனாவின் தம்பி விஸ்வநாதன் காதலித்து வந்தார். இதற்கு காவேரியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காவேரியும், விஸ்வநாதனும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு  சமூகத்தினர் என்பதால் சங்கரநாராயணன் கடும் கோபத்தில் இருந்து வந்தார்.

அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது கல்பனாதான் என கருதிய சங்கரநாராயணன், கடந்த 2016 மே 13ம் தேதி வீடு புகுந்து கல்பனாவை வெட்டிக் கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக  உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் பாளை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி 120பி (கூட்டு சதி திட்டம் தீட்டுதல்), 302 (கொலை செய்தல்) மற்றும் சாதி பெயரை சொல்லி திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணன் (52) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி செல்லம்மாள் (48) ஆகியோரை கைது செய்து பாளை.

சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி நெல்லை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.  இதன் அடிப்படையில் வழக்கை நீதிபதி அப்துல்காதர் விசாரித்து, சங்கரநாராயணன், செல்லம்மாள் இருவரும் குற்றவாளிகள் என நேற்று முன்தினம் அறிவித்தார்.

எனினும் அவர்களின் தண்டனை விவரத்தை நேற்று (10ம் தேதி) அறிவிப்பதாக கூறினார். அதன்படி  நீதிபதி அப்துல்காதர்  இந்த வழக்கில் நேற்று காலை தீர்ப்பு கூறினார்.

அப்போது அவர்,  ஒன்றரை வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மனிதாபிமானம் இல்லாமல், வெட்டி கவுரவ கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் கணவன், மனைவி இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கிறேன் என தனது தீர்ப்பு கூறினார்.

கவுரவ கொலைகளுக்கு அதிகபட்ச தண்டனை  வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற 7 வழக்குகளில் உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வழக்கிலும் மரண தண்டனை விதித்துள்ளதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கல்பனாவின் கணவர் சற்குணத்திற்கு ரூ.8  லட்சத்து 25 ஆயிரமும், அவரது ஒன்றரை வயது மகனுக்கு சம்பவம் நடந்த தேதியில்  இருந்து மாதம் தோறும் 11 ஆயிரத்து  600 ரூபாய் வீதம் 21வயது வரை   அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரை அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி  தீர்ப்பில் கூறியுள்ளார்.

கொலை வழக்கில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியதால் நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது

4 ஆண்டுக்கு பிறகு…

நெல்லை மாவட்டத்தில் கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பிறகு கவுரக் கொலைக்காக கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

நீதிபதி தமது முதல் பேட்டியில் தம்மை நோக்கி அந்த நபர் சுட்ட்தாகவும் , தமது பாது [...]

எனக்கு மற்றைய எல்லாத்தையும் விட விஷத்தை தான் பிடித்திருக்கு , ஏனெனில் நானும் ஒரு கொடிய விஷம். [...]

வித்தியாவின் படுகொலையில் முக்கியமான சந்தேக நபரான சுவிஸ் குமார் பற்றி, ஆறாவது சாட்சியாளரான முகமட் இவ்லார் என்பவர் [...]

கக்கூசு நாட்டு படையினர் அவமானகரமான மடிய போகின்றனர் , கக்கூசு நாடு அவர்களின் குடும்பங்களுக்கு [...]

தூஊஊஊஊ , இவனை செருப்பால இடிக்கிறதுக்கு முன் , இவனை தெரிவு செய்த யாழ் பாணிகளை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News