ilakkiyainfo

ilakkiyainfo

தரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ)

தரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ)
July 18
20:50 2019

கிறீஸ் நாட்டில், பாரிய பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடு­பா­தையில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக, கடற்­க­ரையில் நின்று கொண்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணிகள் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்­த­போது பிடிக்­கப்­பட்ட வீடியோ இணை­யத்தில் பரவி வரு­கி­றது.

கிறீஸின் வட­மேற்கு பகு­தியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்­க­ரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்­துள்­ளது.

கடற்கரைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகள் விமான நிலை­யத்தில் தரை­யி­றங்க வரும் விமா­னங்கள் மிகவும் தாழ்­வாகப் பறக்கும்.

அவ்­வி­மா­னங்கள் பறக்­கும்­போது பய­ணிகள் செல்பீ எடுப்­பது வழக்கம்.

ஆனால், விமா­னங்கள் தரை­யி­றங்­கும்­போது, விமான என்­ஜின்­களில் இருந்து வெளிப்­படும் வேக காற்­றினால் சுற்­றுலாப் பய­ணிகள் தூக்கி வீசப்­பட்டு காய­ம­டை­யவோ, உயி­ரி­ழக்­கவோ நேரிடும் என்­பதால் ஓடு­த­ளத்தின் முன்­பாக ‘செல்பி’ எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என்று அந்­நாட்டு அரசு அறி­வு­றுத்தி வரு­கி­றது.

இந்த நிலையில், ‘பிரிட்டிஷ் எயார்வேஸ்’ நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பய­ணிகள் விமானம் ஒன்று ஸ்கியாதோஸ் விமான நிலை­யத்­துக்கு வந்­தது.

plane-23  தரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ) plane 23

இந்த விமானம் ஓடு­பா­தையில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக வழக்­கத்தை விட தாழ்­வாகப் பறந்து வந்­தது. அதா­வது கடற்­க­ரையில் நின்று கொண்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணிகள் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்­தது.

ஆபத்தை உண­ராத சுற்­றுலாப் பய­ணிகள் வழக்கம் போல விமா­னத்தின் கீழ்­ப­கு­தியில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்­துக்­கொண்­டனர்.

விமானம் மிகவும் தாழ்­வாகப் பறந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோ:

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News