ilakkiyainfo

ilakkiyainfo

தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! – (படங்கள், வீடியோ)

தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! – (படங்கள், வீடியோ)
July 11
23:27 2018

ஆபத்தான சுரங்கத்திலிருந்து 13 உயிர்களை மீட்டெடுத்துள்ளனர் ரியல் ஹீரோக்கள். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்ததாக முடிவுக்குவந்துள்ளது தாய்லாந்துச் சிறுவர்களை மீட்கும் பணி.

கடந்த 2010-ம் ஆண்டு, சிலி நாட்டின் சுரங்கத்துக்குள் 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஓரிரு நாள்கள் அல்ல, 69 நாள்கள் உள்ளே இருந்த தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய மீட்புப் பணி அது. சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புப்பணியை மையமாகவைத்து, `தி33 ‘ என்ற பெயரில் ஹாலிவுட் படம் வெளிவந்தது.

இப்போது, அதைவிட ஆபத்தான சுரங்கத்திலிருந்து 13 உயிர்களை மீட்டெடுத்துள்ளார்கள் ரியல் ஹீரோக்கள். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்ததாக முடிவுக்குவந்துள்ளது, தாய்லாந்துச் சிறுவர்களை மீட்கும் பணி.

cave_diver_15595 தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) cave diver 15595

சியாங் ராய் மாகாணத்தில் தாம் லுயாங் (`Great Cave of the Sleeping Lady’) குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களின் உயிரைக் காக்க, ஆக்ஸிஜன் சிலிண்டர்களைச் சுமந்துசென்ற சமான் குணான் பலியானார்.

சிலிண்டர்கள், உணவுப் பொருள்கள், மருந்துகளை சிறுவர்களிடத்தில் சேர்த்துவிட்டுத் திரும்புகையில், துரதிர்ஷ்டவசமாக அவரின் சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்துபோனது. விளைவு, குனான் இறந்துபோனார்.

குகையின் வாயிலிலிருந்து 2.5 மைல் தொலைவில் சிறுவர்கள் சிக்கியிருந்தனர். ட்ரில் போட்டெல்லாம் குகைக்குள் அவர்கள் இருக்கும் இடத்தை அடைவது இயலாத காரியம்.

இரண்டாவது, இந்தக் குகையின் முழு அமைப்பையும் இதுவரை யாரும் முழுமையாக அறிந்ததில்லை. குகைகுறித்த முழுமையான வரைபடமும் கிடையாது.

தேங்கிநிற்கும் மழைநீருக்குள் மூழ்கிச்செல்வது ஒன்றே வழி. இந்த ஆபத்தான பணியைத் தைரியமாக மேற்கொண்ட குனான் உயிரிழந்ததுதான் தாய்லாந்து மக்களை கடும் சோகத்துக்குள்ளாக்கியது.

மீட்புப்பணிக்கு சர்வதேச நாடுகளும் கைகொடுத்தால்தான் சிறுவர்களை மீட்க முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற டைவர்கள் தாய்லாந்துக்கு வந்தனர்.

ஜூன் 23-ம் தேதி காணாமல்போன சிறுவர்கள், குகைக்குள் உயர்வான இடத்தில் அமர்ந்திருப்பதையே ஜூலை 2-ம் தேதிதான் கண்டுபிடிக்கப்பட்டது.

130523_thumb தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) 130523 thumb

சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரந்துவிரிந்துகிடக்கும் இந்தக் குகை, அபாயகரமாக வளைவுகள் மற்றும் கூர்மையான பாறைகளைக்கொண்டது. சில இடங்களில், ஒருவர் மட்டுமே புகுந்து செல்லக்கூடிய குறுகிய இடைவெளிதான் இருக்கும்.

வெளிச்சம் எந்தவிதத்திலும் கிடைக்காது. இத்தகைய கடினமான விஷயங்களைக் கடந்து 13 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

மீட்புப்பணியில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டாலும் உயிர்களை மீட்க முக்கியக் காரணக்கர்த்தாவாக இருந்தவ,ர் அடிலெய்டைச் சேர்ந்த புகழ்பெற்ற  டைவரான ரிச்சர்டு ஹாரிஸ். சிறந்த மருத்துவ நிபுணரான இவர், குகை டைவிங்கில் 30 ஆண்டுகாலம் அனுபவமிக்கவர்.

குகைக்குள் சிறுவர்கள் இருக்கும் இடத்தை, முதன்முதலில் பிரிட்டன் குழுவினர்தான் கண்டுபிடித்தனர். சிறுவர்கள் நிலையைக் கண்ட பிரிட்டன் குழு,

richard harris தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) richard harrisரிச்சர்ட் ஹாரிஸ்

“ரிச்சர்டு ஹாரிஸ் முன்னிலையில் மீட்புப்பணி நடந்தால்தான் சரிவரும்” என்று தெளிவாகக் கூறிவிட, தாய்லாந்து அரசு அவரை அணுகியது.

ரிச்சர்டு ஹாரிஸ் அப்போது விடுமுறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் உடனடியாக விடுமுறையை ரத்துசெய்துவிட்டு தாய்லாந்து சென்றார்.

முதலில் குகையில் இருந்து ஆரோக்கியமாக உள்ள சிறுவர்களைத்தான் வெளியே கொண்டுவர வேண்டும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஹாரிஸ் வந்ததும் அந்தத் திட்டத்தை மாற்றினார்.

cave-1_15416 தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) cave 1 15416

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் உட்பட 13 பேரை மீட்கும் குழுவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொருவருமே ஹீரோக்கள்தான்.

13 பேரையும் வெளியே பத்திரமாக மீட்டுவிட்டு கடைசியாக வெளியே வந்தவர்தான் மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸ்.

விடுமுறை எடுத்துவிட்டு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஹாரிஸ், தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்கும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் ஒரு குகை நீச்சல் பயிற்சி வீரரும் கூட. இந்த ஒரு முக்கியத் தகுதிதான் இவரை தாய்லாந்து குகை சம்பவத்தில் இன்று கதாநாயகனாக்கியுள்ளது.

இந்த மீட்புக் குழுவில் சுமார் 90 நீச்சல் பயிற்சி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அதில் 50 பேர் வெளிநாட்டினர் என்றும் தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

வெளிச்சம் இருக்காது, குறுகிய பாதை, நீச்சல் தெரியாத நபர்கள், வளைந்து நெளிந்த குறுகிய குகைக்குள் இருந்து அவர்களை மீட்பதுதான் பணி.

இது மற்ற மீட்புப் பணிகளைப் போல நன்கு திட்டமிட்டு, சரியாக செய்து முடிப்பதல்ல. அதிகக் கவனம், சிக்கல் எங்கும் எழலாம், எப்போதும் நிலைமை விபரீதமாகலாம், யாருக்கும் எதுவும் ஏற்படலாம் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் மீட்புப் பணி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

richard_ha தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) richard ha

நண்பர்களின் அழைப்பை ஏற்று, தாய்லாந்து குகையில் மீட்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு ரிச்சர்ட் ஹாரிஸ், தேவையான மருந்துகளுடன் குகைக்குள் சென்று கடைசி வரை சிறுவர்களுடன் இருந்து அவர்களது உடல்நிலையை பரிசோதித்து வந்தார். ஒவ்வொருவராக மீட்கப்படும் போது, அடுத்து யாரை மீட்க வேண்டும் என்பது வரை அவர் முடிவு செய்து கொடுத்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை முதலில் வெளியே கொண்டுசெல்ல ஹாரீஸ் முடிவெடுத்தார். அதோடு, குகைக்குள் சென்ற ஹாரீஸ், உடல்ரீதியாக பலவீனமான சிறுவர்களை முதலில் கண்டறிந்து அவர்களை வெளியேற்றினார்.

மனரீதியாகவும் அவர்களைத் தயார்படுத்தினார். முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) மீட்புப்பணியில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அடுத்த நாள் 4 பேரும், செவ்வாய்க்கிழமை 4 பேரும் வெளியே கொண்டுவரப்பட்டனர்.

உலகிலேயே இவர் அளவுக்கு குகையில் நீந்தும் பயிற்சி பெற்றவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களது பங்களிப்பு இந்த மீட்புப் பணியில் அளப்பரியது என்கிறார் ரிச்சர்டின் நண்பரும் மருத்துவருமான ஈடன்.

எப்போதும் சாகசத்தில் ஈடுபடுவதற்காக குகைக்குள் நீந்தும் ரிச்சர்ட் பல முறை இதுபோன்ற ஆபத்தான மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு பலரையும் மீட்டுள்ளார்.

இது அவருக்கு புதிதாக எந்த புகழையும் சேர்த்துவிடப்போவதில்லை. அவர் ஏற்கனவே பல விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் சொந்தக்காரர்தான். ஆனால், இந்த தாய்லாந்து குகை சம்பவத்தால் அவர் உலகம் அறிந்த நபராக மாறியிருக்கிறார். தாய்லாந்து மக்களால் ஒரு நாயகனாக பார்க்கப்படும் அளவுக்கு அவரது பணி அவரை உயர்த்தியுள்ளது.

குகைக்குள் இருந்து அனைவரையும் வெளியேற்றிவிட்டு கடைசியாக வெளியே வந்த ரிச்சர்டு ஹாரீஸுக்கு சோகத் தகவல் ஒன்று காத்திருந்தது.

`ரிச்சர்டு, உங்க அப்பா இறந்துட்டாங்க!’


4E1F8DD800000578-5943187-image-a-6_1531328209836 தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) 4E1F8DD800000578 5943187 image a 6 1531328209836

4E20636300000578-5943187-image-a-4_1531328198699 தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) 4E20636300000578 5943187 image a 4 1531328198699

4E1F9A5500000578-5943187-image-a-5_1531328204465 தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) 4E1F9A5500000578 5943187 image a 5 1531328204465*COMPOSITE* தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! -வீடியோ தாய்லாந்துச் சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்! - (படங்கள், வீடியோ) 4E15C82A00000578 5943187 Saved All 12 players pictured from top left clockwise Adul Sam o a 13 1531328788464Saved! All 12 players, pictured from top left clockwise, Adul Sam-on, 14, Panumas Saengdee, 13, Sompong Jaiwong, 13, Ekkarat Wongsookchan, 14, Pipat Bodhi, 15, Peerapat Sompiangjai, 16, Pornchai Kamluang, 16, Prajak Sutham, 14, Chanin Wiboonrungrueng, 11, Mongkol Boonpiam, 14, Nattawut ‘Tle’ Takamsai, 14 and Duangpetch Promthep, 13

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News