ilakkiyainfo

ilakkiyainfo

தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி – உருக்கமான நிகழ்வு

தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி – உருக்கமான நிகழ்வு
October 05
17:35 2019

தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன.

ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன.

தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன.

ஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர் வீழ்ச்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

_109114458_dc67a73a-135d-42f7-8d2f-f007be6dbdd2  தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி - உருக்கமான நிகழ்வு 109114458 dc67a73a 135d 42f7 8d2f f007be6dbdd2

1992ஆம் ஆண்டில் எட்டு யானைகள் விழுந்து உயிரிழந்தது தாய்லாந்தில் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சாலையை யானைகள் மறித்துள்ளதாகச் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
PRI_88489590  தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி - உருக்கமான நிகழ்வு PRI 88489590

மூன்று மணி நேரம் கழித்து 3 வயது யானையின் உடல் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதே இடத்திற்கு அருகில் 5 யானைகளின் உடல்களும் இருந்தன.

மீதமுள்ள இரண்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த தேசிய பூங்காவின் தலைவர் கஞ்சித் ஸ்ரீனொப்பவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

_109115790_e37544ca-5a36-4446-8207-b94d653e20af  தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி - உருக்கமான நிகழ்வு 109115790 e37544ca 5a36 4446 8207 b94d653e20af

அந்த இரண்டு யானைகளை மன ரீதியாகவும் இந்த சம்பவம் பாதிக்கும்.

“இது பாதி குடும்பத்தை இழப்பது போன்று” என்று தாய்லாந்து வனவிலங்குகள் அமைப்பின் நிறுவனர் எட்வின் வீக் தெரிவித்தார்.

“இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இது இயற்கை” என்கிறார் அவர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News