ilakkiyainfo

ilakkiyainfo

தினகரனிடம் சுகாஷ் இலஞ்சம் பெற்றதால் சிறைவாசி: திகாருக்குள் இருந்த போதும் சுகவாசி!!

தினகரனிடம் சுகாஷ் இலஞ்சம் பெற்றதால் சிறைவாசி: திகாருக்குள் இருந்த போதும் சுகவாசி!!
November 11
20:25 2017

கைவி­லங்­கிட்டு அழைத்து வர­வேண்­டிய ஒரு கைதியைச் சுதந்­தி­ர­மாக உலவ விட்­டனர் பொலிஸார். பொலி­ஸா­ருக்கு ஸ்டார் ஹோட்டலில் ரூம்கள் போட்டுக் கொடுத்­த­தோடு, மொடல் அழ­கி­க­ளையும் அனுப்பி வைத்தான் சுகாஷ்.

திகார் சிறை­யி­லி­ருந்து விசா­ர­ணைக்கு வெளியே அழைத்து வரப்­பட்ட இடத்தில் பொலி­ஸா­ருக்கு ஸ்டார் ஹோட்­டலில் ரூம் போட்­டுக்­கொ­டுத்து சல்­லா­பிகள் சப்­ளையும் செய்து கொடுத்­து­விட்டு காத­லி­யுடன் ஹாயாக ஷொப்பிங் சென்று வந்து பெங்­ளூ­ரு­வையே கலக்கி இருக்­கிறான் இரட்டை இலைச் சின்ன விவ­கா­ரத்தில் தேர்தல் கமிஷன் அதி­கா­ரி­க­ளுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்­ற­தாக கூறப்­படும் இடைத்­த­ரகர் சுகாஷ்.

பெங்­க­ளூ­ருவை பூர்­வீ­க­மாகக் கொண்­டவன் சுகாஷ் சந்­தி­ர­சேகர். 27 வய­தாகும் இவன் மீது இந்­தியா முழு­வதும் 50க்கும் மேற்­பட்ட மோசடி வழக்­குகள் உள்­ளன.

x10-leena-maria-paul-300.jpg.pagespeed.ic.YDikxUp5-G  தினகரனிடம் சுகாஷ் இலஞ்சம் பெற்றதால் சிறைவாசி: திகாருக்குள் இருந்த போதும் சுகவாசி!! x10 leena maria paul 300

 சுகாஷின் காதலி  நடிகை லீனா

அதில் ஒன்­றுதான் இரட்டை இலைச் சின்­னத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறி டி.டி.வி.தின­க­ர­னிடம் 60 கோடி ரூபா இலஞ்சம் பெற்று தேர்தல் கமிஷன் அதி­கா­ரி­க­ளுக்கு கொடுக்க முயன்­ற­தான வழக்கு.

அதா­வது கடந்­தாண்டு டிசம்பர் மாதம் ஜெய­ல­லிதா மறை­வுக்குப் பிறகு சசி­கலா தலைமை ஏற்­கவே, முதல்­வ­ராக இருந்த பன்­னீர்­செல்வம் பத­வியை ராஜி­னாமா செய்­த­தோடு கட்­சியை விட்டும் வெளி­யே­றினார்.

இதனால் அ.தி.மு.க இரு அணி­க­ளாகப் பிள­வு­பட்­டது. இத­னி­டையே ஆர்.கே. நகர் இடைத்­தேர்தல் அறி­விக்­கப்­ப­டவே இரு அணி­களும் தங்­க­ளுக்கே இரட்டை இலைச் சின்­னத்தை தர­வேண்டும் என கோரிக்கை விடுத்­தன. இதன் கார­ண­மாக இரட்டை இலைச்­சின்­னத்தை முடக்­கி­யது தேர்தல் கமிஷன்.

அப்­போது தேர்தல் கமிஷன் அதி­கா­ரி­க­ளுக்கு இலஞ்சம் கொடுத்து இரட்டை இலைச்­சின்­னத்தைப் பெற்றுத் தரு­வ­தாகக் கூறி டி.டி.வி.தினக­ர­னிடம் சுகாஷ் 60 கோடி ரூபா பேரம் பேசி  இருப்­ப­தாக டெல்லி குற்­றப்­பி­ரிவு பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து டெல்லி ஹயாத் ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த சுகாஷ் சந்­தி­ர­சே­கரை பொலிஸார் ஏப்ரல் 16 ஆம் திகதி இரவு கைதுசெய்­தனர்.

அவ­னி­ட­மி­ருந்து 1.30 கோடி ரூபாவை பொலிஸார் பறி­முதல் செய்­தனர். இந்த வழக்கில் தின­கரன் மீதும் வழக்­குப்­ப­திந்து கைது செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த வழக்கு நிலு­வையில் இருந்து வரும் நிலையில் திகார் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த சுகாஷை பல்­வேறு வழக்­குகள் தொடர்­பான விசா­ர­ணைக்கு மும்பை, கோவை, பெங்­க­ளூரு  நீதிமன்றங்களுக்கு ஒக்­டோபர் 9 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை அழைத்து வந்­தனர்
டெல்லி சிறப்­புப்­படை பொலி­ஸா­ரான 3 ஆவது பட்­டா­லி­யனைச் சேர்ந்த சப் இன்ஸ்­பெக்டர் ராஜேஷ், தலைமைக் காவ­லர்கள் ஜீவன், ஜோர்ஜ், காவ­லர்கள் நிதிஷ்­குமார், கேசவ்­குமார், தர்­மேந்தர் மற்றும் புஷ்­பேந்தர் ஆகியோர்.

ஆனால் கைவி­லங்­கிட்டு அழைத்து வர­வேண்­டிய ஒரு கைதியை ஹாயாக உலவ விட்­டு­விட்டு வேடிக்கை பார்த்­தி­ருக்­கின்­றனர் பொலிஸார்.

காரணம் செல்லும் இடங்­களில் எல்லாம் தனக்கு பாது­காப்­பாக வந்த டெல்லி பொலி­ஸா­ருக்கு ஸ்டார் ஹோட்­டலில் ரூம் போட்டு கொடுத்­த­தோடு சில மொடல் அழ­கி­க­ளையும் அனுப்பி வைத்­தி­ருக்­கிறான் சுகாஷ்.

இதனால் குடியும் குடித்­த­ன­மு­மாக ஹோட்டல் அறையில் கூத்­த­டித்த பொலிஸார் சுகாஷைச் சுதந்­தி­ர­மாக உலவ விட்டு விட்­டனர்.

இதை தனக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட சுகாஷ். தனது காதலி லீனா மரி­ய­ப­வு­லுடன் ஜாலி­யாக ஷொப்பிங் சென்று வந்­தி­ருக்­கிறான்.

மேலும் தனது தொழில் பார்ட்­னர்­களைத் தொடர்பு கொண்டு பல்­வேறு டீலிங்­கு­க­ளையும் முடித்­தி­ருக்­கிறான். மும்பை, கோவையில் இவனது நட­வ­டிக்­கை­களைப் புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸாரும் நுண்­ண­றிவுப் பிரி வுப் பொலி­ஸாரும் கண்­கா­ணிக்கத் தவற விட்­ட­நிலையில் பெங்­க­ளூ­ருவில் ஆதா­ரத்­துடன் வரு­மான வரித்­து­றை­யிடம் சிக் கிக் கொண்­டான்.

இதை­ய­டுத்து பெங்­க­ளூ­ருவில் சுகாஷ் நடத்­திய கூத்தை டெல்லி பொலிஸ் கமி­ஷனர் அமுல்யா பட்­நா­யக்­கிடம் விரி­வான அறிக்­கை­யாகச் சமர்ப்­பித்­தது வரு­மான வரித்­துறை.

இதன் தொடர்ச்­சி­யாக மேற்­படி 7 பொலி­ஸா­ரையும் ஒக்­டோபர்19 ஆம் திகதி சஸ்பெண்ட் செய்து உத்­த­ர­விட்டார் பொலிஸ் கமி­ஷனர்.

இதன் பிறகு நடை­பெற்ற விசா­ர­ணையில் சுகாஷ் உட்­பட பொலி­ஸா­ர் அனை­வரும் ஸ்டார் ஹோட்­டலில் தங்கியதும் சுகாஷ் தனது காதலி லீனாவுடன் பெங்களூரு மோலில் ஷொப்பிங் செய்தது உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததும் தனது தொழில் பார்ட்னர்களுடன் பேசியதும் நிரூபணமானது.

இதன் தொடர்ச்சியாக சப் இன்பெக்டர் ராஜேஷ் உட்பட 7 பேரையும் பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் டெல்லி பொலிஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்.

தகவல்கள்: ஷண்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News