ilakkiyainfo

ilakkiyainfo

துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்

துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்
May 12
15:16 2018

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளார் என்பதுடன், விபத்துடன் தொடர்புடைய காதலனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் எம்.பீ.அன்பார்,  இன்று (12) உத்தரவிட்டார்.

வவுனியா, கிடாச்சூரி பகுதியைச் சேர்ந்த தெய்வலோகசிங்கம் விதூசிகா (17 வயது) என்ற இளம் யுவதியே, சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைதீவு, அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

accident-a துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல் accident a1

குறித்த இளைஞனும் யுவதியும் காதலித்து  வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டாருக்குத் தெரியாமல் இளைஞனின் வீட்டுக்கு யுவதி வந்துள்ளார்.

எனினும், முல்லைதீவு பொலிஸ் நிலையத்தில் வைத்து  யுவதி வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மீண்டும் இளைஞனைப் பிரித்து, சம்பூர் பகுதியிலுள்ள தனது உறவினர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து, மேற்படி யுவதி, காதலனுக்கு  தான் சம்பூரில் இருப்பதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காதலனான பிரபாகரன்,  சம்பூர் பகுதிக்குச் சென்று, மோட்டார் சைக்கிளில் காதலியை ஏற்றி வந்த வேளை, யுவதியின் உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த காதலர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன்  மோதி விபத்துக்குள்ளானதில் காதலி உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் யுவதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :  தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி  அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக் கொன்ற சிவராசா  “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News