ilakkiyainfo

ilakkiyainfo

துருக்கி இரவு விடுதி தாக்குதாரி அடையாளம் காணப்பட்டார் : இஸ்தான்புலில் தாக்குதலில் CCTVயில் பதிவான கொலையாளி! – (வீடியோ)

துருக்கி இரவு விடுதி தாக்குதாரி அடையாளம் காணப்பட்டார் :  இஸ்தான்புலில் தாக்குதலில் CCTVயில் பதிவான கொலையாளி! – (வீடியோ)
January 03
21:58 2017

துருக்கியிலுள்ள இரவு விடுதியில் தாக்குதல் நடத்திய ஆயுததாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரை தேடிக் கண்டறியும் ரோந்து நடவடிக்கையை இஸ்தான்புலின் பல பகுதிகளில் துருக்கிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆயுததாரியின் கைரோகைகள் மற்றும் அடிப்படை முக அமைப்புக்கள் குறித்த தகவல்கள் அதிகாரிகளிடம் உள்ளதாக துருக்கியின் பிரதிப் பிரதமர் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கியிலுள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் பலியாகியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் ஆயுததாரிகள் உரிமை கோரியிருந்தனர்.

thuruki  துருக்கி இரவு விடுதி தாக்குதாரி அடையாளம் காணப்பட்டார் :  இஸ்தான்புலில் தாக்குதலில் CCTVயில் பதிவான கொலையாளி! – (வீடியோ) thuruki
பயங்கரவாதியை கண்டறிவது மாத்திரமல்லாது விடுதி மீதான தாக்குதலில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் அடையாளம் காண முடியும் என துருக்கியின் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இஸ்தான்புல்லில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக துருக்கி பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

index  துருக்கி இரவு விடுதி தாக்குதாரி அடையாளம் காணப்பட்டார் :  இஸ்தான்புலில் தாக்குதலில் CCTVயில் பதிவான கொலையாளி! – (வீடியோ) index5
அத்துடன் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து ஹொலிகொப்டரின் ஒத்துழைப்புடன் விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை வீடொன்றில் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் தாக்குதல்தாரி கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் தாக்குதலில் CCTVயில் பதிவான கொலையாளி! – (வீடியோ)

police-500x500-1-e1483466929634  துருக்கி இரவு விடுதி தாக்குதாரி அடையாளம் காணப்பட்டார் :  இஸ்தான்புலில் தாக்குதலில் CCTVயில் பதிவான கொலையாளி! – (வீடியோ) Police  1 e1483466929634

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள பிரபல இரவு நேர விடுதியில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக 600-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தினர்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய போலீசார் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக கொலையாளியை அடையாளம் காண, தாக்குதலின் போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

அதில், தாக்குதல் நடத்திய நபர் கையில் துப்பாக்கியுடன் இரவு விடுதிக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருக்கிறது.

வீடியோவில் பதிவாகியிருக்கும் கொலையாளியின் உருவத்தை அடிப்படையாக கொண்டு அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக ஐ.எஸ். அமைப்பு நேற்று அறிவித்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Latest Comments

நாட்டிற்கு மிகவும் தேவையான விடயம். இதில் பெற்ற அறிவு -"சொந்த வீட்டில திருகுதாளங்கள் செய்ய வேண்டாம்" [...]

சீன ஆசியாவின் பாதுகாவலன் , அவர்களுக்கு இத்தகைய ஆயுதம் அவசியம், ஆனால் கக்கூசு புகழ் நாடு ஆசியாவின் துரோகி, அமெரிக்காவுக்கு [...]

This news good [...]

awesome dance [...]

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

இலங்கை பத்திரிகைகள்

English News