ilakkiyainfo

ilakkiyainfo

தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? – சுவாரஸ்ய தகவல்கள்

தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? – சுவாரஸ்ய தகவல்கள்
February 04
18:28 2018

1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பிபிசி செய்தியாளரின் கள அனுபவம்

எல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தென் கொரியாவின் எல்லைப்பகுதியில் இருக்கும் கடைசி கிராமத்தில் காலை பத்தரை மணிக்கும் மயான அமைதி நிலவுகிறது. எப்போதாவது ஒருசில வாகனம் மட்டுமே கடக்கும் எல்லை கிராமம் யோங்காம்…

யோங்காம் கிராமத்தை அடுத்து வட மற்றும் தென் கொரியாவின் ‘ராணுவ கண்காணிப்பு இல்லாத பகுதி’ தொடங்குகிறது.

இந்தப் பகுதியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

99687630_img_9778-1 தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் 99687630 img 9778 1யாங்காம் ரி கிராமத்தை சேர்ந்த லீ சுன் ஜா

யோங்காம் கிராமத்தில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதான பெண்கள் உணவுமேசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலவிதமான உலர் மீன்கள், கருவாடு வகைகள், அரிசி, கிம்சி சலாட், கொரியாவின் தேசிய பானமான ‘சோஜு’ ஆகியவை உணவு மேசையில் தயாராக உள்ளது.

இந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், கொரிய தீபகற்பம் துண்டாடப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்தபோது நடைபெற்ற வலி மிகுந்த வன்செயல்களின் நேரடி சாட்சிகள்.

பங்காளி, பகையாளியானபோது நடைபெற்ற கொடுமைகளை கண்ணாற கண்டவர்களின் முகங்களில் அந்த வேதனையும், வலியும் உறைந்து போயிருக்கிறது.

90 வயதான லீ சுன் ஜா என்பவர், 1950களின் இந்த கிராமத்தில் நடைபெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர்களில் ஒருவர்.

99687631_img_9777-1 தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் 99687631 img 9777 1கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான முதியோர்கள் அந்த கொடுமைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்பவில்லை.

மீண்டும் யுத்தம் மூளுமோ என்று அச்சம்

“என் கணவர் இப்போது உயிருடன் இல்லை. என் பிள்ளைகளும் பெரியவர்களாகிவிட்டார்கள். வெவ்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். கடந்த சில ஆண்டுகளில் பதற்றம் அதிகரித்துவிட்டது.

ஆனால், நான் சொந்த இடத்தைவிட்டு வெளியேறுவதாக இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சண்டை வரக்கூடாது என்று விரும்பினாலும், சண்டை மூண்டு விடுமோ என்று அச்சமும் மனதை வாட்டுகிறது”.

இந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோரில் எங்களிடம் பேச தயாராக இருந்தது லீ சுன் ஜா மட்டும்தான் என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

மற்றவர்கள் வட கொரியா என்றாலே வாயை அழுந்த மூடிக்கொள்கின்றனர். ஏனெனில் இங்கிருப்பவர்களின் உறவினர்கள் பலர் வடகொரியாவில் வசிக்கின்றனர். தங்கள் சாதாரணமாக சொல்லும் கருத்து அங்கிருப்பவர்களை பாதிக்குமோ என்ற அச்சமே அதற்கு காரணம்.

ஆனால் லி சுன் ஜாவுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகள் செய்து வருவது பற்றிய எந்தவித தகவல்களும் தெரியவில்லை.

கிம்மை பற்றி அதிகம் பேசுவதில்லை

லீ சுன் ஜா சொல்கிறார், “நான் தொலைகாட்சி பார்க்கிறேன், ஆனால் கிம் பற்றி அதிகமான தகவல்கள் எதுவும் வெளியாவதில்லை. பொதுவாகவே வட கொரியா சண்டையை விரும்பும் நாடு என்பதுதான் கவலையளிக்கிறது”

99687629_img_9765-1 தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் 99687629 img 9765 1வட கொரிய எல்லைப் பகுதியில் ஒரு கிராமத்தில் பூமிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள ‘அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத’ பதுங்குக்குழி

யோங்காம் ரி போன்ற டஜன் கணக்கான கிராமங்கள் வட கொரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.

எல்லையோர கிராமங்களில் பெரிய அளவிலான பதுங்குக்குழிகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றை அணு ஆயுதங்களோ, ரசாயன ஆயுதங்களோ தாக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதாவது எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மிகுந்த பிரயத்தனங்களுக்குப் பிறகு ஒரு பதுங்குக்குழியை பார்வையிட அனுமதி கிடைத்தது.

99687633_img_9749-1 தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் 99687633 img 9749 1உறையச் செய்யும் பனிக்காற்று

பதுங்குக்குழிகளில் இருக்கும் சுவர்கள் நான்கு அடிக்கும் அதிகமான தடிமனில் இரும்பு மற்றும் காங்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலத்தடி பதுங்குக்குழிகளில் வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஜெனரேட்டர்கள் எதுவும் கிடையாது.

பெரிய அளவிலான குளிர்சாதனப் பெட்டிகளில் மூன்று மாதங்களுக்கு போதுமான உணவு பொருட்கள், கம்பளி மற்றும் யுத்த சமயத்தில் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள பேட்டரியால் இயங்கும் சிற்றலை வானொலியும் பொருத்தப்பட்டுள்ளன.

எல்லையோர கிராமங்களில் டிஜிட்டல் திரை மற்றும் எச்சரிக்கை செய்வதற்காக மாபெரும் ஒலிபெருக்கி எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு செல்லும் வழியில் காங்கிரீட் கட்டமைப்புகளை வெடிகுண்டால் தகர்த்து பாதையை மூடச்செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

தென்கொரிய தலைநகரில் இருந்து நான்கு மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் இந்த பகுதியை சென்றடைய வேண்டுமானால் பனிக்காற்று, முடிவே இல்லையோ என்று தோன்றச் செய்யும் நீண்ட சுரங்கங்கள், -10 டிகிரிக்கும் குறைவான வெப்பம் என்ற பல இடர்பாடுகளை கடக்கவேண்டும்.

97431163_gettyimages-663590246 தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் 97431163 gettyimages 663590246ஃபோல் ஈகிள் பயிற்சியில், கடற்கரையிலிருந்து தாக்குதல் நடத்துவது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்க வீரர்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம்.

97866395_korea_military_balance_624_v2.png தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? - சுவாரஸ்ய தகவல்கள் 97866395 korea military balance 624 v2வடகொரியா மற்றும் தென்கொரியா ராணுவத்தின் வலிமையை காட்டும் அட்டவணை

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தென்கொரிய ராணுவ வீர்ர்கள் எல்லைப் பகுதியில் இரவு பகலாக காவல் காக்கின்றனர்.

எதிர்தரப்பில் வடகொரிய பீரங்கி முனைகள் தென்கொரியாவை நோக்கி இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

பீரங்கி முனைகள் தங்களை குறிவைப்பதை அறிந்திருந்தாலும் தென்கொரிய வீரர்கள் ஓர் அங்குலம்கூட அசையாமல் எல்லையை காவல் காக்கின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான  ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்  எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News