ilakkiyainfo

ilakkiyainfo

தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி

தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி
December 09
21:06 2019

கடந்த பத்து நாட்களாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வருகின்றது.

காத்மண்டுவில் அமைந்துள்ள தசாரத் விளையாட்டரங்களில் போட்டி நிறைவு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரலாறு படைத்த கபடி அணி

தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை ஆண்கள் கபடி அணியானது முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது.

மறுமுனையில் கபடிப் போட்டியில் பலம்பொருந்திய அணியான இந்தியா இறுதிக்கு நுழைந்திருந்தது. இவ்விரு அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 28-11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்செல்ல தோல்வியடைந்த இலங்கை அணிக்கோ வெள்ளிப் பதக்கம் சொந்தமானது.

797f8-15755247923409-800 தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி 797f8 15755247923409 800 e1575925383511இதன் மூலம் தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதன்முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியது இலங்கை அணி.

கிரிக்கெட்டில் தங்கத்தை தவறவிட்ட இலங்கை ஆடவர் அணி

தெற்காசிய விளையாட்டு விழாவில் இம்முறை இணைக்கப்பட்ட இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இன்று பலப்பரீட்சை நடத்தின.

இதில் பங்களாதேஷ் அணி 7 விக்கொட்டுக்களால் வெற்றிபெற்று தங்கப்பதக்கதை தட்டிச்சென்றது.

சாதனையை தவறவிட்ட மெத்தியூ அபேசிங்க

இலங்கையின் நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்க இன்று மூன்று தங்கப்பதக்கங்களை வென்று மொத்தமாக 13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 7 தங்கப்பதக்கங்களை வென்றெடுத்தார்.

இதன் மூலம் நடப்பு தெற்காசிய விளையாட்டு விழாவில் ஒரு வீரர் அதிகூடிய பதக்கங்கள் வென்றவராக மெத்தியூ விளங்குகிறார்.

Image__2_ தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி Image  2  e1575925551951இன்று நடைபெற்ற 100 மீற்றர் பிரீ ஸ்டைல் பிரிவிலும், 200 மீற்றர் மெடலி பிரிவிலுமே 50 மீற்றர் பட்டர்ப்லை பிரிவிலும் மெத்தியூ மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார்.

ஏற்கனவே 4 தங்கப்பதக்கங்களை  வென்றிருந்த மெத்தியூவின் தங்க எண்ணிக்கை இதன் மூலம் ஏழானது.

கடந்த முறை அசாமில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் மெத்தியூ 7 தங்கப்பதக்களையும் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News