ilakkiyainfo

ilakkiyainfo

தேர்தலுக்கான அரசியல் பி.மாணிக்­க­வா­சகம்

தேர்தலுக்கான அரசியல்  பி.மாணிக்­க­வா­சகம்
February 10
21:16 2019

நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள் ஒன்­றுக்­கொன்று நேர் முர­ணான அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள நிலையில் தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­கின்ற முயற்­சிகள் குறித்தும் பேசப்­ப­டு­கின்­றது. தேர்­தல்கள் வரி­சை­யாகத் தெருமுனையில் எட்­டிப்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் இந்த முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த முயற்­சியின் மூலம் தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்கி கால­தா­ம­த­மின்றி, இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண முடியும் என்­ப­தற்­காக தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு முனைந்­தி­ருக்­கின்­றது. நாட்டில் இது ஒரு வேடிக்­கை­யான அர­சியல் நிலை­மை­யாகப் பரி­ண­மித்­தி­ருக்­கின்­றது.

நாட்டின் 71 ஆவது சுதந்­திர தினத்­தின்­போது அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை­யா­னது, அர­சாங்­கத்தின் பிர­க­டன உரை என்ற கருத்­தி­ய­லி­லேயே நோக்க வேண்டும்.

சுதந்­திரம் என்­பது நாடு முழு­வ­துக்­கு­மான ஒன்று. நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் அது சொந்­த­மா­ன­தாக இருக்க வேண்டும். அப்­போ­துதான் அது சுதந்­திர தின­மாகப் பொது நிலையில் வைத்து கணிக்­கப்­படும். இலங்­கையைப் பொறுத்­த­மட்டில், இந்த 71 ஆவது சுதந்­திர தினம் உண்­மை­யி­லேயே அனைத்து மக்­க­ளுக்கும் உரித்­தா­னதா என்ற வினா விஸ்­வ­ரூபம் எடுத்து நிற்­கின்­றது.

இது ஒரு­பக்கமிருக்க, இந்த சுதந்­திர தினத்­தன்று ஆற்­றப்­பட்ட அர­சாங்­கத்தின் கொள்கை நிலைப்­பாட்டு பிர­க­ட­னத்தை வெளிப்­ப­டுத்­து­கின்ற அந்த உரையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேசிய அர­சாங்கம் அமைப்­பதை அனு­ம­திக்க மாட்டேன் என்று கர்ச்­சித்­தி­ருக்­கின்றார்.

நிறை­வேற்று அதி­கார பலத்தைக் கொண்­ட­வ­ராகத் திகழ்­கின்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேசி­யத்தை நோக்­கிய ஒரு நகர்வில் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு தலைவர் என்­பதை எல்­லோரும் அறி­வார்கள். அத்­த­கை­யதோர் அர­சியல் தலை­வ­ரி­ட­மி­ருந்­துதான் தேசிய அர­சாங்கம் அமைப்­பதை அனு­ம­திக்க முடி­யாது என்ற கருத்து வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி என்ற கூரிய வாளை ஒத்த, மிகுந்த அர­சியல் அதி­கார பலத்­தோடு திகழ்ந்த, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ என்ற ஓர் இரும்பு அர­சி­யல்­வா­தியைத் தோற்­க­டித்து, அவ­ரிடம் இருந்து அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காகப் பொது வேட்­பா­ள­ராகத் தெரி­வா­கி­ய­வரே மைத்­தி­ரி­பால சிறி­சேன.—

அந்த பொது வேட்­பா­ளரை பெரும்­பான்மை இன மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களும் சிறு­பான்­மை­யின மக்­க­ளா­கிய தமிழ்,—– முஸ்லிம் மக்­களும் இணைந்து ஆத­ரித்­தி­ருந்­தார்கள். அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யி­ருந்த ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்து நாட்டில் அமை­தி­யையும் சுபீட்­சத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்குத் தடை­யாக இருக்­கின்ற பிரச்­சி­னை­களைத் தீர்த்து நல்­லாட்சி ஒன்றை நிறு­வு­வ­தற்­கா­கவே மக்கள் இந்த ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றிபெறு­வ­தற்­காக, ஜனா­தி­பதி பத­வியில் கொண்­டி­ருந்த நிறை­வேற்று அதி­கார பலத்தை, அப்­பொ­ழுது மஹிந்த ராஜ­பக் ஷ பகி­ரங்­க­மா­கவே வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வையே சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ், முஸ்லிம் மக்கள் ஆத­ரித்து வாக்­க­ளிக்க வேண்டும் என்­ப­தற்­காக ஆயுதந் தரித்த இரா­ணு­வத்­தினர் பகி­ரங்­க­மா­கவே தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

தேர்தல் என்­பது ஜன­நா­ய­கத்தின் ஆணிவேர். இணக்­கப்­பாட்­டையும் விட்டுக்கொடுப்­பையும் அடிப்­ப­டை­யாகக் கொண்ட, ஒரு விருப்பத் தேர்வு நடை­மு­றை­யாகும். அது சாத்­வீ­க­மா­னது. ஆனால் ஆயு­தந்­த­ரித்த இரா­ணுவம் என்­பது, அதற்கு நேர்­மா­றா­னது. அது, அதி­கா­ரத்தைப் பலத்­துடன் பிர­யோ­கிக்­கின்ற வன்­மு­றையின் முழு வடிவம்.

அதுவும் முப்­பது வரு­ட­கால யுத்தம் ஒன்று அதி­யுச்ச ஆயுதப் பலப்­பி­ர­யோ­கத்தின் மூலம் முடி­வுக்குக் கொண்டுவரப்­பட்ட பின்­ன­ணியில், பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கும் உள்­ளாகி நசிந்து நொந்து போயி­ருந்த மக்­களை இரா­ணு­வத்­தினர் முற்­று­கை­யிட்­டி­ருந்த நேரம் அது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இத்­த­கைய ஓர் அர­சியல் சூழ­லில்தான் சிறு­பான்மை இன மக்கள் சர்­வா­தி­காரப் போக்கைக் கொண்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை எதிர்த்து வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். அந்த நேரம் அந்த மக்கள் கொண்­டி­ருந்த துணிவு என்­பது அபா­ர­மா­னது. ஏனெனில் அன்­றைய சூழல், அவரை எதிர்த்து வாக்­க­ளிப்­பது குறித்து, எவ­ருமே கற்­பனை செய்­வ­தற்குக் கூட அச்­ச­ம­டை­கின்ற நிலை­மை­யாக இருந்­தது.

ஜன­நா­யகம் காப்­பாற்­றப்­ப­டு­கின்­றதா?

அத்­த­கைய சூழலில் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காகப் பொது வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அந்த முயற்­சி­யா­னது தற்­கொ­லைக்கு ஒப்­பா­னதுஇஇமிகவும் ஆபத்­தா­னது என்­பதை நன்கு புரிந்து கொண்­டி­ருந்தார்.

ஆனால் மக்கள் தமது துணி­க­ர­மான வாக்­களிப்பின் மூலம், அவரை வெற்றி பெறச் செய்­தி­ருந்­தார்கள். தேர்தல் முடி­வுற்­றதன் பின்னர், அந்த நிலைமை குறித்து நினை­வு­கூர்ந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேர்­தலில் தான் தோல்வி அடைந்­தி­ருந்தால், ஆறடி மண்­ணுக்குள் சங்­க­ம­மாக்­கப்­பட்­டி­ருப்பேன் என்று தன் வாயா­லேயே பகி­ரங்­க­மாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்தத் தேர்­தலில் பத­வியில் இருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை எதிர்த்து பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்குவது யார் என்­பது, அப்­போது நில­விய உயி­ரா­பத்­தான நிலைமை கார­ண­மாக இறுதி நேரம் வரை­யிலும் மிகவும் இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதி­கா­ரத்தின் அதி உச்­சத்தில் எதையும் செய்­கின்ற செயல் வல்­லமை உடை­ய­வ­ராகத் தன்னைக் காட்­டி­யி­ருந்த ஒரு­வ­ருக்கு எதி­ராகத் தேர்­தலில் ஒருவர் பொது வேட்­பா­ள­ராகப் பகி­ரங்­க­மாகக் கள­மி­றங்­கி­யி­ருந்தால், அவர் தேர்­தலை எதிர்­கொண்­டி­ருக்க மாட்டார் என்ற சந்­தேகம் நில­விய நேரம் அது.

அத்­த­கைய ஒரு சூழலில் ஜன­நா­ய­கத்­திற்கு உயிர் கொடுப்­ப­தற்­காகப் பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்கி வெற்­றி­யீட்­டி­ய­வரே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. அவர்தான், நாட்டு மக்­க­ளுக்­கான 71 ஆவது சுதந்­திர தின கொள்கைப் பிர­க­டன உரையில் தேசிய அர­சாங்கம் உரு­வா­கு­வதை அனு­ம­திக்க மாட்டேன் என்று கர்­ஜனை செய்­துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்­டோபர் 26 ஆம் திகதி நாட்டின் அர­சாங்­கத்­தையே புரட்டிப் போடு­வ­தற்­கான நட­வ­டிக்­கையை அதி­ர­டி­யாக மேற்­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இருந்து அத்­த­கைய எதிர்ப்­பு­தானே வெளிப்­படும்?

இருந்­தாலும், யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண வேண்­டிய பொறுப்­பையும், மிக மோச­மாக வீழ்ச்சி கண்­டுள்ள பொரு­ளா­தார நிலை­மையை சீர்செய்து, நாட்டை நேர்­வ­ழியில் கொண்டு செல்ல வேண்­டிய கடப்­பாட்­டையும் கொண்­டுள்ள நாட்டின் அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து இத்­த­கைய நிலைப்­பாடு வெளிப்­பட்­டி­ருக்கக் கூடாது. ஆனால் அந்தப் பிர­க­டனம் வெளிப்­பட்­டு­விட்­டது. உண்­மையில், எந்த அள­வுக்கு அர­சியல் நிலைமை மோச­மா­கி­யி­ருக்­கின்­றது என்­பதை அது காட்­டி­யி­ருக்­கின்­றது. இது கவ­லைக்­கு­ரி­யது.

அதி­கார பலத்தைப் பிர­யோ­கித்து, நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­வி­தி­களைப் புறந்­தள்ளி, எதையும் செய்ய முடியும் என்­பதை அக்­டோபர் 26 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன காட்­டி­யி­ருந்தார். ஜன­நா­ய­கத்தைக் கட்­டிக்­காப்­ப­தற்­காகத் தேர்தலில் மக்­க­ளு­டைய ஆத­ரவைப் பெற்ற ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த அவர்தான், பத­வியில் இருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை திடீ­ரென பதவி நீக்கம் செய்து தங்­க­ளது அர­சியல் விரோ­தி­யாகத் திகழ்ந்த மஹிந்த ராஜ­பக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­தி­ருந்தார். அவர்தான் இப்­போது தேசிய அர­சாங்கம் உரு­வா­கு­வதை அனு­ம­திக்க மாட்டேன் என்று பிடி­வா­த­மாகக் கருத்­து­ரைத்­தி­ருக்­கின்றார். இதுதான், ஜன­நா­ய­கத்தைக் காப்­பாற்­று­கின்ற நட­வ­டிக்­கையோ? இதுதான் ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்­து­கின்ற இலட்­ச­ணமோ?

mave  தேர்தலுக்கான அரசியல்  பி.மாணிக்­க­வா­சகம் maveஎதிர்­க்கட்சித் தலை­வ­ரு­டைய நிலைமை

அக்­டோபர் 26 ஆம் திக­திய திடீர் அர­சியல் மாற்­றத்­தின்­போது திடீர் பிர­த­ம­ராக நிய­மனம் பெற்று, 52 நாட்­க­ளாக பிர­த­ம­ரு­டைய அலு­வ­ல­கத்­தையே எட்­டிப்­பார்க்­காத ஒரு பிர­த­ம­ராகத் திகழ்ந்து பின்னர், எதிர்க்­கட்சித் தலை­வ­ராகப் பத­வி­யேற்­றுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ மறு­பு­றத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண்­ப­தற்­கான வழி­வ­கை­களைக் கொண்­டி­ருக்கும் என்ற கூறப்­ப­டு­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டேன் என்று தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

மஹிந்த ராஜ­பக் ஷவின் இந்த நிலைப்­பாட்டை சந்­தர்ப்­ப­வாத அர­சியல் நிலைப்­பாட்­டிற்­காகத் தெரி­விக்­கப்­பட்ட ஒரு சாதா­ரண அர­சியல் கூற்­றாகக் கொள்ள முடி­யாது. ஏனென்றால், ஊட­கங்­களின் பிர­தா­னிகள் மற்றும் ஆசி­ரி­யர்­க­ளுடன் வலிந்து நடத்­திய ஒரு சந்­திப்பில்இஇ – ஓர் ஊடக மாநாட்டில் இதனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். இது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­யது முக்­கியம்.

பிர­தான கட்­சிகள் இரண்டும் ஒன்­றி­ணைந்து 2015 ஆம் ஆண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே தேசிய அர­சாங்கம் அல்­லது நல்­லாட்சி அர­சாங்கம் என்று அழைக்­கப்­ப­டு­கின்ற அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. அந்த அர­சாங்­கத்­தையே குட்­டிச்­சு­வ­ராக்கி நாட்டில் அர­சாங்­கமே இல்­லாத ஒரு நிலை­மையை உரு­வாக்­கிய பெருமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே சேரும். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, 52 நாட்கள் இந்த நிலைமை நீடித்­தி­ருந்­தது. நீதி­மன்­றத்தின் தலை­யீட்டின் பின்­னரே இந்த அவல நிலையில் இருந்து நாடு மீட்சி பெற்­றது.

இத்­த­கை­யதோர் அர­சியல் நிலை­மையின் பின்­ன­ணி­யில்தான் எதிர்க்­கட்சித் தலை­வ­ராகப் பதவி ஏற்­றுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். அது சாத்­தி­ய­மற்­றது என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். அது மட்­டு­மல்­லாமல், அந்த முயற்­சி­யா­னது தேர்­தலை நோக்­கிய ஒரு நட­வ­டிக்கை என்­பது அவ­ரு­டைய நிலைப்­பாடு. தேர்­தலில் தனக்கு பெரும்­பான்மை பலம் கிடைக்கும். அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யதும் அர­சியல் தீர்வு காண தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்கள் நடத்­தப்­படும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

யுத்தம் முடி­வ­டைந்­ததும், அர­சியல் தீர்வு காணப்­பட்­டி­ருக்க வேண்டும். அதற்­கான முயற்­சி­க­ளின்­போது தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைக்­க­வில்லை என்று அவர் கூட்­ட­மைப்பின் மீது குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்றார். அர­சியல் தீர்­வுக்­காக 18 சுற்­று பேச்­சுக்கள் அவ­ரு­டைய ஆட்­சியில் கூட்­ட­மைப்­புடன் நடத்­தப்­பட்­டன. அந்தப் பேச்­சு­வார்த்­தை­களின் போது எட்­டப்­பட்ட சில முடி­வு­களை அரசு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. வேண்­டு­மென்றே அவற்றை உதா­சீனம் செய்­தது.

அத்­த­கைய ஒரு நிலை­யிலும் பேச்­சு­வார்த்­தை­களைக் குழப்பி தாங்கள் அதில் இருந்து வெளி­யேறக் கூடாது. அவ்­வாறு வெளி­யே­றினால் அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியை தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பே குழப்­பி­ய­டித்து நாச­மாக்­கி­யது என்ற அவப்­பெயர் ஏற்­படும் என்­ப­தற்­காக பொறுமை காத்து அந்தப் பேச்­சு­வார்த்­தை­களில் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் கலந்துகொண்­டி­ருந்­தனர். ஆனால் அரச தரப்­பினர் கூட்­ட­மைப்புத் தலை­வர்கள் பொறுமை இழந்து பேச்­சு­வார்த்தை மேசையை விட்டு எழுந்து செல்ல வேண்டும் என்ற தந்­தி­ரோ­பாய நோக்­கத்தில் பேச்­சு­வார்த்­தை­களின் போது நடந்து கொண்­டி­ருந்­தார்கள்.

பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­கான நாட்­களில் அரச தரப்­பினர் வருகை தரு­வதில் இருந்து பிரச்­சி­னை­களை விவா­தித்து முடிவு காண்­பது வரையில் ஒத்­து­ழை­யாத ஒரு போக்­கையே கடைப்­பி­டித்­தி­ருந்­தனர். ஆனால் கூட்­ட­மைப்­பினர் இறுதி வரையில் அந்தப் பேச்­சுக்­களில் விடாப்­பி­டி­யாகக் கலந்துகொண்­டி­ருந்­தார்கள். அது மட்­டு­மல்­லாமல் இறுதிச்சுற்றுப் பேச்­சு­வார்த்தை தினத்­தன்று அரச தரப்­பினர் வருகை தரு­வ­தற்குத் தாம­தித்து நேரத்தை இழுத்­த­டித்­தி­ருந்த போதிலும், கூட்­ட­மைப்­பினர் அசாத்­திய பொறு­மை­யுடன் அவர்­க­ளுக்­காக நீண்ட நேரம் காத்­தி­ருந்­ததன் பின்பே வெளி­யே­றி­யி­ருந்­தனர். அத்­துடன் அந்தப் பேச்­சு­வார்த்­தையை அர­சாங்­கமே முடித்துக் கொண்­டது.

அந்­தப்­ பேச்­சு­வார்த்­தையில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் கூடிய கவனம் செலுத்­த­ுவதைத் தவிர்த்து, பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் மூலம் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணலாம் என்று திசை திருப்­பு­கின்ற நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு கூட்­ட­மைப்­பினர் அந்தக் குழுவில் இடம்­பெற வேண்டும் என்று அரச தரப்­பினர் வலி­யு­றுத்­தினர். அதற்குக் கூட்­ட­மைப்­பினர் இணங்­க­வில்லை. இந்த நிலை­யில்தான் அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் இடை நடுவில் பல­னே­து­மின்றி, முற்றுப் பெற்­றி­ருந்­தன.

முழு பூச­ணிக்­காயை மறைக்கும் முயற்சி..?

ஆனால், இப்­போது கருத்து வெளி­யிட்­டுள்ள மஹிந்த ராஜ­பக் ஷஇஇ அந்த நேரம் கூட்­ட­மைப்­பினர் ஒத்­து­ழைக்­காத கார­ணத்­தி­னா­லேயே அர­சியல் தீர்வு காண முடி­யாமல் போனது என்று அப்­பட்­ட­மாக உண்­மைக்கு மாறான கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். இது முழுப் பூச­ணிக்­காயை சோற்றில் மறைக்­கின்ற முயற்­சி­யாகும். அத்­துடன், இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பதில் அவர் கொண்­டுள்ள முரண்­பா­டான நிலைப்­பாட்டின் வெளிப்­பாடும் ஆகும்.

அதே­போன்­ற­தொரு முரண்­பா­டான நிலைப்­பாட்­டையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கொண்­டி­ருக்­கின்றார். ஏனெனில், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது என்­பதும், அதன்மூலம் அர­சியல் தீர்வு காண்­பது என்­பதும் முக்­கிய நோக்­க­மாக இருந்­தது. அத­னால்தான், தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு ஆட்சி மாற்­றத்­திற்கு ஒத்­து­ழைப்­ப­தற்கு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது. இது நிபந்­த­னை­க­ளற்ற ஆத­ரவு என்­பதைத் தெரி­வித்து. கடந்த நான்கு வரு­டங்­க­ளாக அதனைத் தீவி­ர­மாகக் கடைப்­பி­டித்து வந்­துள்­ளது.

ஆனால் இந்த நான்கு வரு­டங்­க­ளிலும் அர­சாங்கம் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான உளப்­பூர்­வ­மான முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்லை.

மறு­பக்­கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு சாத­க­மான அர­சியல் நிலை­மைகள் நில­வி­ய­போது, நல்­லாட்சி அர­சாங்­கத்தை வழிக்குக் கொண்டு வந்து அல்­லது அதற்கு உரிய முறையில் மென்­வ­ழியில் அழுத்­தத்தைப் பிர­யோ­கித்து, தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்­டி­ருக்க வேண்டும். அத்­துடன் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கை­க­ளையும் கூட்­ட­மைப்பு மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லமும், அர­சாங்­கத்தின் பத­விக்­கா­லமும் முடிவை நெருங்­கு­கின்ற சந்­தர்ப்­பத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்கும், அர­சியல் தீர்வு காண்­ப­தற்கும் மேற்­கொள்­கின்ற முயற்­சிகள் எந்த அள­வுக்குப் பல­ன­ளிக்க முடியும் என்­பது கேள்­விக்­கு­ரி­யது.

வலு­வான பெரும்­பான்மை பல­முள்ள அர­சாங்­கத்­தி­னால்தான் அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கவும், அதன் ஊடாக அர­சியல் தீர்வு காணவும் முடியும். அதற்கு அவ­சி­ய­மான அர­சியல் ஸ்திரத்­தன்மை இப்­போது நாட்டில் இல்லை. அதற்கு அவ­சி­ய­மான பெரும்­பான்மை பலமும் அர­சாங்­கத்­திடம் இல்லை. அது மட்­டு­மல்­லாமல், ஐக்­கிய தேசிய கட்­சியின் தனிக்­கட்சி அர­சாங்­கமே இப்­பொது பத­வியில் இருக்­கின்­றது. அதுவும் இறுக்­க­மான அர­சியல் கருத்து நிலைப்­பாட்டின் விளை­வாக – அர­சியல் நோக்க நிலைப்­பாட்டின் விளை­வாக ஏற்­பட்ட ஒரு மோச­மான அர­சியல் குழப்­பத்தின் பின்னர் ஏற்­பட்­டுள்ள ஓர் அர­சியல் நிலை­மையில் இத்­த­கைய பாரிய அர­சியல் முயற்சி சாத்­தி­யப்­பட முடி­யாது.

இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­தி­ருந்த போது முடி­யாத காரியம், இரண்டு கட்­சி­களும் ஏட்­டிக்குப் போட்­டி­யான அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள ஒரு சூழலில் வெற்­றி­ய­ளிக்கும் என்று கூறு­வ­தற்­கில்லை.

அதே­நேரம், ஆட்சி அதி­கா­ரத்தை அடுத்­த­தாக யார் கைப்­பற்­று­வது என்­பதில் தீவி­ர­மான அர­சியல் போட்டி மனப்­பாங்கும் நில­வு­கின்­றது. இதற்குத் தூபம் போடும் வகையில் மாகாண சபைக்­கான தேர்தல், ஜனா­தி­பதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று அடுத்­த­டுத்த தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான காலச் சூழலும் காணப்­ப­டு­கின்­றது.

இந்தத் தேர்­தல்­களில் எந்தத் தேர்­தலை முதலில் நடத்­த­வது என்­ப­து­பற்­றிய விவாதம் ஒரு பக்­கத்தில் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. எந்தத் தேர்­த­லா­னா­லும்­சரி, வரப்­போ­கின்ற தேர்­தலில் வெற்­றி­ய­டைந்­து­விட வேண்டும் என்­ப­தற்­கான மக்­களைக் கவர்ந்­தி­ழுப்­ப­தற்­கான அர­சாங்­கத்தின் வழ­மை­யான தேர்தல் கால நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

குறிப்­பாக கம்­ப­ரெ­லிய என்ற கிரா­மங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான வேலைத்­திட்டம் ஏற்­க­னவே ஆரம்­பித்­தா­கி­விட்­டது. இந்த அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மட்­டத்தில் 30 கோடி ரூபா நிதி­யொ­துக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கையும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது.

.இந்த அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதன் ஊடாக எப்­ப­டி­யா­வது ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற நோக்­கத்தில் அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் இந்த முயற்­சி­களை முறி­ய­டித்து, எப்­ப­டி­யா­வது மக்­க­ளு­டைய ஆத­ரவைத் தங்கள் பக்கம் திருப்­பி­விட வேண்டும் என்­பதில் மஹிந்த ராஜ­பக்ச ஒரு பக்­கத்­திலும் மற்ற பக்­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த முயற்­சி­களில் இன­வாத அர­சியல் பிர­சாரம் முதன்மை நிலையில் ஏற்­க­னவே தலை­தூக்கி இருப்­ப­தையும் காண முடி­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அபி­வி­ருத்தி அர­சி­யலின் மூலம் மக்­க­ளு­டைய ஆத­ரவைத் திரட்ட முயற்­சிக்­கின்றார். மஹிந்த ராஜ­பக்­சவும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் வேறு வேறாக இன­வாத அர­சியல் பிர­சாரம் உள்­ளிட்ட சிங்­கள மக்­களைக் கவர்­வ­தற்­கான தேர்தல் பிர­சார உத்­தி­களைக் கையாளத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர்.

இதற்­கி­டையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தேசிய அரசாங்க உருவாக்கம் என்ற போர்வையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீரவு காண்பதற்கான அரசியல் நகர்வை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேலோட்டமாகக் காட்டி காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கின்றது.

ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரித்துள்ள பொருளாதார அபிவிருத்தி என்ற தேர்தல் பிரசார வலைக்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஏற்கனவே சிக்கியிருக்கின்றது. அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் மக்களுடைய ஆதரவைத் திரட்டிவிட முடியும் என்ற அரசாங்கத்தின் எண்ணப்பாட்டுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணங்கிச் செல்கின்ற ஒரு போக்கு தெரிகின்றது.

அரசியல் தீர்வை முதன்மைப்படுத்தி உரிமை அரசியலுக்காகக் காய் நகர்த்தினாலும், அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி அரசியல் என்ற வேகமும் கவர்ச்சியும் நிறைந்த காய் நகர்த்தலுக்கு முன்னால் கூட்டமைப்பின் செயற்பாடுகள் வலிமை உடையதாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை.

ஆளாளுக்கொரு நிலைப்பாடு என்று தோன்றினாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் (கொழும்பு மற்றும் மலையகப் பிரதேசங்களில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளையும்கூட சேர்த்துக்கொள்ளலாம்) ஆகிய அனைத்துத் தரப்பினருமே, தேர்தல்களின் மூலம் எவ்வாறு மக்களுடைய செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் தீவிரம் காட்டுகின்ற அரசியல் சூழலே யதார்த்தமான அரசியல் நிலைப்பாடாகும்.

இந்த நிலையில் கொள்கைகளாக அல்லது கோட்பாடுகளாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள் ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு வேடிக்கையான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. இந்தப் பின்னணியில் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் காணப்படுகின்றார்கள். எனவே அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் நடவடிக்கைகள் உண்மையான நாட்டு மக்களின் ஈடேற்றத்திற்கான அரசியல் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனவா அல்லது மக்களை ஏமாற்றுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி இயல்பாகவே தடுக்க முடியாத நிலையில் எழுந்திருக்கின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News