ilakkiyainfo

ilakkiyainfo

தோனி டு கோலி வரை… ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?!

தோனி டு கோலி வரை… ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?!
March 31
10:54 2018

டெஸ்ட் மேட்ச்னா ஒயிட், ஒரு நாள் சர்வதேசப் போட்டினா ப்ளூ, IPL னா கலர்ஃபுல் ஆனா, யூனிஃபார்ம். மைதானத்துலதான் சீருடைனா, விளம்பர படங்கள்லயும் அதே ஜெர்ஸிதான் நம்ம கிரிக்கெட் ஹீரோக்களுக்கு காஸ்ட்யூம்.

ஆனால், ஸ்டைல் ஐகான்ஸ் சினிமாவுல மட்டுமில்லை, விளையாட்டிலும் இருக்கிறார்கள். அதிலும் அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட்டில்தான் டாப் ஐகான்ஸ் உள்ளனர்.

Cri48updated_17398  தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?! Cri48updated 17398வீரர்களின் ஸ்டைல்லை பின்பற்றும் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களின் டீப் ஃபேஷன் சென்ஸ் என்னவென்று. இப்போ நாமும் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமே! கிரவுண்ட விட்டு வெளில வந்து, நம்ம நாயகர்களின் அவுட்ஸ்டேண்டிங் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குனு பார்ப்போமா?

Cri38updated_17014  தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?! Cri38updated 17014
ஹார்திக் பாண்டியா :

கட்டுக்கோப்பான உடலமைப்பு, பிரைட் ஹேர்கலர்ஸ், விதவிதமான ஹேர்ஸ்டைல், வித்தியாசமான காஸ்ட்யூம், ரொம்பவே கூலான லுக். இதுதான் ஹார்திக் பாண்டியா. கைகளில் டாட்டூ, காதுகளில் கடுக்கன், கழுத்தில் கனமான செயினுடன் ட்ரெண்டி இளைஞர் பாண்டியா.

வெஸ்டர்ன் உடையில் மட்டுமல்ல, அவர்களின் கலாசார உடையிலும் புதுமையைப் புகுத்தி ஐகானாகவே மாறிவிட்டார் இவர்.

சாதாரண குர்த்தாதான் ஆனால், அவர் அதை உடுத்திக்கொள்ளும் விதம், வித்தியாசம். விளையாட்டில் மட்டுமல்ல, தன்னை மெருகேற்றிக்கொள்ள பல புதுமைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாண்டியா, ஃபேஷன் உலகிலும் ஆல்ரவுண்டர்தான்.

Cri39updated_17561  தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?! Cri39updated 17561
ரவீந்திர ஜடேஜா :

இப்போல்லாம் பசங்கள அடையாளம் கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டமாயிடுச்சு. காரணம், மீசை மற்றும் தாடிக்குள் முகம் புதைந்திருப்பதுதான்.

சமீப காலமாக அடர்த்தியான தாடி வைப்பது ஃபேஷனாகிவிட்டது. இதுல ஜடேஜா எக்ஸ்பர்ட்னு  சொல்லலாம். மீசை, தாடியை ட்ரிம் பண்ணறதுல இத்தனை வெரைட்டியானு பிரம்மிக்கிற அளவுக்கு ஏராளமான ஸ்டைல் இவர் அறிமுகப்படுத்தியது.

அடர்ந்த சுருட்டை முடியிலும் ஸ்டைலிஷ் ட்விஸ்ட் கொண்டு வந்தவர் ஜடேஜா. எந்த விழாக்காலமாக இருந்தாலும், இவர் தேர்ந்தெடுக்கும் ஆடைகள் சிம்பிளாக இருக்கும்.

ஆனாலும் இவரின் ஹேர் மற்றும் தாடி ஸ்டைலில் இரட்டை சதம் அடித்து விடுவார். தற்போதுள்ள இளைஞர்களின் தாடி மற்றும் சிகையலங்காரத்தின் ஃபேஷன் ஐகான் ஜடேஜா.

Cri40updated_17591  தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?! Cri40updated 17591
யுவராஜ் சிங் :

‘YWC Fashion’ எனும் தனது ஆடை அலங்கார பிராண்டின் அறிமுகத்தன்று நடந்த ஃபேஷன் ஷோவில், தன்னுடன், தன் சக வீரர்களையும் ராம்ப்பில் (Ramp) நடக்கவிட்டு அழகு பார்த்தவர் யுவராஜ் சிங்.

ஏற்கெனவே தன்னை மெருகேற்றிக்கொள்வதில் தனி கவனம் கொண்டிருந்த யுவி, ஃபேஷன் பிராண்டை உருவாக்கியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

கேஷுவல் உடை, சிறப்பு நிகழ்வுகளின் உடை, பார்ட்டி உடை என அனைத்துக்கும் யுவியின் சாய்ஸ், அல்ட்ரா மாடர்ன் வகைகள்தான். எப்போதும் , கூடவேயிருந்து ஆதரவளித்து வரும் யுவியின் மனைவியின் டிரஸ் செலெக்ஷனும் டாப் க்ளாஸ். பல தடைகளைத்தாண்டி வெற்றிப்பாதைகளை பதித்து வரும் இவர்கள் இருவருமே இண்டோவெஸ்டர்ன் ஃபேஷன் ஐகான்கள்.

Cri42updated_17550  தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?! Cri42updated 17550
சுரேஷ் ரெய்னா :

இந்தியாவின் ஹேர் ஜெல் விற்பனை சூடுப் பிடிக்க காரணம் ரெய்னாதான். அதெப்படி முடி நேரா ஸ்ட்ராங்கா நிக்குதுனு கூகுள்ல தேடல்கள் அதிகமானதற்கு முக்கியக் காரணம்.

மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான `ஹாக் (Hawk)’ எனும் ஹேர்ஸ்டைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, `சுரேஷ் ரெய்னா ஹாக்’ என்ற ட்ரேட்மார்க்கையும் பதித்துவிட்டார் இவர்.

தன் நிச்சயதார்த்த நாளன்று க்ரீம் மற்றும் சிவப்பு குர்த்தாவிலும், திருமண நாளன்று ஐவரி ஷெர்வானியிலும் மிளிர்ந்தார். ஹேர்ஸ்டைலுக்கு மட்டுமல்ல அவரின் கேஷுவல் ஸ்டைலுக்கும் ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்.

Cri44updated_17320  தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?! Cri44updated 17320
மகேந்திர சிங் தோனி : 

ஸ்டைல் ஐகானில் ரெய்னாவுக்கு டஃப் போட்டியாளர் தோனி. நீண்ட நேரான முடி, ஒரு காலத்தில் தோனியின் அடையாளம். இப்போதும், `ஓல்ட் தோனி ஹேர்ஸ்டைல்’ என்றுதான் பலரும் `லாங் ஹேர்ஸ்டைலுக்கு’ அடையாளம் காட்டுகின்றனர்.

அந்தளவுக்கு மனதில் பதிந்த தோற்றம் அது. அதனைத் தொடர்ந்து பல்வேறு விதமான ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸிங் ஸ்டைல் என கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஃபேஷனிலும் பல ரசிகர்களை வென்றார் தோனி.

விழா நாள்களில் உடுத்தும் ஷெர்வானி முதல் பயிற்சியின்போது உடுத்தும் சாதாரண ஜெர்ஸி வரை, தோனியின் பாணி தனி. கோட் சூட்களில் அதிகம் காணப்படும் கிரிக்கெட் தல தோனி, தற்போது நம்ம ஊரு தல போல `சால்ட் அண்ட் பெப்பர்’ சிம்பிள் ஹேர்ஸ்டைலில் காணப்படுகிறார்.

Cri46updated_17392  தோனி டு கோலி வரை... ஸ்டார் கிரிக்கெட்டர்களின் ஃபேஷன் சென்ஸ் எப்படி?! Cri46updated 17392
விராட் கோலி :

இந்திய பாரம்பர்ய உடைகளான ஷெர்வானி, குர்தா பைஜாமா, மேற்கத்திய உடைகளான ஜீன்ஸ், பேன்ட், ஷர்ட், டீ-ஷர்ட், ஸ்டைலிஷ் தாடி மற்றும் ஹேர்ஸ்டைல், ட்ரெண்டி டாட்டூ, கூலர்ஸ் அல்லது சாதாரணக் கண்ணாடி, வித்தியாசமான கைக்கடிகாரம், கண்களைப் பறிக்கும் ஸ்போர்ட்ஸ் ஷூஸ், இப்படி எல்லாவற்றிலும் ட்ரெண்ட் செட் செய்துகொண்டிருப்பவர் விராட் கோலி.

ஆடை, சிகையலங்காரம் எனத் தன்னை மெருகேற்றிக்கொள்வதில் இவர் எடுக்கும் முயற்சிகள்  அசர வைக்கும். தனக்கு எது பொருந்தும் என்பதைவிட எதெல்லாம் பொருந்தாது என்பதில் கவனமாக இருப்பார்.

இப்படிப்பட்ட கூல் ஐகானுக்குச் சொந்தமாக WROGN என்ற பெயரில் ஃபேஷன் ஆடைகள் பிராண்டும், One8 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்டும் இருக்கின்றன (இல்லனாதான் ஆச்சர்யம்!). விளையாட்டில் மட்டுமல்ல, கலர்ஃபுல் வாழ்க்கைக்கும் இவர் கேப்டன்தான்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

இலங்கை பத்திரிகைகள்

English News