ilakkiyainfo

ilakkiyainfo

நடந்தது என்ன ? (சிறப்பு கட்டுரை)

நடந்தது என்ன ? (சிறப்பு கட்டுரை)
March 08
23:50 2018

மர்ம முடிச்­சு­களை அவிழ்க்­காமல் முடி­வ­டையும் சில ‘கிரைம்’ நாவல்கள் பல கேள்­வி­களை எழுப்பி கொண்­டி­ருப்­பது போலவே, நடிகை ஸ்ரீதே­வியின் மர­ணமும் பல கேள்­வி­களை எழுப்­பி­ கொண்டிருக்கிறது.

உற­வினர் ஒரு­வரின் திரு­மண நிகழ்ச்­சியில் பங்­கேற்­ப­தற்­காக டுபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த மாதம் 24ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயி­ரி­ழந்­த­தாக தகவல் வெளி­யா­னது.

அவ­ரது மரணச் செய்தி இந்­திய திரை­யு­ல­கி­ன­ரையும் ரசி­கர்­க­ளையும் அதிர்ச்­சி­ய­டைய வைத்­தது. ஸ்ரீதே­வியின் மறை­வுக்கு ஒவ்­வொ­ரு­வரும் இரங்­கலை பகிர்ந்து கொண்­டி­ருக்கும் வேளையில், அவ­ரது மர­ணத்தில் பல சந்­தே­கங்கள் இருப்­ப­தா­கவும், அது குறித்து டுபாய் பொலிஸார் விசா­ரணை நடத்­து­வ­தாகும் தக­வல்கள் பரவ தொடங்­கின.

தன் நடிப்பு திறனால் இந்­தி­யா­வையே வசீ­க­ரித்த ஸ்ரீதே­விக்கு டுபாயில் நேர்ந்த திடீர் மரணம், முதலில் சோகத்தை எழுப்­பி­யது. ஆனால், அவர் எப்­படி இறந்தார் என்­பது தொடர்­பாக வந்த முரண்­பட்ட தக­வல்கள் ஏகப்­பட்ட சந்­தே­கங்­களை எழுப்­பு­கின்­றன.

தங்கள் உற­வி­னரின் திரு­ம­ணத்­துக்­காக கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகி­யோ­ருடன் பெப்­ர­வரி 18-ஆம் திகதி டுபாய் சென்றார் ஸ்ரீதேவி.

Tamil_News_large_1967410 நடந்தது என்ன ? (சிறப்பு கட்டுரை) Tamil News large 1967410திரு­மணம் முடிந்து 21- ஆம் திகதி கண­வரும் மகளும் இந்­தியா திரும்­பி­ விட ஸ்ரீதேவி மட்டும் தனி­யாக டுபாயில் தங்­கி­யது ஏன்? அவர்­க­ளுக்குள் என்ன பிரச்­சினை?

அதிலும், ஏற்க­னவே தங்­கி­யி­ருந்த ஹோட்டல் அறையை காலி ­செய்­து­ விட்டு ஜுமெய்ரா எமிரேட்ஸ் டவர் ஹோட்­ட­லுக்கு அவர் இடம் மாறி­யது ஏன்? போனி கபூ­ருக்கு இந்­தி­யாவில் சில நிகழ்ச்­சிகள் இருந்­ததை காரணம் சொல்­கி­றார்கள். அதற்­காக அவர்­களின் மக­ளுமா திரும்­பி­யி­ருக்க வேண்டும்?

பெப்­ர­வரி 21ஆம் திகதி அந்த ஹோட்டல் அறைக்கு போன ஸ்ரீதேவி, அவர் மர­ண­ம­டைந்த பெப்­ர­வரி 24-ஆம் திகதி இரவு வரை கிட்­டத்­தட்ட 72 மணி நேரம், தனது அறை­யை ­விட்டு வெளியில் வர­வில்லை என்று சொல்­லப்­ப­டு­கி­றது.

அது ஏதோ சாதா­ரண ஹோட்டல் இல்லை. 400 அறைகள் கொண்ட சகல வச­தி­களும் நிறைந்த 56 மாடி ஹோட்டல். ஒரு விருந்­தினர், 72 மணி நேர­மாக தன் அறை­யி­லி­ருந்து வெளியில் வர­வில்­லை­யென்றால், குறைந்­த­பட்ச சந்­தே­கம் ­கூ­டவா ஹோட்டல் நிர்­வா­கத்­துக்கு வராது? தங்­கி­யி­ருப்­ப­வரும் இந்­தி­யாவின் முதல் பெண் சூப்­பர் ஸ்டார் என்­பது அந்த ஹோட்டல் நிர்­வா­கத்­துக்கு தெரி­யும்தானே என்ற கேள்வி எழு­கி­றது.

ஸ்ரீதே­வியின் மர­ணத்தின் பின்னர் அவ­ரது தொலைபேசி அழைப்­பு­களை டுபாய் பொலிஸ் விசா­ரணை செய்­தது. அவர் இறப்­ப­தற்கு 48 மணி நேரத்­துக்கு முன்னர் வரை பேசிய தொலை­பேசி அழைப்­புகள் குறித்த விசா­ரணை இது.

இந்த நேரத்தில், ஒரு குறிப்­பிட்ட எண்­ணி­லி­ருந்து அதிக அழைப்­புகள் அவ­ருக்கு வந்­த­தாக தெரி­கி­றது. அப்­படி பேசி­யவர் யார்? அவரின் நோக்கம் என்ன?

மேலும், ஸ்ரீதே­வியின் மரணம் குறித்து ஹோட்டல் தரப்­பி­லி­ருந்து தெரி­வித்­த­தாக டுபாய் பத்­தி­ரிகை ஒன்று ஒரு செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தது.

அதா­வது ஸ்ரீதேவி ‘இரவு 10.30 மணிக்கு ரூம் சர்­வீ­ஸுக்கு போன் செய்து தண்ணீர் கேட்டார். 15 நிமி­டங்­களில் ஹோட்டல் ஊழியர் தண்ணீர் எடுத்­துக்­கொண்டு போய் அறையின் அழைப்பு மணியை அடித்­த ­போது, கதவை அவர் திறக்­க­வில்லை.

அதன்பின் ஹோட்டல் நிர்­வா­கிகள் பயந்­து போய் கதவை உடைத்­து கொண்டு உள்ளே போன ­போது அவர் குளி­ய­ல­றைக்குள் தரையில் மயங்கி விழுந்­து ­கி­டந்தார். அப்­போது அவ­ருக்கு உயிர் இருந்­தது. அவர் அறையில் யாரும் இல்லை என்­ப­துதான் அந்த செய்தி. இது உண்­மையா?

ஆனால் , ஸ்ரீதே­வியின் கணவர் போனி கபூர் சொல்­லி­யி­ருக்கும் வாக்­கு ­மூலம் வேறாக உள்­ளது. 24ஆம் திகதி இரவு திடீ­ரென மனை­விக்கு ‘சர்ப்ரைஸ்’ தரு­வ­தற்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து போனி கபூர் ­டுபாய் சென்­றுள்ளார்.

திடீ­ரென இவரை பார்த்­ததும் ஸ்ரீதே­விக்கு ஆச்­சரியம் மகிழ்ச்சி. சில நிமி­டங்கள் இரு­வரும் பேசி­யுள்­ளனர், பின் இரவு உணவு சாப்­பிட போனி கபூர் வெளியில் கூப்­பிட்­டுள்ளார். அதற்காக ஸ்ரீதேவி குளிக்க போனார்.

ஆனால், 15 நிமி­டங்­க­ளா­கியும் ஸ்ரீதேவி வரா­ததால், குளி­ய­லறை கதவை தட்­டினார் போனி. எந்தப் பதிலும் வரா­ததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அங்கு குளி­ய­லறை தொட்­டியில் ஸ்ரீதேவி மூழ்கி கிடந்தார். உடனே, தன் நண்­ப­ருக்கு போன் செய்தார் போனி. அதன் ­பி­றகே பொலி­ஸாருக்கு தகவல் சொன்னார்.

மேல்­தட்டு குடும்­பத்தில் பிறந்த போனி, உல­கெங்கும் போய் ஹோட்­டல்­களில் தங்­கிய அனு­பவம் உள்­ளவர். இது ­போன்ற சூழலில் ஹோட்­டலில் சொன்னால், அவ­ச­ர­மாக மருத்­து­வரை ஏற்­பாடு செய்­வார்கள்.

சில ஹோட்­டல்­களில் நிரந்­த­ர­மாக மருத்­து­வர்கள் இருப்­பார்கள். இந்த உத­வியை கேட்டு மனை­வியை காப்­பாற்ற அவர் நினைக்­கா­தது ஏன்?ஸ்ரீதேவி தங்­கி­யி­ருந்த எமிரேட்ஸ் டவர் ஹோட்­டலில், மருத்­து­வ­மனை இருக்கும் நிலையில், ஸ்ரீதே­வியை முதலில் அந்த மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லாமல், ரஷீத் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றது ஏன் என்ற கேள்­வியும் எழு­கி­றது.

பல சந்­தே­கங்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய ஹோட்டல் நிர்­வா­கமும், இது­வரை வெளிப்­ப­டை­யாக எந்த பதி­லையும் தெரி­விக்­க­வில்லை.

குளியல் தொட்­டியில் ஸ்ரீதேவி தவ­று­த­லாக விழுந்தார் என்றால், சின்ன சத்­தம் ­கூ­டவா அறையில் இருந்த போனி கபூ­ருக்கு கேட்கவில்லை? பொது­வாக குளி­ய­லறை குளியல் தொட்­டி­களில் எப்­போதும் தண்ணீர் நிரம்­பி­யி­ருக்­காது. குளிக்கப் போகும் ­போ­துதான் தண்ணீர் நிரப்­பு­வார்கள்.

கணவர் வந்து அவ­ச­ர­மாக கூப்­பிட்­ட­தால் தான் ஸ்ரீதேவி குளிக்­கவோ முகம் கழு­வவோ சென்றார் என கூறப்­ப­டு­கின்­றது. அந்த இடை­வெ­ளியில் குளியல் தொட்­டியில் தண்ணீர் நிரம்ப வாய்ப்­பில்லை.

பிறகு எப்­படி அதில் தண்ணீர் இருந்­தது? குளியல் தொட்­டியில் தவ­றி­வி­ழுந்து இறக்க ஸ்ரீதேவி என்ன குழந்­தையா?மேலும், ஸ்ரீதேவி விழுந்த குளியல் தொட்­டியின் ஆழம் ஒன்­றரை அடிதான். அப்­ப­டி­யி­ருக்க, அதில் விழுந்து அவர் தண்ணீரில் மூழ்­கு­வ­தற்கு வாய்ப்­பில்லை என்றும் கூறப்­ப­டு­கி­றது.

இங்­கே தான் இன்­னொரு சந்­தேகம் எழுப்­பப்­ப­டு­கி­றது. ஸ்ரீதேவி இரவு 9.30 மணிக்கே இறந்து விட்­ட­தாக கூறப்­படும் நிலையில், அவ­ரது மரணச் செய்­தியை இரவு 11.30 மணிக்கு, தாம­த­மாக அறி­வித்­ததன் காரணம் என்ன.. மருத்துவர்கள் உறுதிப்படுத்தும் முன்பே மாரடைப்பு என்று கூறியது ஏன் என்ற கேள்­விகளும் எழுகின்றன.

இரண்டு நாட்­க­ளாக பல சந்­தே­கங்கள் ரெக்கை கட்டி பறந்த நிலையில், ஸ்ரீதேவி தலையின் பின் பக்­கத்தில் காயம் இருப்­ப­தாக அதிர்ச்­சி­க­ர­மான ஒரு தகவல் வெளி­யா­னது.

இதனால், சந்­தே­க­ம­டைந்த டுபாய் சட்­டத்­துறை, ஸ்ரீதே­வியின் கணவர் போனி ­க­பூ­ரிடம் விசா­ரணை நடத்­து­வ­தா­கவும் விசா­ரணை முடியும் வரை அவரை இந்­தியா செல்ல அனு­ம­திக்­க­வில்லை என்றும் கூறப்­பட்­டது.

ஸ்ரீதே­வியின் பின் தலையில் ஆழ­மான காயம் எதனால் ஏற்­பட்­டது, அது எப்­படி ஏற்­பட்­டது, காய­ம­டைந்த எவ்­வ­ளவு நேரத்தில் அவர் மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்டார்? என்ற பல கேள்­வி­க­ளுக்கு இது­வரை பதி­லில்லை.

இறந்த 24 மணி நேரத்­துக்­கு பின் பிரேத பரி­சோ­தனை நடை­பெற்ற நிலையில், அதன் அறிக்கை வெளி­யா­னது. அதில் “ஆக்­சி­டெண்டல் டிரவ்னிங்” அதா­வது எதிர்­பா­ரா­த­வி­த­மாக நீரில் மூழ்­கி­யதால் மரணம் ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­வாக மருத்­துவ அறிக்­கைகள், ‘ஒருவர் காயம் கார­ண­மாக இறந்­தி­ருக்­கிறார் என்றோ, ‘மூச்சுத்திணறி இறந்­தி­ருக்­கிறார் என்­றோ தான் இருக்கும்.

அந்த காயம், அவ­ராக ஏற்­ப­டுத்­தி­யதா, விபத்தா வேறு யாரும் தாக்­கி­யதால் ஏற்­பட்­டதா? என்­பதை பொலிஸ் விசா­ர­ணை­யில் தான் உறுதி செய்­வார்கள். ஆனால், அவர் தண்­ணீரில் விழுந்­ததை தற்­செ­ய­லாக விழுந்­த­தாக எந்த அடிப்­ப­டையில், தட­ய­வியல் அறிக்கை கூறு­கி­றது என்­ப­திலும் குழப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

‘மூழ்கி இறந்தார் என மருத்­து­வர்கள் சொல்­லலாம். ‘தவ­று­த­லாக என அவர்கள் எப்­படி சொல்­ல ­மு­டியும் என்ற கேள்வி எழு­கி­றது.

ஊட­கங்­களில் பல மாறு­பட்ட செய்­திகள் வெளி­யாகி கொண்­டி­ருந்த சூழலில், ஸ்ரீதேவி மரணம் தொடர்­பாக, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியும், தன் பங்­கிற்கு பெரிய அணுகுண்டு ஒன்றை வீசி சென்­றுள்ளார்.

ஸ்ரீதேவி குடிக்கும் பழக்­கமே இல்­லா­தவர் என்றும், அப்­ப­டிப்­பட்­டவர் எப்­படி போதையில் தண்ணீர் தொட்­டியில் விழுந்து இறந்­தி­ருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்­பி­யுள்ள அவர், ஸ்ரீதேவி விபத்து முறையில் மர­ணிக்­க­வில்லை என்றும், மாறாக கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம். எனக்கு தெரிந்­த ­வரை அவர் குடிப்­ப­ழக்கம் கொண்­டவர் இல்லை.

அப்­ப­டி­யி­ருக்கும் பட்­சத்தில் எப்­படி அவர் உடலில் மது இருந்­த­தற்­கான தட­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவரை யாரேனும் வலுக்­கட்டா­ய­மாக மது அருந்த வைத்­தார்­களா? என்­னிடம் எப்­படி ஸ்ரீதேவி இறந்தார் என கேட்டால், அவரை கொலை செய்து விட்­டார்கள் என்றே தான் கூறுவேன் . நிழல் உலக தாதா இப்ராஹிம்கும் சினிமா நடிகைகளுக்கும் உள்ள தொடர்பை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இறக்­கும் ­போது அவர் மது அருந்­தி­யி­ருந்­த­தாக பிரேத பரி­சோ­தனை அறிக்கை சொல்­கி­றது. ஆனால், ‘‘ஸ்ரீதே­விக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை’’ என அவர்­களின் குடும்ப நண்­பரும், பல பார்ட்­டி­களில் கலந்­து ­கொள்­ப­வ­ரு­மான முன்னாள் எம்.பி அமர்சிங் சொல்­கிறார்.

பிறகு எப்­படி இது சாத்­தியம்? அது­மட்டும் அல்ல ஸ்ரீதேவி எப்­போதும் தன்னை அழ­கா­கவும் இள­மை­யா­கவும் வைத்­தி­ருக்க வேண்டும் என விரும்­பி­யவர் அதற்­காக உடற்­ப­யிற்சி, உணவு கட்­டுப்­பாடு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள், மருந்துகள் உள்­ளிட்ட பல ­வி­ட­யங்­களில் ஈடு­பட்டார்.

இப்­ப­டி­யி­ருக்கும் போது தள்­ளாடி விழும் வகையில் அவர் மது அருந்­தி­யி­ருப்­பாரா என்ற சந்­தே­கமும் எழு­கி­றது. இந்த விடை தெரி­யாத கேள்­விகள் ஸ்ரீதே­வி­யோடு புதைந்து போய்­வி­டக் ­கூ­டாது.

ஸ்ரீதேவி விவ­கா­ரத்தை வழக்கம் போல் சமூ­க­ வலைத்தள ­வா­சி­களும் விட்டு வைக்­க­வில்லை. அவர் மர­ண­ம­டைந்தார், அவர் குடித்­து ­விட்டு போதையில் இருந்தார், அவர் மயக்­க­ம­டைந்து விழுந்து விட்டார், அவர் கொல்­லப்­பட்டார் என பலரும் பல­வி­த­மான கருத்­துக்­களை சமூக வலை­த்த­ளங்­க­ளிலும் உலவ விட்­டி­ருக்­கி­றார்கள். கடந்த சில தினங்­க­ளாக ஸ்ரீதே­வியின் மர­ணமும், அது தொடர்­பான விவா­தங்­க­ளுமே, சமூக வலைத்­த­ளங்­களை முழு­வ­து­மாக ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தன.

1498197166-7099 நடந்தது என்ன ? (சிறப்பு கட்டுரை) 1498197166 7099இந்­நி­லையில் இயற்­கை­யி­லேயே அழ­கான ஸ்ரீதேவி மேலும், தன்னை அழ­கு­ப­டுத்­தி கொள்ள பல்­வேறு அறுவை சிகிச்­சை­களை மேற்­கொண்டார். தன்னை 40 வயது பெண்­ணாக இள­மை­யா­கவும் கவர்ச்­சி­யா­கவும் வைத்­து கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக மூக்கு உதடு மார்பு உள்­ளிட்­ட­வற்­றுக்கு செய்­து கொண்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்­சை­களே அவ­ரது மர­ணத்­துக்கு காரணம் என்றும் செய்­திகள் ெவளியா­கின.

சிறு­வ­யதில் இருந்தே புக­ழோடு வளர்ந்­த ­ஸ்ரீ­தே­விக்கு இயற்­கை­யாக வரும் மூப்பை மகி­ழ்­வுடன் ஏற்­றுக்­கொள்ளும் மனம் இருக்கவில்லை. எப்­போதும் தன்மீது புகழ் ஒளிபட ­வேண்­டு­மானால் இளமையும் அழகும் மட்­டுமே தொடர்ந்து இருக்க வேண்­டு­மென நினைத்­து கொண்டார்.

இதற்­காக அவர் செய்த அறுவை சிகிச்­சை­களே அவர் உயி­ரி­ழக்க காரணம் என்ற செய்­தியும் ெவளியா­கி­யது. இது தொடர்பில் சமூக வலைத்­த­ளத்தில் வைர­லான ஒரு பதிவு”ஸ்ரீதேவி திடீர் என்று இறந்­து­ விட்­டாரே என்று வருத்­தப்­படும் நாம் அவ­ருக்கு ஏன் இப்­படி நடந்­தது என்­ப­தையும் நினைத்து பார்க்க வேண்டும்.

அவர் ஒல்­லி­யாக, 40 வயதை விட இள­மை­யாக தெரிய வேண்டும் என்று சமூகம் விரும்­பி­யதால் தொடர்ந்து சர்­ஜ­ரிகள் செய்து கொண்டார்.

5 ஆண்­டு­க­ளுக்கு முன்பு நான் அவரை சந்­தித்­த­ போது அவர் அழ­காக இருந்தார். ஆனால் சாந்­தினி படத்தில் பார்த்­தது போன்று இல்­லாமல் கவ­லை­யுடன் காணப்­பட்டார். வெயிட்டை குறைக்க வேண்டும், முகத்தில் சுருக்கம் இருக்கக் கூடாது என்­கிற பிர­ஷரால் அவர் தெற்கு கலி­போர்­னி­யாவில் உள்ள மருத்­து­வ­ம­னைக்கு அடிக்­கடி சென்று வந்தார்.

ஸ்ரீதே­வியை அதிகம் விரும்­பி­ய­தாக கூறிய அவ­ரது கண­வ­ரா­வது தலை­யிட்டு அவரை தடுத்­தி­ருக்க வேண்டும். அழகு மட்டும் தான் அவ­ருக்கு முக்­கி­யமா? ஸ்ரீதே­வியே அவரின் அழகு விட­யத்தில் அவரை நம்­ப­வில்லை.

ஸ்ரீதே­விக்கு அவர் மீதே அக்­கறை இல்லை. தனது உத­டுகள் சரி­யில்லை, முகம் சரி­யில்லை என்று நினைத்து அழ­கான உடைகள் அணிய உடம்பை குறைத்­துள்ளார் என்று பியாலி கங்­குலி என்­பவர் சமூ­க­ வ­லைத்­த­ளத்தில் பகிர்ந்த ஒரு பதிவும் வைர­லா­னது.

ஆமாம் சிறு­வ­யது முதலே புகழின் ஒளியில் வளர்ந்த ஸ்ரீதே­வியால் அதனை விடுத்து இயல்­பான ஒரு வாழ்க்கை வாழ ­மு­டி­ய­வில்லை. இது அவ­ரது மர­ணத்­துக்கு கார­ண­மாக என்­பது தெரி­யாது ஆனால் இதன் தாக்­கமும் ஒரு காரணம் தான்.

இவ்­வாறு அவ­ரது மரணம் தொடர்பில் ஒரு­புறம் விவா­தங்கள் நடந்­து­ கொண்­டி­ருக்க, ஸ்ரீதேவி “எதிர்­பா­ரா­த ­வி­த­மாக நீரில் மூழ்கி” உயி­ரி­ழந்தார் என டுபாய் தட­ய­வியல் துறை அறிக்கை உறு­தி­யாக கூறி­ய ­போதும், சந்­தே­கத்தை எழுப்­புவோர் மனதில் இது நம்­பிக்­கையை விதைக்­குமா என்­பது கேள்விக்குறியே. தற்போது சமூக ஆர்வலர்கள் பலர் ஸ்ரீதேவி மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை நடத்த வேண்டுமென கோரியுள்ளனர்.

இதே­வேளை மயி­லா­கவும் மூன்றாம் பிறை­யா­கவும் ரசி­கர்­களை கட்­டிப் ­போட்ட நடிகை ஸ்ரீதேவி, உண்­மை­யி­லேயே சந்­தோ­ஷ­மாக வாழ்ந்­தாரா அல்­லது நிஜத்­திலும் நடித்­தாரா?’ என்ற கேள்வி பிர­பல இயக்­கு­நர்­க­ளான முத்­து­ராமன் , ராம்­கோபால் வர்மா உள்­ளிட்­டோரால் எழுப்­பப்­பட்­டது.

அவர்கள் கூறுவது போல ஸ்ரீதேவி, வாழ்க்­கையில் பல விட­யங்­களில் தோல்­வியை சந்­தித்­த­வர்தான். ஹிந்தி திரை­யு­லகம் மிகப்பெரி­யது. பத்­மினி, வைஜெ­யந்தி மாலா, ஹேம­மா­லினி, ரேகா வரி­சையில் தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து சென்று அங்கு மிகப்­பெ­ரிய வெற்­றி ­பெற்­றவர் ஸ்ரீதேவி. `லேடி சூப்­பர் ஸ்டார்’ என்ற அந்­தஸ்த்தை பெற்ற ஒரே நடிகை இவர் மட்­டுமே. அவரின் சொந்த வாழ்க்கை அவ்­வ­ளவு மகிழ்ச்சியா­கவா இருந்­தது?

ஸ்ரீதே­வியின் வாழ்க்கை அழ­கா­னது என்றே பலரும் நினைத்­தனர் அழகு முகம், அற்­பு­த­மான திறமை, 2 அழ­கான மகள்­க­ளுடன் நல்ல குடும்பம், அவ­ருக்கு என்ன குறை என்று பலரும் அவரை பார்த்து பொறா­மைப்­பட்­டார்கள்.

ஸ்ரீதே­வியின் தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிற­க­டித்து பறந்தார். அதன் பிறகு அவரின் தாயால் கூண்­டுக்­கி­ளி­யா­கி­விட்டார். அந்த காலத்தில் நடி­கர்­க­ளுக்கு கறுப்பு பணத்தில்தான் சம்­பளம் கொடுத்­தார்கள்.

கறுப்பு பணத்தில் நடி­கர்­க­ளுக்கு சம்­பளம் கொடுக்­கப்­பட்­டதால் வரு­மான வரி பயத்தில் ஸ்ரீதே­வியின் தந்தை அந்த பணத்தை தனது உற­வி­னர்கள், நண்­பர்­க­ளிடம் கொடுத்து வைத்தார். அவர் இறந்த பிறகு அவர்கள் ஸ்ரீதே­வியை ஏமாற்­றி ­விட்­டனர்.

ஸ்ரீதே­வியின் தாய் சில தவ­றான முத­லீ­டுகள் செய்து நஷ்டம் அடைந்தார். இதனால் ஸ்ரீதேவி கிட்­டத்­தட்ட பணம் இல்­லாமத நிலைக்கு தள்ளப்பட்டார்.­

HkQghZeSfe8b90f5aed6d9ec04dfc7424f7e6422 நடந்தது என்ன ? (சிறப்பு கட்டுரை) HkQghZeSfe8b90f5aed6d9ec04dfc7424f7e6422

ஸ்ரீதேவி, மிதுன் சக்­க­ர­வர்த்தி

ஸ்ரீதேவி ஹிந்­திக்கு சென்ற சம­யத்தில் மிதுன் சக்­க­ர­வர்த்தி அங்கு பிர­பல நடி­க­ராக இருந்தார். மிது­னுடன் சேர்ந்து சில படங்­களில் ஸ்ரீதேவி நடித்தார். பின்னர் மிது­னை ஸ்ரீதேவி இரக­சிய திரு­மணம் செய்துகொண்டார்.

மிது­னுக்கோ ஏற்­க­னவே திரு­ம­ண­மாகி இரு குழந்­தைகள் இருந்­தனர். மனை­வியின் பெயர் யோகிதா பாலி.இந்த சூழலில், ஸ்ரீதே­வியை வெளிப்­ப­டை­யாக `மனைவி’ என்று அறி­விக்க தயங்­கினார் மிதுன்.

அப்போது ஸ்ரீதேவியுடனான திருமணத்தை அறிந்த மிதுனின் மனைவி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஸ்ரீதேவியுடன் தன் கணவர் வாழ அவர் சம்மதித்தார். ஆனால், மிதுனிடமிருந்து ஸ்ரீதேவி விவகாரத்து பெற்றார்.

index நடந்தது என்ன ? (சிறப்பு கட்டுரை) index3
இதற்­கி­டையே 1975 முதல் 1980 வரை வெளி­யான ஸ்ரீதே­வியின் தமிழ் சினி­மாக்­களை பார்த்து போனி கபூ­ருக்கும் அவர் மீது காதல் மலர்ந்தது.

ராம்­கோபால் வர்மா எப்­படி ஸ்ரீதே­வியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற இலட்­சி­யத்­தோடு சினி­மா­வுக்குள் நுழைந்­தாரோ… அதே­போன்று போனி கபூரும் ஸ்ரீதே­வியை வைத்து படம் தயா­ரிப்­பதே இலட்­சி­ய­மாக கொண்டார்.

சென்­னையில் வசித்­து­ வந்த ஸ்ரீதே­வியை சந்­திக்க முயன்றார் போனி கபூர். அந்த சம­யத்தில் சிங்­கப்­பூரில் படப்­பி­டிப்பில் ஸ்ரீதேவி இருந்­ததால், போனி கபூர் ஏமாற்­றத்­துடன் திரும்பி சென்ற கதையும் உண்டு.

இதற்­கி­டையே போனி கபூர் மோனா என்ற பெண்ணை திரு­ம­ணம் ­செய்­து­ கொண்டார். ஆனால், ஸ்ரீதே­வியை வைத்து சினிமா தயா­ரிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் போனி கைவி­ட­வில்லை.

படப்­பி­டிப்பு ஒன்றில் ஸ்ரீதே­வியை சந்­தித்தார். தன் புதுப்படம் பற்றி அவ­ரிடம் கூறினார். அந்தப் படம் தான் 1987ஆம் ஆண்டு வெளி­யாகி மெகா ஹிட்­டான `மிஸ்டர் இந்­தியா’. இந்தப் படத்தில் நடிக்க 10 இலட்சம் ரூபா சம்­பளம் கேட்டார் ஸ்ரீதே­வியின் தாயார் ராஜேஸ்­வரி. போனி கபூரோ 11 இலட்சம் ரூபாவை அளித்தார்.

ae4bdf9cd142f56db07f1de264ee2d39 நடந்தது என்ன ? (சிறப்பு கட்டுரை) ae4bdf9cd142f56db07f1de264ee2d39`மிஸ்டர் இந்­தியா‘ படப்­பி­டிப்­பின்­போது, மிது­னுக்கும் தனக்­கு­மி­டையே இருந்த உறவை போனி கபூ­ரிடம் கூறினார். ஸ்ரீதே­வியை `மனைவி’ என்று வெளிப்­ப­டை­யாக மிதுன் அறி­விக்க தயா­ராக இல்­லாத நிலையில், போனி கபூரோ அவ­ருக்­காக எது­ வேண்­டு­மா­னாலும் செய்ய தயாராக இருந்தார்.

போனி கபூரின் ஆறுதல் வார்த்தைகள் அவரை தேற்றின. மிதுனிடம் இல்லாத காதலை போனி கபூரிடம் ஸ்ரீதேவி கண்டார். `நான் கனவில் கண்ட ஆண் அவர் என்று போனி கபூர் பற்றி ஸ்ரீதேவி கூறுவார். ஸ்ரீதேவி தாயார் ராஜேஸ்வரி வாங்கியிருந்த கடன் முழுவதையும் போனி கபூர் அடைக்க, ஸ்ரீதேவியின் நம்பிக்கையை பெற்றார் போனி கபூர்.

இதற்கிடையே, போனி கபூருக்கு முதல் மனைவி மூலம் இரு குழந்தைகள் பிறந்திருந்தன. ஆயினும் 1996-ஆம் ஆண்டு போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள, குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போனி கபூரின் மனைவி மோனா, தன் குழந்தைகளுடன் கணவரை விட்டு நிரந்தரமாக பிரிந்தார்.

மோனாவின் தாயார் தன் மகளின் வாழ்க்கையை ஸ்ரீதேவி பாழடித்து விட்டதாக கருதினார். கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை பார்த்த மோனாவின் தாயாருக்கு கடும் கோபம் ஏற்பட, அவரின் வயிற்றில் கையால் ஓங்கிக் குத்தக்கூட முயன்றார்.

ஆனால், போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவி, தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுள்ள அவரது மரணம், அவர் கதாநாயகியாக அறிமுகமான மூன்று முடிச்சு பெயர் போல அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் நிரம்பியதாக முடிந்துள்ளது..

தொகுப்பு : குமார் சுகுணா

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான  ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்  எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News