ilakkiyainfo

ilakkiyainfo

நடிகர் வடிவேலுவின் ‘கிணத்தைக் காணோம்’ பாணியில் புகார்: ‘எங்கள் மேகத்தை இஸ்ரேல் திருடுகிறது’ ஈரான் குற்றச்சாட்டால் பரபரப்பு

நடிகர் வடிவேலுவின் ‘கிணத்தைக் காணோம்’ பாணியில் புகார்: ‘எங்கள் மேகத்தை இஸ்ரேல் திருடுகிறது’ ஈரான் குற்றச்சாட்டால் பரபரப்பு
July 04
01:56 2018

நடிகர் வடிவேலு, ‘கண்ணும் கண்ணும்’ படத்தில், “அய்யா, கிணத்தைக் காணோம்.. வட்டக் கிணறுய்யா” என்று சொல்லி போலீசில் புகார் செய்த காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இதே போன்ற ஒரு புகாரை ஈரான் நாட்டின் ராணுவ தளபதி குலாம் ரேசா ஜலாலி, இஸ்ரேல் மீது சுமத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ஈரான் நாட்டின் வானிலை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில் வெளிநாட்டின் தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது.

இஸ்ரேலும், இன்னொரு நாடும் கூட்டுச்சதி செய்து, ஈரானில் மழை பெய்யக் கூடாது என்பதற்காக மேகத்தை தடுத்து விடுகின்றன” என்று கூறினார். மேலும், “அதில் உச்சம் என்னவென்றால், எங்கள் மேகமும், பனியும் திருடுபோவதுதான்” என்றார்.

2 ஆயிரத்து 200 மீட்டர் உயரத்துக்கு மேல், ஆப்கானிஸ்தானுக்கும், மத்தியதரைக்கடல் பகுதிக்கும் இடையே ஈரானை தவிர பிற அனைத்து பகுதிகளும் பனியால் மூடப்பட்டு உள்ளன என்ற ஆய்வுத் தகவலையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்கள் நாட்டின் மேகத்தையும், பனியையும் இஸ்ரேல் திருடுவதாக ஈரான் ராணுவ தளபதி கூறி உள்ள குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News