ilakkiyainfo

ilakkiyainfo

நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ‘தமிழில் பேசலாமா’ என்று கேட்டு பதிலடி

நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ‘தமிழில் பேசலாமா’ என்று கேட்டு பதிலடி
November 25
05:59 2019

தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நேற்றைய (சனிக்கிழமை) அமர்வு ஒன்றில் நடிகை டாப்சி பன்னு கலந்து கொண்டு பலரது கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து கொண்டிருந்தார்.

அப்போது, நடுவில் குறுக்கிட்ட நபரொருவர், டாப்சியிடம் இந்தி மொழியில் பேசும்படி வலியுறுத்தினார். உடனே, பார்வையாளர்களை நோக்கிய டாப்சி, “இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் இல்லை என்று பதிலளித்தனர்.

இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து, ‘நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. எனவே இந்தியில்தான் பேச வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபரின் பேச்சுக்கு முற்று வைக்கும் வகையில், “நான் தமிழ், தெலுங்கு திரைத்துறையிலும் நடித்து வருகிறேன். எனவே, நான் உங்களிடம் தமிழில் உரையாடலாமா?” என்று டாப்சி கேட்டவுடன், அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்க, கேள்வி எழுப்பிய நபர் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை விடுத்து நடிப்புத்திறன் சார்ந்த கேள்விகளை கேட்குமாறும் டாப்சி பார்வையாளர்களிடம் வலியுறுத்தினார்.

_109812531_8fddd70b-2562-4640-8ead-f7fd2253bccc  நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி 109812531 8fddd70b 2562 4640 8ead f7fd2253bccc e1574661485298 arts-and-culture-50534592  நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், 'தமிழில் பேசலாமா' என்று கேட்டு பதிலடி arts and culture 50534592

குறிப்பாக, பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்களை பார்ப்பதன் அவசியம் குறித்து அவர் தனது கருத்தை பதிவு செய்ததாக ஐஎஃப்எஃப்ஐ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீங்கள் ஒரு நல்ல ரசிகராக இருக்க விரும்பினால், பெண்ணை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட படத்தை திரையரங்கிற்கு சென்று பாருங்கள். ஏனென்றால், பெண்ணை மையாக கொண்ட ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் அது அதேபோன்ற குறைந்தது ஐந்து திரைப்படங்களை தயாரிப்பதற்கு காரணமாக அமையும்” என்று அந்த ட்விட்டர் பதிவில் டாப்சி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News