ilakkiyainfo

ilakkiyainfo

நடுநிலை வகிக்குமா இந்தியா? ஹரிகரன் (கட்டுரை)

நடுநிலை வகிக்குமா இந்தியா? ஹரிகரன் (கட்டுரை)
April 08
19:04 2019

அர­சியல் கைதிகள் விடு­தலை, காணிகள் விடுவிப்பு உள்­ளிட்ட தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு பிரச்­சி­னை க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்தார்.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்றத் தவ­றி­ய­துடன், தமிழ் மக்கள் யாரை எதிர்க்க வேண்டும் என்ப­தற்­காக, அவரை ஜனா­தி­பதி ஆக்­கி­னரோ, அவ­ரு­ட­னேயே கடை­சியில் கூட்டுச் சேர்ந்து மக்­களின் ஆணை­யையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்

ஜனா­தி­பதித் தேர்தல் இந்த ஆண்டு இறு­தியில் நடக்கப் போகின்ற நிலையில், இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டப்­போகும் வேட்­பா­ளர்கள் யார் என்ற கேள்வி வலு­வாக எழுப்­பப்­ப­டு­கின்­றதைப் போலவே, இந்தத் தேர்­தலில் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகி­றது என்ற கேள்­வியும் எழத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இலங்­கையில் நடந்த ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளி­லேயே தமிழ் மக்கள் அதிகம் பங்­கெ­டுத்த –- அதி­க­ளவில் ஆர்வம் காட்­டிய தேர்­த­லாக அமைந்­தது 2015 ஜனா­தி­பதித் தேர்தல் தான்.

இதில், மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து பொது வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ் மக்கள் பெரு­ம­ளவில் ஆத­ரித்து வாக்­க­ளித்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷவைத் தோற் ­க­டிக்க வேண்டும் என்­ப­தற்­காக மாத்­தி­ர­மன்றி, மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்த வாக்­கு­று­தி­க­ளையும் தமிழ் மக்கள் நம்­பியே அவ­ருக்கு வாக்­க­ளித்­தனர்.

அர­சியல் கைதிகள் விடு­தலை, காணிகள் விடு­விப்பு உள்­ளிட்ட தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்தார்.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்றத் தவ­றி­ய­துடன், தமிழ் மக்கள் யாரை எதிர்க்க வேண்டும் என்­ப­தற்­காக, அவரை ஜனா­தி­பதி ஆக்­கி­னரோ, அவ­ரு­ட­னேயே கடை­சியில் கூட்டுச் சேர்ந்து மக்­களின் ஆணை­யையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.

தமிழ் மக்­களால் ஆட்சி பீடம் ஏறிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இப்­போது தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கும், எதிர்­பார்ப்­பு­க­ளுக்கும் எதி­ராகச் செயற்­ப­டு­கின்ற நிலை காணப்­ப­டு­கி­றது.

இப்­ப­டி­யான நிலையில், வரப்­போகும் ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்­டாலும் தமிழ் மக்கள் எந்­த­ள­வுக்கு வாக்­க­ளிக்க முன்­வ­ரு­வார்கள் என்ற கேள்வி உள்­ளது.

மஹிந்த ராஜபக் ஷவினால் அவ­ரது சகோ­தரர் கோத்­தா­பய ராஜபக் ஷ போட்­டியில் நிறுத்­தப்­பட்டால், தமிழ் மக்கள் அவரை ஆத­ரிப்­பார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அது­பற்றி அவர்­களே சந்­தே­கத்தை எழுப்­பி­யி­ருக்­கி­றார்கள்.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான வாக்­குகள், மறு­த­ரப்­புக்கு கிடைக்­குமா என்­பதே இப்­போ­துள்ள கேள்வி. ஏனென்றால் வாக்­கு­று­தி­களை நம்பி ஏமாந்து போன தமிழ் மக்கள், மீண்டும் ஒரு தரப்­பிடம் ஏமாற வேண்­டுமா என்று சிந்­திக்கக் கூடும்.

எனவே தான், தமிழ் மக்கள் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் மீது ஆர்வம் காட்­டு­வார்­களா என்ற சந்­தேகம் உள்­ளது. ஆனால், ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­குகள் தீர்­மா­ன­க­ர­மா­னவை. 2005 ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் பங்­கெ­டுக்­காமல் ஒதுங்கிக் கொண்­டமை, மஹிந்த ராஜபக் ஷவுக்கு சாத­க­மாகிப் போனது. அது தமிழ் மக்­க­ளுக்கும் பேர­ழி­வு­க­ளுக்கு வழி­வ­குத்­தது.

எப்­ப­டியும் இரண்டு பேரி­ன­வாதக் கட்­சி­களும் நிறுத்­தப்­போகும் வேட்­பா­ளர்­க­ளுமே, தமி­ழர்கள் எதிர்­பார்க்­கின்ற தீர்வை வழங்கப் போவ­தில்லை. எனவே, தேர்­தலில் ஒதுங்­கி­யி­ருக்­கலாம், சிங்­கள மக்­களே அவர்­க­ளுக்­கான தலை­வரைத் தெரிவு செய்­யட்டும் என்று ஒதுங்கிக் கொள்­வது விவே­க­மா­ன­தா­குமா?

தமிழ் மக்கள் தமது பலத்தை நிரூ­பிக்க வேண்­டு­மாயின், தம்மைப் புறக்­க­ணிக்க முடி­யாத சக்தி என்­பதை நிலை நிறுத்த வேண்­டு­மாயின், ஜனா­தி­பதித் தேர்தல் களத்தில் வலு­வான அர­சி­யலை பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்து பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது.

கடந்­த­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிக்க மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொது­வேட்­பா­ள­ராக கொண்டு வரும் முயற்­சி­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முக்­கிய பங்­காற்­றி­யது.

அந்த முயற்­சி­களில் சர்­வ­தேச தலை­யீ­டு­களும் இருந்­தன என்­பதை மறக்க முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்­ட­வர்கள் இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­களின் தலை­யீ­டுகள் தொடர்­பாக குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்­தனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

தமக்குக் கட்­டுப்­ப­டாத மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்கு மேற்­கு­லகம் அக்­கறை கொண்­டி­ருந்­தது. அவ்­வா­றான பூகோள அர­சியல் நலன்கள் நிரம்­பிய தேர்­த­லாக இருந்­த­ போதும், அதனை கூட்­ட­மைப்பு சரி­வரப் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை என்ற குற்­றச்­சாட்டு, பல தமிழ் அர­சியல் ஆய்­வா­ளர்கள் மத்­தியில் இருக்­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு முன்­ன­தாக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மேற்­கு­ல­கத்தின் மூலம் சில வாக்­கு­று­தி­களைப் பெற்­றி­ருக்க வேண்டும் என்­பது அவர்­களின் நிலைப்­பாடு.

பொது­வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிறுத்தும் முயற்­சி­களில் முக்­கிய பங்­காற்­றிய சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் கூட, எழுத்து மூல உத்­த­ர­ வா­தத்தை பெற்றுக் கொள்­ளு­மாறு இரா.சம்­பந்­த­னிடம் கூறினார் எனவும், ஆனால் அது தேர்தல் பிர­சா­ரத்தை திசை­ தி­ருப்பி விடும் என்றும் சம்­பந்தன் நிரா­க­ரித்து விட்டார் என்றும் சு மந்­திரன் பின்னர் கூறி­யி­ருந்தார்.

எது எவ்­வா­றா­யினும், எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையோ, அல்­லது மேற்­கு­லக நாடு­களின் உத்­த­ர­வா­தத்­தையோ பெற்றுக் கொள்­ளாத தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இப்­போது ஏமாந்து போய் நிற்­கி­றது என்­பது மட்டும் உண்மை.

இந்தச் சூழலில் தான், அடுத்­த­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் எவ்­வாறு செயற்­படப் போகி­றார்கள், அவர்­களை தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் எவ்­வாறு வழி­ந­டத்தப் போகின்­றன என்ற கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன.

கடந்­த­வாரம் ஆங்­கில வார­இதழ் ஒன்­றுக்கு வடக்கின் முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ர­னிடம் இது­பற்றி கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது,

அதற்கு அவர், “எங்­களின் பிரச்­சி­னை­களை புரிந்து கொள்ளும், நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய இறுதித் தீர்வை வழங்கக் கூடிய எவ­ரையும் நாங்கள் ஆத­ரிப்போம். ஆனால், வெறும் சொற்­களால் அளிக்­கப்­படும் வாக்­கு­று­தி­களை ஏற்க முடி­யாது. ஒரு புரிந்­து­ணர்­வுக்கு வர மூன்­றா­வது தரப்பு எமக்கு உத்­த­ர­வாதம் அளிக்க வேண்டும்.” என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அவர் மூன்றாம் தரப்­பாக இருக்கக் கூடி­யது யார் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார். இந்­தியா அந்த நடு­நிலைப் பாத்­தி­ரத்தை வகித்தால் நல்­லது, வர­வேற்போம் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்­வாக 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தைக் கொண்டு வந்த நாடு, அயல் நாடு என்ற வகையில் இந்­தி­யாவின் மத்­தி­யஸ்­தத்தை ஏற்­றுக்­கொள்ள முடியும் என்றும் விக்­னேஸ்­வரன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இந்­தி­யாவின் நடு­நி­லையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஏற்றுக் கொள்ளும் என்­பதில் சந்­தே­க­மில்லை. விடு­தலைப் புலி­களும் கூட, போர் நெருக்­கடி தீவி­ர­ம­டைந்த ஒரு கட்­டத்தில் இந்­தி­யாவின் தலை­யீட்டை கோரி நின்­றனர். ஆனால் இந்­தியா மசி­ய­வில்லை.

எனவே, இந்­தி­யாவின் தலை­யீட்டை- நடு­நிலைப் பாத்­தி­ரத்தை தமிழர் தரப்பில் கோரும் முயற்­சி­க­ளுக்கு அதிக எதிர்ப்பு இருக்­காது. ஆனாலும் இன்­னமும் இந்­தி­யாவை தீவி­ர­மாக எதிர்க்­கின்ற தரப்­பு­களும் இருக்­கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

ஆனால், ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரிக்­கின்ற விட­யத்தில் இந்­தியா வெளிப்­ப­டை­யாக நடு­நிலை வகிக்க முன்­வ­ருமா என்­பதை முதலில் பார்க்க வேண்டும்.

பிற நாடு ஒன்றின் உள்­நாட்டு அர­சி­யலில் தலை­யீடு செய்­வதை இந்­தியா ஒரு­போதும் ஏற்றுக் கொண்­ட­தில்லை.

ஏதா­வ­தொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரை இந்­தியா வெளிப்­ப­டை­யாக ஆத­ரிக்­கின்ற நிலை காணப்­பட்டால் தான், நடு­நிலை வகிக்க இந்­தியா முன்­வ­ருமே தவிர, மதில் மேல் பூனை­யாக இருக்­கின்ற ஒரு முடிவை இந்­தியா எடுத்தால், அத்­த­கைய நடு­நிலை வகிப்­புக்கு இந்­தியா உடன்­ப­டாது.

இப்­போ­தைய நிலையில் இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தியா தனக்­கென சில அடிப்­படை நலன்­களை கொண்­டி­ருக்­கி­றது. தமக்கு எதி­ராக செயற்­படக் கூடிய ஆட்சி ஒன்று கொழும்பில் உரு­வா­வதை இந்­தியா விரும்­ப­வில்லை. இனி­மேலும் விரும்­பாது,

ஆனாலும், எந்த தரப்­பையும் பகைத்துக் கொள்ளும் நிலை­யிலும் இந்­தியா இல்லை.

கடந்த ஆண்டு ஒக்­டோபர் 26ஆம் திகதி ஆட்­சிக்­க­விழ்ப்பு இந்­தி­யா­வுக்கு ஏமாற்­றத்தை அளித்­த­போதும், சட்­ட­ரீ­தி­யாக உரு­வாக்­கப்­படும் எந்த அர­சாங்­கத்­தையும் ஆத­ரிக்க, ஏற்­றுக்­கொள்ள இந்­தியா தயா­ரா­கவே இருந்­தது.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் அதி­கா­ரிகள், அந்த விட­யத்தில் தெளி­வான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தார்கள். அதா­வது மஹிந்த ராஜபக் ஷ சட்­ட­ரீ­தி­யாக அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்தால், அவ­ரது அர­சாங்­கத்­துக்கு இந்­தியா அங்­கீ­கா­ரத்தைக் கொடுத்­தி­ருக்கும்.

இலங்­கையில் தமக்குச் சாத­க­மான – சார்­பான ஒரு அர­சாங்கம் இருக்க வேண்டும் என்று இந்­தியா எதிர்­பார்க்­கின்ற போதும், தமக்கு சார்­பில்­லாத ஒருவர் ஆட்­சி­ய­மைத்­தாலும் கூட, அவரை பாத­க­மான கண்­ணோட்­டத்­துடன் இந்­தியா அணு­காது.

முடிந்­த­வ­ரைக்கும் கொழும்­புடன் இணக்­க­மான போக்கை கடைப்­பி­டிக்­கவே இந்­தியா முற்­படும்.

எனவே, ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழர் தரப்­பு­ட­னான இணக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு, மூன்றாம் தரப்பு நடு­நி­லை­யா­ள­ராக இந்­தியா பகி­ரங்­க­மாக பங்­கெ­டுக்கும் என்று எதிர்­பார்ப்­பது கடி­ன­மான விட­ய­மா­கவே இருக்கும்.

சில­வே­ளை­களில் இந்­தியா இந்த நடு­நி­லையை இர­க­சி­ய­மாக வகிக்க முன்­வரக் கூடும். ஆனால் இர­க­சிய நடு­நிலை ஏற்­பாடு எந்த வகை­யிலும், ஆட்­சிக்கு வரக் கூடிய தரப்­புக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒன்றாக இருக்க முடியாது.

அதேவேளை, இந்தியாவை பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலில் முடிவை எடுக்க தமிழர் தரப்பு முனையும் போது, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுடனும் தமிழர் தரப்பு விட்டுக் கொடுத்துப் போக நேரிடலாம்.

உதாரணத்துக்கு, மஹிந்த ராஜபக் ஷ தரப்பை இந்தியா ஆதரிக்க முடிவு செய்கிறது என்று வைத்துக் கொண்டால், அதற்கு தமிழர் தரப்பு இணங்க வேண்டியிருக்கும். ஆனால் அது நீதியைக் கோரும் தமிழர் தரப்புக்கு பாதகமானதாக இருக்கும். இருந்தாலும் இந்தியாவுக்காக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த விவகாரத்தில் வெளிநாட்டு மத்தியஸ்தம் என்பது எந்தளவுக்கு பொருத்தமுடையதாக இருக்கும் என்ற விடயத்தில் தமிழர் தரப்பில் முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்போர், மிக அவதானமாகவே இருக்க வேண்டியிருக்கும்.

அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது. அவசர கோலத்தில் முடிவுகளை அறிவிக்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் அது இக்கட்டான நிலைக்குள் சிக்கும் நிலையை ஏற்படுத்தும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News