சிவனொளிபாதமலையை அண்மித்த ரிக்காடன் வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆகையால் வனத்துறையினர் ரிக்காடன் வனப்பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொறுத்தி கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 நல்லத்தண்ணி வனப்பகுதியில் கரும்புலியின் நடமாட்டம நல்லத்தண்ணி வனப்பகுதியில் கரும்புலியின் நடமாட்டம் 625இந்நிலையில் அவ்வாறு பொறுத்தப்பட்ட கண்காணிப்பு கெமராக்களில் கரும்புலிகளில் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கண்டறியப்பட்ட கரும் புலியானது 6 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டதாக காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்கரும்புலியை இப்பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளமையால் பிரதேச மக்கள் அச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டனர்.