ilakkiyainfo

ilakkiyainfo

நள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்… வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர்!!

நள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்… வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர்!!
June 14
21:23 2018

கேரளாவைச் சேர்ந்த ஆதிரா என்ற இளம்பெண் இன்டிகோ விமான நிறுவனத்தில் கஸ்டமர் கேர் பிரிவில் பணி புரிகிறார். கொச்சியிலிருந்து ஜூன் 2-ம் தேதி இரவு 9.30 மணியளவில் திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் அவர் பயணித்தார்.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலத்தில் ஆதிரா இறங்க வேண்டும். சங்கரமங்கலத்தைப் பேருந்து அடையும்போது, நள்ளிரவு 1.30 மணி. பிற பயணிகள் உறக்கத்தில் இருந்தனர்.

நள்ளிரவில் இளம்பெண் ஒருவரைத் தனியாக விட்டுச் செல்ல பேருந்தின் கண்டக்டர், டிரைவருக்கு மனம் வரவில்லை. `உங்களை அழைத்துச் செல்ல யாராவது வருகிறார்களா’ என்று ஆதிராவிடம் கேட்டுள்ளனர்.

சகோதரர் வந்துகொண்டிருப்பதாக அவர்களிடத்தில் கூறிய ஆதிரா பேருந்தைவிட்டு இறங்கியிருக்கிறார். ஆதிரா இறங்கிய பின்னும் பேருந்து நகரவில்லை. அங்கேயே நின்றுகொண்டிருந்தது.

ஆதிராவின் சகோதரர் 10 நிமிடம் கழித்து வந்தார். அதுவரை, அந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. சகோதரருடன் அவர் புறப்பட்ட பின்னரே,

பேருந்து நகர்ந்தது. முகம் தெரியாத பயணிக்கு உதவிய மனதிருப்தியோடு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி மீண்டும் ஓடியது. சில நாள்களும் ஓடின.

திடீரென்று அந்தப் பேருந்து ஓட்டுநர், கண்டக்டர்ருக்கும் பல முனையில் இருந்தும் வாழ்த்து குவிந்தது. என்ன ஏதுவென்று தெரியாமலேயே பேருந்தை ஓட்டிய கோபக்குமாரும் ஷிஜூவும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.

இருவருக்கும் வாழ்த்துக் குவிய காரணம்… ஆதிராவின்  ஃபேஸ்புக் பதிவு. ”நள்ளிரவில் தன் பாதுகாப்புக்காகப் பேருந்து நின்றது குறித்து தன் பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார்.

`அந்தச் சமயத்தில் என்னால் அவர்கள் இருவருக்கும் நன்றி கூற முடியவில்லை. அதனால், ஃபேஸ்புக் வழியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார்.

ஆதிராவின் ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆக, கே.எஸ்.ஆர்.டி.சி தலைமை செயல் அதிகாரி டாமின் தக்கன்சேரியிலிருந்து சாதாரண மக்கள் வரை கோபக்குமாரும்  ஷிஜூவும் பாப்புலர் ஆகிவிட்டனர்.

சிறு உதவி என்றாலும் தக்க சமயத்தில் செய்த உதவி அல்லவா?

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

இலங்கை பத்திரிகைகள்

English News