ilakkiyainfo

ilakkiyainfo

நவம்பர் 24-ந்தேதி நமீதாவுக்கு திருமணம்

நவம்பர் 24-ந்தேதி நமீதாவுக்கு திருமணம்
November 12
13:45 2017

 

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நமீதாவிற்கு நவம்பர் 24ம் தேதி நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் பிரபலமானவர் நமீதா. இந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது வயது 36.

தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

தொடர்ந்து சத்தியராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ்மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உள்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். இதனால் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார்.

தற்போது அதிக படங்களில் நடிக்கவில்லை. என்றாலும் நமீதாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நமீதா தெலுங்கு மூத்த நடிகர் சரத்பாபுவை திருமணம் செய்யப் போவதாக சில தினங்களுக்கு முன்பு வதந்தி பரவியது. அதை சரத்பாபு மறுத்தார். இப்போது தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை மணக்கிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவுடன் கலந்துகொண்ட ரைசா இத்தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் நமீதாவையும் அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பவரையும் அறிமுகம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

நமீதா திருமணம் பற்றிய விவரங்களை அவர் வெளியிடாமல் அவருடைய தோழி ரைசா வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றிய முழுவிபரங்கள் நமீதா தரப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நடிகர் வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி?: நடிகை நமீதா விளக்கம்! (படங்கள்)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News