ilakkiyainfo

ilakkiyainfo

இந்திய இராணுவத்தின் நாகா ரெஜிமென்ட் வீரவரலாறு!!

இந்திய இராணுவத்தின் நாகா ரெஜிமென்ட் வீரவரலாறு!!
August 26
01:55 2019

நாகா ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் தரைப்படையில் உள்ள ஒரு பிரிவு ஆகும்.இந்திய இராணுவத்திலேயே தொடங்கப்பட்ட மிக இளைய ரெஜிமென்ட் இதுவே.

இதன் முதல் பட்டாலியன்  1970ல் ரானிகெட்டில்  தொடங்கப்பட்டது. நாகாலாந்து மாநிலத்தவர்கள் தான் நாகா ரெஜிமென்டில் பெரும்பாலாக இணைந்தாலும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணைகின்றனர்.

மொத்தமாகவே மூன்று பட்டாலியன்களை கொண்ட இந்த ரெஜிமென்டின் போர்க்குரல் துர்கா நாகாவிற்கே வெற்றி என்பதாகும்.

இந்த ரெஜிமென்ட் ஒரு மகாவீர் சக்ரா,4 வீர் சக்ரா,1 யுத்த சேவா விருது,1 விஷிஸ்த் சேவா விருது,10 சேனா விருதுகளை பெற்றுள்ளது.

நாகா ரெஜிமென்டின் சின்னமாக நாகா ஸ்பியர்ஸ் எனப்படும் ஒரு ஜோடி வெட்டிய அம்பு போன்ற அமைப்பின் மேல் உள்ள ஷீல்டில் காட்டெருமையின் தலை பொறிக்கப்பட்டிருக்கும்.

FB_IMG_1565919141866தொடக்கம்

1960களில் நாகா மக்கள் இராணுவத்தில் தங்களது பங்கை செலுத்த தனியாக ஒரு ரெஜிமென்ட் துவக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு முன்னதாக நாகா மக்கள் குமஒன் ரெஜிமென்டில் தான் இணைந்து வந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு எழுப்பப்பட்ட முதல் ரெஜிமென்ட் நாகா ரெஜிமென்ட் தான்.

FB_IMG_15659191514171957 களில் நாகலாந்து மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. தனி நாடு கோரிக்கைகள் வைத்து சில பிரிவு தீவிரவாதிகள் போராடினர்.

ஆனால் அவர்கள் இரண்டாக பிரிந்து பின்னர் ஒரு பிரிவினர் இந்தியாவில் இணைந்திருக்க சம்மதித்து 1963ல் நாகாலாந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறியது.

இராணுவத்தில் நாகா மக்கள் இணைந்தனர். ஆனால் ஒரு சில பிரிவினர் அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்தினர்.

இதில் ஆச்சரியமாக ஏற்கனவே தீவிரவாதிகளாக இருந்து திருந்தி இந்திய தேசியத்தை ஏற்றவர்கள் புதிதாய் தொடங்கப்பட்ட இராணுவப் பிரிவுகளில் இணைந்தனர்.

அவர்களில் சிலர் நேரடியாக ஜேசிஓக்களாக ( junior commissioned officers) பணியமர்த்தப்பட்டனர். இராணுவத்தில் அவர்களின் பயிற்சிகள் முடியும் முன்பே எந்த தயார்நிலையும் இல்லாமல் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க களமிறக்கப்பட்டனர்.

நாகா ரெஜிமென்டின் முதல் பட்டாலியன் (1 நாகா) குமாஒன் ரெஜிமென்டின் தலைமையகத்தில் 1970 நவம்பர் 1 அன்று  லெட். கலோ. மகாஜன் விஎஸ்எம் அவர்கள் தலைமையில் ரானிகெட்டில் தொடங்கப்பட்டது.

ஒரே ஒரு பட்டாலியனாக நாகா ரெஜிமென்ட் தனது சகாப்தத்தை தொடங்கியது. குமாஒன் ரெஜிமென்ட், கார்வால் ரைபில்ஸ், 3வது கூர்கா ரைபிள்ஸ் ஆகியவற்றில் இருந்த வீரர்களை கொண்டு தான் முதல் பட்டாலியன் துவங்கப்பட்டது.

இதில் 50% நாகா வீரர்களும்,50% குமாஒன் வீரர்கள், கார்வாலி வீரர்கள் மற்றும் கூர்கா வீரர்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இதன் இரண்டாவது ரெஜிமென்ட் 1985 பிப்ரவரி 11ல் ஹல்ட்வானியில் தொடங்கப்பட்டது.

FB_IMG_1565919194163

வங்கதேச போர், ஆபரேசன் ரோமியோ, ஐக்கிய நாடுகள் இராணுவம் , கார்கில் போரில் தனது வீரத்தை நிரூபித்துள்ளனர்.

நாகா மக்கள் இயற்கையிலயே போர் வீரர்கள். அவர்கள் தொழிலே அதுவாக தான் இருந்து வந்துள்ளது.

குட்டையாக, அகன்ற கால்களுடன்,வலுவான அகன்ற உடலமைப்பை கொண்டுள்ளனர். காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் போரிடுவதற்கான ஏற்ற உடலமைப்பை கொண்டுள்ளனர்.

இதனால் மலைப்பகுதி மற்றும் காடுகளில் போரிட ஏற்றவர்கள்.  கோப்ரா படைகளில் அதிகமாக வடகிழக்கு மாநில வீரர்கள் அதிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளன.

ஒரு சிறு உண்மை சம்பவத்தோடு இதை முடிக்கிறேன்.

2013 ஜனவரி மாதம் பாகிஸ்தானின் எல்லைக் காவல் படையின் சிறப்பு பிரிவில் உள்ள இருவர் எல்லை தாண்டி வந்து அசதியில் படுத்திருந்த இரு ராணுவ வீரர்களை படுகொலை செய்தனர்.

ஹேம்ராஜ் இந்த பெயர் அவ்வளவு எளிதில் மறக்க கூடிய பெயர் இல்லை. வீரர் ஹேம்ராஜின் தலையை வெட்டிக் கொன்றனர்.

சொல்ல முடியாத வார்த்தைகளால் அவர் உடல் சேதப்படுத்தப்பட்டியிருந்தது. இறுதி சடங்கின் போது அவரின் முகமோ உடலோ அவரது குடும்பத்தினருக்கு கூட காண்பிக்கப்படவில்லை.

கொதித்தெழுந்த ராணுவத்தின் ராஜபுத்திர படைப்பிரிவு எல்லை தாண்டி தாக்க தனது கமாண்டரிடம் அனுமதி கேட்டனர், அவர் அரசிடம் கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் இருவருமே ராஜபுத்ர படை பிரிவை சார்ந்தவர்களே, அவர்கள் பிரிவில் இருந்த வீரர்கள் அரசு இதற்கு பதிலடி கொடுக்காது எனில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தங்கள் கமாண்டரிடம் முறையிட்டனர்.

தகவல் அரசுக்கு போகவே, அங்கிருந்த ராஜபுத்திர படைப்பிரிவை வேறொரு இடத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார் அன்றய ராணுவ தளபதி ஜெனெரல் பிக்ரம் சிங்.

அடுத்த சில வாரங்களிலேயே, அந்த இடத்திற்கு நாகா ரெஜிமென்ட்-ஐ சேர்ந்த வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர், முடிந்தவரை வெளியில் தெரியாமல் வேலை செய்யவும் அவ்வளவே.

FB_IMG_1565919166020அங்கு வந்த சில நாட்களியே நாகா படை தன் வேலையைக் காட்டியது. தன் கண்ணில் தென்பட்ட பல பாகிஸ்தானிய ராணுவத்தினரை சுட்டது, ஆரம்ப கட்ட தாக்குதலில் இரு பாகிஸ்தான் வீரர்களை கொன்றனர் நாகா படையினர்.

இதற்கு பதிலடியாக மீண்டும் இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் வீரர்கள், நாகா ரெஜிமென்ட் வீரர்கள் தங்கியிருந்த ஒரு கேம்ப்-ஐ தாக்கியது, இருப்பினும் அந்த தாக்குதல் தடுத்து நிறுத்தியது நாகா, பாகிஸ்தான் வீரர்கள் தப்பியோடி விட்டனர்.

அடுத்த நாள் இரவே, தங்களது கமாண்டரிடம் கூட சொல்லாமல் எல்லையில் ரோந்து சென்ற நாகா படையின் ஒரு பிரிவு இரு பாகிஸ்தான் வீரர்களைக் கண்டது.

இருவரையும் மடக்கி பிடித்து இந்திய எல்லைக்குள் கொண்டுவந்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்பு அவர்கள் முன்னால் தீயிட்டு தங்கள் பரம்பரை நாகா நடனத்தை ஆடினர். ஒரு பாகிஸ்தானிய ராணுவ வீரனின் காலை வெட்டி எடுத்து தீயில் வைத்து சமைத்தனர். அதை அவர்கள் சாப்பிட்டதாகவும் ஒரு கதை உண்டு.

மற்றொருவனை எதுவும் செய்யாத நாகா வீரர்கள், அடுத்த நாள் காலையிலேயே இருவரையும் கட்டவிழ்த்து விட்டனர், பாகிஸ்தானியர்களும் எல்லை தாண்டி சென்று விட்டனர். ஆனால் விஷயம் பாகிஸ்தான் ராணுவத்தில் காட்டுத் தீ போல பரவியது.

அதிலும் குறிப்பாக ஒரு நாகா வீரர் இவன் கால் நன்றாக இருப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்கு இவன் மட்டுமே போதும் என்றதாகவும், குறுக்கிட்ட மற்றொரு நாகா வீரர் இவனை நாம் கொன்றால் நம்மையும் இந்த இடத்திலிருந்து விலக்கி விடுவார்கள், நாம் இங்கு மூன்று வருடம் பணி செய்ய வேண்டியுள்ளது, எனவே வரும் நாட்களில் பார்க்கலாம் என்றும் கூறினார் .

நாகா ரெஜிமென்ட் வீரர்கள் 2013 வருட இறுதி வரை மட்டுமே பல தடவை எல்லை தாண்டி சென்றுள்ளனர், பல பாகிஸ்தான் வீரர்களையும் தீவிரவாதிகளையும் கொன்றுள்ளனர்.

FB_IMG_1565919201084நாகா ரெஜிமென்ட் அந்த இடத்தை விட்டு 2015-இல் வெளிவரும் வரை எந்த பெரிய ஊடுருவலோ அல்லது தாக்குதலோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலங்களில், கமாண்டரின் கட்டளைக்கு கட்டுப்படாத பல அதிகாரிகளை ராணுவம் பணி மாற்றம் செய்து வேறு வேலைகளைக் கொடுத்தது. பல அதிகாரிகள் அரசின் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.

ஆனால் இன்று நிலைமை வேறு, அரசு ராணுவ அதிகாரிகளை மதிக்கிறது, வீரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, துப்பாக்கியை கையில் எடுக்க அரசு முழு அனுமதி அளித்துள்ளது,

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News