ilakkiyainfo

ilakkiyainfo

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் தடுத்து வைப்பு!!

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் தடுத்து வைப்பு!!
January 13
12:05 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்

“சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது சுரேஸ்நாத் இரத்தினபாலனின் பெயர் கறுப்புப்பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டது.

அவரது குடும்பத்தினரை இலங்கைக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட போதும் அவர்கள் அவருடனேயே இருக்க முடிவு செய்துள்ளனர்.

திருப்பி அனுப்பப்படுவதற்காக அவர்கள் விமான நிலைய இடைத்தங்கல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை இவர்களை நாடு கடத்தும் உத்தரவை ரத்துச் செய்து இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ்நாத் இரத்தினபாலன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் என்றும் முன்னைய அரசாங்கத்தினால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நாட கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவரது பதிலுக்கு காத்திருப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA January 14, 02:02

    இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது யுத்த குற்றம், இன படுகொலை குற்றம் சாட்டும் நாடுகளுக்கு சுட்டி காட்டிட வேண்டும். அத்துடன் ஒன்று படட இலங்கையை இவர்கள் நேசிப்பதால் இங்கு வந்து போகும் இவர்கள் தாம் பணம் சம்பாதிப்பதட்க்காக முடடாள் படிப்பறிவற்ற வெள்ளை காரனுக்கு குண்டி , கோப்பை கழுவி சில டாலர்களை பார்க்கும் புலம் பெயர்ந்ததுகளிடம் பிரிவினைவாதத்தை விதைக்கின்றனர்.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News