ilakkiyainfo

ilakkiyainfo

நான் ஏன் அப்படி செய்தேன்? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ…விளக்கம்!

நான் ஏன் அப்படி செய்தேன்? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ…விளக்கம்!
February 09
10:22 2018

தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் “பிரபாகரன் எங்கள் தலைவர்” என கூச்சலிட்டு போராட்டம் நடத்திய போது நான், கழுத்தில் கையை வைத்து “அனைத்தும் முடிந்துவிட்டது” என்றே கூறியிருந்தேன் என்று பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு விளக்கம் கொடுத்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எல்லாம் முடிந்துவிட்டது என்றே சைகை மூலம் காண்பித்தேன். பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பினை ஏற்று சுதந்திர தின நிகழ்வில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

நான் ஏற்கனவே புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளமை பற்றி அறிந்திருந்தேன்.

இதன்படி, தூதரக பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், போராட்டக்காரர்கள் இருந்த காரணத்தினால் உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தியிருந்தோம்.

தமது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு அவர்கள் கோரியிருந்தனர். வெளியே செல்ல அச்சமடைந்த காரணத்தினால் அவர்களை பின் கதவு வழியாக வெளியே அனுப்பினேன்.

“இவனுகளுக்கு ஏன் பயப்பட வேண்டுமெனக் கூறி” சிங்கள இளைஞர்கள் முன் கதவு வழியாக வெளியே சென்றனர்.

இந்த இடத்தில் இனவாதம் கிடையாது. இலங்கையின் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனவும், ஜனாதிபதி தமிழில் அனுப்பி வைத்த சுதந்திர தின செய்தியையும் போராட்டக்காரர்களிடம் வழங்கியிருந்தேன்.

போராட்டக்காரர்களில் இருந்த அவர்களின் தலைவர் ஒருவர், இந்த செய்திகளை எடுத்து எரித்தார். தீயிட்டு எரித்த நபரை பிரித்தானிய தூதரக பொலிஸார் கைது செய்தனர்.

=================================================================

nintchdbpict000383065952_12409 நான் ஏன் அப்படி செய்தேன்? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ…விளக்கம்! நான் ஏன் அப்படி செய்தேன்? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ…விளக்கம்! nintchdbpict000383065952 12409 e1518177773241ஸ்காட்லாந்து போலீஸுக்குத் தண்ணி காட்டிய பொம்மைப் புலி… 45 நிமிட காமெடிக் கதை!
=================================================================

அதன் போது குழப்பமடைந்த போராட்டக்காரர்கள் உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகாமையில் ஓடி வந்தனர்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற அனைவரினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது. சீருடை அணிந்த நிலையில், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது.

“பிரபாகரன் அவர் ஹீரோ” என கோசமிட்ட புலி ஆதரவாளர்களிடம் “எல்லாம் முடிந்துவிட்டது” என நான் கூறினேன். “தமிழ் ஈழம் அவர் லேன்ட்” என கோசமிட்ட போது “திஸ் இஸ் யுவர் லேண்ட்” என இலங்கை தேசிய கொடியை காண்பித்தேன்.

நான் ஒரு தடவை விரலில் காண்பித்த சைகையை புலிகளுக்கு ஆதரவான ஊடகம் பல தடவை காண்பிப்பது போன்று எடிட் செய்து ஊடங்களில் பிரச்சாரம் செய்துள்ளது.

வடக்கில், வன்னியில் மட்டுமன்றி பிரிட்டனிலும் நான் தமிழ் மக்களுக்கு எவ்வளவு சேவையாற்றியிருக்கின்றேன் என்பது தெரியும்.

நீங்கள் இலங்கைக்கு செல்லாது ஒவ்வொருவர் சொல்லுவதனை வைத்துக் கொண்டு குற்றம் சுமத்த வேண்டாம் என நான் சீருடையை மாற்றிக் கொண்டு போராட்டக்காரர்களிடம் சென்று கூறினேன்.

நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து இலங்கை சென்று பார்க்குமாறு கூறினேன்.

அந்த தருணத்தில் இலங்கையர் என்ற ரீதியில் நான் செயற்பட்ட விதம் குறித்து பெருமிதம் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என்னை விடவும் நாடு முக்கியம் என்பதனை நான் கற்ற டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியிலிருந்து கற்றுக்கொண்டேன்.

அதன் அடிப்படையிலேயே நான் செயற்படுகின்றேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ஆம் திகதி பகல், பிரிகேடியர் பிரியங்கவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி பணி இடைநிறுத்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது பதற்றமடைய வேண்டியதில்லை என தமக்கு கூறியதாக பிரிகேடியர் பிரியங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News