ilakkiyainfo

நித்யானந்தா பணம் ஆஸ்திரேலியாவில் உள்ள குட்டித்தீவில் பதுக்கல்

நித்யானந்தா பணம் ஆஸ்திரேலியாவில் உள்ள குட்டித்தீவில் பதுக்கல்
January 24
23:48 2020
பெங்களூரு: கடத்தல், பாலியல் வழக்குகளில் குஜராத் மற்றும் கர்நாடாக போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார்.
 

அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவியை குஜராத் போலீசார் நாடினர்.

அதன்பேரில் நித்யானந்தா எந்த நாட்டில் பதுங்கி இருக்கிறார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச போலீசார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள நித்யானந்தா புதிய பாஸ்போர்ட் பெற்று கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதை போலீஸ் அதிகாரிகள் யாரும் உறுதிபடுத்தவில்லை.

இந்நிலையில் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு என்ற குட்டித்தீவில் உள்ள வங்கிக் கணக்கில் தனது பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
202001241524357793_Nithyananda-operating-bank-account-Vanuatu-Island_SECVPF.gif  நித்யானந்தா பணம் ஆஸ்திரேலியாவில் உள்ள குட்டித்தீவில் பதுக்கல் 202001241524357793 Nithyananda operating bank account Vanuatu Island SECVPFஒரு சிறப்பு பூஜைக்காக கட்டணம் செலுத்துவது தொடர்பான விவரங்களை பக்தர் ஒருவர் தேடியபோது நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர் அனுப்பிய இ-மெயிலில், வனுவாட்டு தீவில் உள்ள வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

வனுவாட்டு தேசிய வங்கியின் போர்ட் விலா கிளையில் ‘கைலாசா லிமிடெட்’ என்ற பெயரில் அந்த வங்கிக்கணக்கு உள்ளது.

நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு பசிபிக்கடலில் அமைந்துள்ளது.

வரிகள் இல்லாத சிறிய நாடுகளில் ஒன்றான வனுவாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிக்கணக்கை தொடங்கலாம்.

இந்நாட்டின் தேசிய வங்கியில் முதலீடு செய்தால் வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி, வருவாய் மூல நிதி வரி என எந்த வரியும் செலுத்த வேண்டியது இல்லை.
வங்கியில் கணக்கு தொடங்கும் நபர்கள் குறித்த விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும். இதுபோன்ற காரணங்களாலேயே நித்யானந்தா இந்த நாட்டில் வங்கிக்கணக்கை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த குஜராத் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்ததும், கோர்ட்டு உத்தரவு பெற்று ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்