ilakkiyainfo

ilakkiyainfo

நீரிழிவு நரம்புப் பாதிப்புகளும் தீர்வுகளும்

நீரிழிவு நரம்புப் பாதிப்புகளும் தீர்வுகளும்
November 18
20:19 2014

நீரி­ழிவின் நரம்புப் பாதிப்பு என்­பது கை கால் எரிவு விறைப்பு என்­ப­தற்கு அப்பால் இரு­தயம், உணவுத் தொகுதி, தசை நார்கள் போன்ற பல­வற்­றையும் பாதிக்கக் கூடும் என்­பதை சென்ற வாரம் பார்த்தோம்.

இத்­த­கைய நீரி­ழிவின் நரம்புப் பாதிப்­பிற்­கான சிகிச்­சையின் முக்­கிய அம்சம் நரம்­புகள் மேலும் பாதிக்­கப்­ப­டாமல் தடுப்­பது தான். நீரி­ழிவு கார­ண­மாக அதி­க­ரித்­துள்ள இரத்த குளுக்கோஸ் அளவை கட்­டுப்­பாட்­டான அள­விற்குக் கொண்டு வரு­வதே முதற்­ப­டி­யாகும்.

ஆரோக்­கி­ய­மான உணவு முறையைக் கடைப்­பி­டிப்­ப­துடன், தின­சரி உடற்­ப­யிற்­சிகள் செய்­வதும் மருத்­து­வர்கள் சிபாரிசு செய்யும் மருந்­து­களை கால நேரம் தவ­றாது ஒழுங்­காக உட்­கொள்­ளவும் வேண்டும்.

“கொஞ்­சம்தான் கூட சீனி இரத்­தத்­திலை இருக்கு” என்று சொல்லிக் கொண்டு அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் அக்­கறை காட்­டா­த­வர்­க­ளுக்­குத்தான் இப் பிரச்­சினைகள் அதிகம் தோன்­று­கி­றது.

சிகிச்சை

சிகிச்­சையைப் பொறுத்த வரையில் ஒரே வித­மான சிகிச்சை பயன்­த­ராது. எத்­த­கைய நரம்பு பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் எத்­த­கைய பாதிப்­புகள் நோயா­ளிக்கு ஏற்­ப­டு­கி­றது என்­பதைப் பொறுத்து சிகிச்சை வேறு­படும்.

வலி எரிவு

கால் கைகளில் வலி, எரிவு, குறட்டல், குடைச்சல் பல வித­மான வேத­னைகள் நரம்பு பாதிப்பால் ஏற்­ப­டலாம். இவை சிலரில் தூக்­கத்தைக் குலைக்­கு­ம­ளவு கடுமை யான­தா­கவும் இருக்கக் கூடும். சாதா­ரண வலி நிவா­ரணி மாத்­தி­ரைகள் இவற்றைத் தணிக்க உத­வ­மாட்டா. இருந்­த­போதும் அவற்றைத் தணிக்க வேறு வித­மான பல­வித மருந்­துகள் உள்­ளன.

இவற்றில் சில வழ­மை­யாக மனச் சோர்வு வலிப்பு நோய் போன்­ற­வற்­றிக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­பவை. “எனக்கு ஏன் மனச்­சோர்வு மருந்தைத் தந்­த­னீங்கள்” என்று சில நோயா­ளிகள் மருத்­து­வ­ருடன் மல்லுக் கட்­டு­வ­துண்டு. ஒரே மருந்­திற்கு பல்­வேறு வித­மான பயன்கள் உண்டு என்­பதைப் புரி­யா­த­தால்தான் இந்தக் குழப்பம் சிலரில் ஏற்­ப­டு­கி­றது.

உட்­கொள்ளும் மருந்­துகள் மட்­டு­மின்றி வெளியே பூசும் அல்­லது ஒட்டும் மருந்­து­களும் சிலரில் நல்ல பலனைத் தரும். இவற்றைத் தவிர alpha-lipoic acid போன்ற ஒட்­சிசன் எதி­ரி­களும், evening primrose oil போன்ற சில விட்டமின் மாத்­தி­ரை­களும் சிலரில் உதவும். மருத்­துவ ஆலோ­ச­னை­யுடன் இவற்றை ஒழுங்­காக உப­யோ­கித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

இரைப்பை மற்றும் சமி­பாட்டுத் தொகுதி அறி­கு­றிகள்

வயிற்று ஊதல், பொருமல், உணவு சமி­பாடு அடை­யாமை, ஏப்பம், பசி­யின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற அறி­கு­றிகள் சில­ருக்கு பெரும் தொல்­லை­யாக அமை­யலாம். இதற்குக் காரணம் நரம்புப் பாதிப்பால் உண­வுகள் நீண்ட நேரம் இரைப்பையில் தேங்கி நிற்­ப­தாகும்.

ஒரே நேரத்தில் வயிறு நிறைய உண்­ணாது சிறிய சிறிய உண­வு­க­ளாக அடிக்­கடி உண்­ணுதல், உணவில் எண்ணை மற்றும் கொழுப்புப் பதார்த்­தங்­களைத் தவிர்த்தல், நார்ப்­பொருள் உள்ள உண­வு­களை அள­வோடு உண்­ணுதல் போன்ற நடை­மு­றைகள் மட்­டுமே இவர்­க­ளது தொல்­லையை இல்­லாது ஒழிக்கப் போது­மா­ன­தாக இருக்­கலாம்.

போதிய பலன் கிட்­டாது விட்டால் உண­வு­களை விரைந்து இரைப்­பை­யி­லி­ருந்து வெளி­யேறச் செய்யும் erythromycin, metoclopramide போன்ற மருந்­துகள் உத­வலாம். மருத்துவரின் ஆலோ­ச­னை­யுடன் இவற்றை உப­யோ­கிக்க வேண்டும் என்­பது முக்­கி­ய­மாகும்.

சிறுநீர் கழித்தல் மற்றும் பாலியல் பிரச்சினைகள்

பல்­வேறு பிரச்சினைகள் ஏற்­ப­டலாம்.சிலரில் சிறு­நீரில் கிருமித் தொற்று அடிக்­கடி ஏற்­ப­டு­வ­துண்டு. இதைத் தடுக்க போதிய நீரா­காரம் எடுப்­பது முக்­கியம். சிறு­நீ­ரா­னது சிறு­நீர்ப்­பையில் அதிக நேரம் தேங்கி நிற்­பதைத் தடுக்க வேண்டும்.

நேரம் வைத்து 3 மணி நேரத்­திற்கு ஒரு தடவை சிறுநீர் கழிப்­பது உத­வலாம். தன்னை அறி­யாது சிறுநீர் திடீ­ரென சிந்­தி­வி­டு­ப­வர்­க­ளுக்கும் இது உதவும். கிருமித் தொற்றைக் குண­மாக்க மருத்­து­வர்கள் அன்­ரி­ப­யோடிக் மருந்­துகள் தரவும் கூடும்.

ஆண் குறி விறைப்­ப­டை­யாமை நீரி­ழிவு நரம்புப்பாதிப்புள்ள பலரில் ஏற்­படக் கூடிய ஒரு பாரிய சிக்­க­லாகும். ஆசை­யி­ருந்தும் செயற்­பட முடி­யாமை பல­ரது மனதை வாட்­டு­வதைக் காணலாம். விறைப்­ப­டை­யா­மைக்கு ஹோர்மோன் பிரச்சினை­களும் கார­ண­மாக இருக்­கலாம். அதை குருதிப் பரி­சோ­த­னைகள் மூலம் கண்­ட­றிய முடியும்.

நரம்புப் பாதிப்பால் ஆண் குறி விறைப்­ப­டை­யாது இருப்­பதைச் சமா­ளிப்­ப­தற்­கான மருந்­துகள் உள்­ளன. அவற்றைத் தவிர சில ஊசி மருந்­து­களும், உப­க­ர­ணங்­களும் சில­ருக்குத் தேவைப்­ப­டலாம். சத்­திர சிகிச்­சையும் ஒரு சிலரில் உதவும்.

பெண்­களைப் பொறுத்த வரையில் யோனி வரட்சி அடைதல் ஒரு முக்­கிய பிரச்­சினையாகும். இதனால் பாலு­றவின் போது வேதனை ஏற்­ப­டலாம். யோனியில் பூசும் சில கிறீம் மருந்­துகள் உதவும். உறவின் உச்ச நிலையை எட்ட முடி­யாமை, பாலியல் நாட்­ட­மின்மை போன்ற பெண்­களின் பிரச்சினை­க­ளுக்கு அதற்­கான மருத்­துவ நிபு­ணரை நாட வேண்டி இருக்கும்.

தலைச்­சுற்று மயக்கம்

தலைச்­சுற்று, தலை அம்மல், ஒண்­டுமே தெரி­யாத மாதிரி வருதல், மயக்­க­மாக வருதல், விழுத்தப் பார்க்­குது என்­றெல்லாம் பல­வாகச் சொல்­லு­வார்கள். இவைகள் யாவும் குருதிச் சுற்­றோட்­டத்­து­டனும் இரத்த அழுத்­தத்­து­டனும் தொடர்­பு­டைய விட­யங்கள்.

படுக்­கை­யி­லி­ருந்து அல்­லது கதி­ரை­யி­லி­ருந்து எழும்­போது அவ­ச­ர­மாக எழும்­பாது நிதா­ன­மாக எழுந்தால் இத்­த­கைய நிலை ஏற்­ப­டாது. இலாஸ்டிக் ஸ்டொக்கிங் அணி­வது சில­ருக்கு உதவக் கூடும்.கார­ண­மா­னது சோடியம் சத்து குறை­வ­தாக இருந்தால் உணவில் உப்பின் அளவைச் சற்று அதி­க­ரிக்­கும்­படி மருத்­துவர் ஆலோ­சனை கூறக் கூடும்.

பாதத்தை பாது­காத்தல்

ld1029  நீரிழிவு நரம்புப் பாதிப்புகளும் தீர்வுகளும்  ld1029நரம்புப் பாதிப்பு உள்­ள­வர்கள் தங்கள் பாதங்­களின் பாது­காப்பில் மிகுந்த அக்­கறை செலுத்த வேண்டும். பாதத்தில் உணர்வு குறை­வதால் காயங்கள், உர­சல்கள் போன்­றவை ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாகும்.

அவற்றில் கிருமி தொற்று ஏற்­பட்­ட­போதும் வலி தெரி­யா­ததால் அவை பெருகும் வரை நோயா­ளியின் கவ­னத்தை ஈர்ப்­ப­தில்லை. அத­னால்தான் நீரி­ழிவு நோயா­ளர்கள் பலரும் தங்கள் கால் விரல்கள், பாதம், கால் என அங்­கங்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்ற வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு ஆளா­கி­றார்கள். புகைத்­தலும் சேர்ந்தால் பாதிப்பு பல மடங்­காக அதி­க­ரிக்கும்.

போரினால் அங்­கங்­களை இழக்க நேர்ந்­த­வர்­களை தவிர்த்­து­விட்டுப் பார்த்தால், அங்க இழப்­பு­க­ளுக்கு முக்­கிய காரணம் நீரி­ழிவு நரம்புப் பாதிப்­புத்தான். எனவே ஒவ்­வொரு நீரி­ழிவு நோயா­ளியும் தமது பாதங்­களில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

இளஞ்­சூட்டு நீரினால் தினமும் பாதங்­களைக் கழுவ வேண்டும். கடும் சூடுள்ள நீர் ஆகவே ஆகாது. நீரினுள் நீண்ட நேரம் கால்­களை வைத்­தி­ருப்­பது கூடாது. இது அவற்றை மென்­மை­யாக்கி நோய் வர வாய்ப்­ப­ளித்­து­விடும். மென்­மை­யான சவர்­க் கா­ரத்தை மட்டும் உப­யோ­கிக்க வேண்டும். விரல்­க­ளுக்கிடையே உள்ள நீரை மென்­மை­யான டவ­லினால் துடைத்து அகற்ற வேண்டும்.

பாதங்­களை தினமும் பூர­ண­மாகப் பரி­சோ­திக்க வேண்டும். பாதங்­களை நேர­டி­யாகப் பார்ப்­பது சிரமம் ஆதலால், ஒரு கண்­ணா­டியை கீழே பிடித்து அதன் விம்­பத்தின் ஊடாகத் தெளி­வாக பார்க்­கலாம்.பாதங்­களை சொரப்­பின்றி ஈரப்­ப­த­மாக வைத்­தி­ருக்க லோசன்­களை உப­யோ­கிக்­கலாம். இருந்­த­போதும் கால் விரல் இடுக்குள் இடையே அவற்றைப் போடுவது ஆகாது.

கால் விரல் நகங்­களை வெட்டி அகற்றும் போது வளைத்து வெட்­டு­வதைத் தவிர்க்க வேண்டும். வளைத்து வெட்­டும்­போது நகங்­க­ளுக்கு அருகில் உள்ள சருமம் காய­முறக் கூடும். இதனால் கிருமி தொற்­று­வது அதி­க­மாகும். பாதணிகள் அணியாது ஒரு போதும் வெளியே செல்லக் கூடாது. பாதணிகள் இறுக்கமானதாக இருக்கக் கூடாது. சொக்ஸ்கள் தடித்தவையாகவும் மென்மை யானவையாகவும் பருத்தியிலானதாகவும் இருக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News