ilakkiyainfo

ilakkiyainfo

பக்ரீத் பண்டிகை’ ..’இந்து பெண்ணின் பிரேதம் சுமந்து’.. இஸ்லாமியர்கள் சொன்ன ஸ்லோகம்.. நாடே நெகிழ்ந்த சம்பவம்!

பக்ரீத் பண்டிகை’ ..’இந்து பெண்ணின் பிரேதம் சுமந்து’.. இஸ்லாமியர்கள் சொன்ன ஸ்லோகம்.. நாடே நெகிழ்ந்த சம்பவம்!
August 12
13:52 2019

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 19 வயது பெண் சோனி. இவரின் தந்தை ஹேரிலால். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.

தாய் இருதய நோயாளி. இவர்களால் சரிவர உடலை இயக்கி எழக்கூட முடியாத சோக நிலையில், சோனியின் குடும்பத்தை அவரது சகோதரர்தான் கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் அண்மையில் சோனிக்கு மலேரியா நோய்த்தொற்று ஏற்பட்டது; சிகிச்சைப் பலனின்றி இறுதியில் சோனி மரணமடைந்துவிட்டார்.

எனினும் சோனியின் சகோதரர் மிகவும் கஷ்டப்படுபவர் என்பதால், இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல் தவித்துள்ளார்.

இதுதெரிந்ததும், அருகருகே வீடுகளில் இருந்த முஸ்லீம் மக்கள் சோனியின் இறுதிச் சடங்கை இந்து சடங்கு முறைப்படி செய்து உதவ முன்வந்த நிகழ்வும் நெகிழவைத்துள்ளது.

photo-muslim-men-in-varanasi-helps-hindu-womans-cremation  பக்ரீத் பண்டிகை' ..'இந்து பெண்ணின் பிரேதம் சுமந்து'.. இஸ்லாமியர்கள் சொன்ன ஸ்லோகம்.. நாடே நெகிழ்ந்த சம்பவம்! photo muslim men in varanasi helps hindu womans cremation

சோனியின் இறுதிச் சடங்கை முழுவதுமாக கவனித்த இஸ்லாமிய இளைஞர்கள், ஊர்வலத்திலும் சோனியின் பிரேதத்தை தோளில் சுமந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்து சமய சடங்குப்படி, சோனியை சுமந்து செல்லும்போது, ராம் நாம் சத்யா ஹை என்கிற ஸ்லோகத்தையும் உச்சரித்தபடி சுமந்துசென்றுள்ளனர்.

சோனியின் உடலை தோளில் சுமந்து சென்ற ஷகீல் என்கிற இஸ்லாமியர் இதுபற்றி பேசும்போது, ‘வாழ்க்கையின் கடைசி என்பது மரணம்தான்.

ஆனால் சிறு சிறு முரண்களுக்குள்ளும் பிரச்சனைகளுக்குள்ளும் நாம் நமக்குள் போரடி பிரிந்து கிடக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் சம்பவம் நடந்த இந்த நாள்(ஆகஸ்ட் 12, இன்று), இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை என்பது இதில் மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News