ilakkiyainfo

ilakkiyainfo

பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்

பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்
April 20
11:14 2019

காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது.

ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓர் ஆண் குழந்தையை கூட பெற்று தரவில்லை என்ற காரணத்தினால் அவர் மனைவியை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியை கொன்ற அந்த நபர் பிறகு தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார். இவர்களது மூத்த மகளுக்கு 14 வயதும், இளைய மகளுக்கு நான்கு மாதமும், மற்ற குழந்தைகளுக்கு முறையே 12, 10 மற்றும் எட்டு வயதாகிறது.

இந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரிலிருந்து சுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனந்த்பூர் சாஹிப் என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது.

“ஆண் குழந்தை பிறக்காததை மையமாக கொண்ட குடும்ப வன்முறைகள் நடப்பது பஞ்சாப்பில் அரிதான ஒன்றல்ல,” என்று கூறுகிறார் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி குர்ஜித் சிங். “இந்த சம்பவம் மிகவும் மோசமானது.

தங்களது தாயை இழந்த அதிர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் எங்களை அப்பாவித்தனமாக பார்த்தன. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.

பஞ்சாப்பை பொறுத்தவரை, கடந்த பல தசாப்தங்களாக பெண் குழந்தைகள் இருப்பதை கண்டறிந்தவுடன் அந்த கருவை கலைக்கும் போக்கு சாதாரணமான ஒன்றாக இருந்து வருகிறது.

_106522216_bb650cdf-3dfd-402d-8efc-89b176f27bb6 பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன் பஞ்சாபில் ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்த விரக்தியில் மனைவியை கொன்ற கணவன் 106522216 bb650cdf 3dfd 402d 8efc 89b176f27bb6

இருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்கிற்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதன் காரணமாக கருக்கலைப்பு சம்பவங்கள் குறைந்து வருகின்றன.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பார்க்கும்போது, பஞ்சாபில் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் என்ற அளவில் விகிதாச்சாரம் உள்ளது. இது தேசிய அளவிலான விகிதாசாரத்தைவிட 45 குறைவாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 43 வயதாகும் ராகேஷ் குமார், தங்களுக்கு ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக தனது மனைவி அனிதா ராணியை (35) கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியை கொன்ற பிறகு, கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News