ilakkiyainfo

ilakkiyainfo

‘பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!! (தந்தையர் தின கவிதை)

‘பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!!  (தந்தையர் தின கவிதை)
June 20
20:57 2014

 

எத்தனை   ஜென்மமோ
அத்தனை   ஜென்மத்திலும்
தந்தை  எனும்  வரத்தில்
நீ  எனக்கு  வேண்டுமப்பா!

குழந்தையை போன்ற
உந்தன்  புன்சிரிபை – நான்
பார்க்கும்  நொடிகளெல்லாம்
யுகங்களாக  வேண்டுமப்பா….!

சின்னஞ்சிறு   வயதிலும்
சிரித்தழும்     காலத்திலும்
இன்றைய    இந்த
இன்னத      சூழலிலும் – என்
வாழ்வின்    கதவுச் சாவி
என்றும்   நீயேயப்பா!

என் பெயரை   நீ சொல்லி
அழைக்கும்    நொடிகளெல்லாம்
மறுபிறவி     எடுத்து வந்தேன்
மகளாக    நான்   உன்னிடம்…….

அப்பாவின் வாழ்வில் வந்த
அரிய பொருள்   நானே
என்றும்   சொல்வேன்
ஏறு போல்   நானதை!

சொர்கமே   என்னை
நெருங்கி   வந்தாலும்
அதிலும்   சொர்கம் – என்
அப்பாவின்   காலடி மண்
என் நெற்றி   நீறாவதே!

பத்து மாதம் தாய் சுமக்க
மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!

துயில் குழம்பி நான்
சிறுவயதில்  சினந்தபோது
தூக்கம் விட்டு   எழுந்திடுவார்
பால் கரைத்து தந்திடுவார்

இன்றுவரை நானவரை
அப்பா   என்றழைத்தால்
அணைத்திடுவார் எனனை
அவர் அன்பிற்கு எல்லை ஏது!

ஆய அரிய கனியென
ஆய்ந்து விட்டாய் என்னை
சாயங்கால   நேரத்தில்
தோய விடாய் என்னை
இத்தனை  செய்து – நீ
பக்குவமாய் வளர்த்தாய்
என் அன்பு அப்பாவே

மாலை நேர நினைவில்
மனத்தில் மௌனமாக – ஒரு
மயக்க வினா – என்
அப்பா இவ்வுலகில் உன்னையல்லாய் யாரப்பா?

வர்னிகா சிவபாலன்
க.பொ.த.உயர்தரம்

mahajana-virakesari2  'பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!!  (தந்தையர் தின கவிதை) mahajana virakesari2

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News