பந்தால் அடித்த ரபாடாவுக்கு சிக்ஸர் மூலம் பதிலடி கொடுத்த கோலி – வைரலாகும் வீடியோ

இந்நிலையில் 2-வது ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென்ஆப்பரிக்க 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்தபோது ககிசோ ரபாடா வீசிய பந்து ஓன்று கோலியின் பேட்டில் பட்டு விலா பகுதியில் பலமாக தாக்கியது.
இதில் கோபமடைந்த கோலி, ரபாடா வீசிய அடுத்த பந்தை பை-லெக் திசையில் பலமாக தூக்கி அடித்தார். அந்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பி ரபாடாவுக்கு, விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment