ilakkiyainfo

ilakkiyainfo

பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!!

பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!!
September 01
12:23 2014

தம்மை இளமை   தோற்­றத்­து­டனும் அழ­கா­கவும்  காட்ட யாருக்குத் தான் விருப்பம் இல்லை. அந்த விருப்­பத்தின் அடிப்­ப­டையில் தோன்­றிய தேடல் கிழ­வி­யையும் கும­ரி­யாக காட்டும் அள­விற்கு மாயை வியா­பித்­துள்­ளது.

அதன் பிரதிபலன் இன்று பல நாடு­க­ளிலும் அழகு அல்­லது முக­மாற்று சத்­திர சிகிச்­சை­களை மேற்­கொள்ளும் ‘பியூட்டி மாபியா’ வுக்குள் பலரை ஈர்த்துள்ளது.

அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா உள்­ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடு­க­ளி­லேயே பர­வ­லாக காணப்­படும் இந்த அழகு சத்­திர சிகிச்­சைகள் இன்று வளர்ச்சி அடைந்­து­வரும் இலங்கைப் போன்ற நாடு­க­ளிலும் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளுக்கு நிக­ராக பர­வ­ல­டைந்­துள்­ளதை மறுப்­ப­தற்­கில்லை.

இன்று இலங்­கையில்   மூலை முடுக்­கெல்லாம் ‘பியூட்டி பாலர்’ என்ற நாமத்­துடன் இந்த வேலையை முன்­னெ­டுக்கும் வர்த்­தகம் சார் நிலை­யங்கள் ஏராளம்.

எனினும் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி பம்­ப­லப்­பிட்டி , விசாகா வீதியில் அமைந்­துள்ள ‘கொஸ்­மடிக் சேர்­ஜரி கிளினிக்’ என்ற அழகு சிகிச்சை நிலை­யத்தில் இடம்­பெற்ற சம்­பவம் இவ்­வா­றான அழகு சிகிச்சை நிலை­யங்கள் தொடர்பில் பலரை ஒரு­முறை யோசிக்க வைத்­தது.

குறித்த அழகு சிகிச்சை நிலை­யத்தில் தோல் சுருக்கம் தொடர்­பி­லான சத்­திர சிகிச்சை ஒன்­றுக்கு சென்ற கொழும்பு, லேடி ரிட்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் பிளாஸ்டிக் சத்­திர சிகிச்சை வைத்­தி­ய­ரான 47 வய­து­டைய பிரி­யங்கா எனப்­படும் பெண் வைத்­தியர் சிகிச்­சை­களின் நடுவே உயி­ரி­ழந்­த­மையே இதற்­கான கார­ண­மாகும்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை அழகு சிகிச்­சை­களின் இடை நடுவே அல்­லது அது சார்ந்து பதி­வாகும் முதல் மரணம் வைத்­தியர் பிரி­யங்­காவின் மர­ண­மல்ல.

சுகா­தார அமைச்சின் மேல­திக செய­லாளர் அமல் ஹர்ஷ டி சில்­வாவின் தக­வல்­களின் படி வைத்­தியர் பிரி­யங்­காவின் மரணம் அழகு சிகிச்சை தொடர்பில் இலங்­கையில் பதி­வான நான்­கா­வது மர­ண­மாகும்.

இவ்­வாறு மர­ண­மான நான்கு பேருமே சமூ­கத்தில் உயர் மட்­டங்­களில் வாழ்ந்­த­வர்கள். இந்த வைத்­தி­யரை தவிர உயி­ரி­ழந்­த­வர்­களில் பேரா­சிரியர் ஒரு­வரும் அடங்­கு­கின்றார். இந் நிலையில் தான் இலங்­கையில் உள்ள அழகு சிகிச்சை நிலை­யங்கள் தொடர்பில் இரு முறை யோசிக்க வேண்­டிய நிலைக்கு அதன் பய­னா­ளர்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி இடம்­பெற்ற சம்­பவம் இதனை உணர்த்­தி­யி­ருக்­கின்­றது. ‘கொஸ்­மடிக் சேர்­ஜரி கிளினிக்’ என்ற அந்த அழகு சிகிச்சை நிலை­ய­மா­னது பம்­ப­லப்­பிட்டி விசாகா வீதியில் உள்ள குடி­யி­ருப்­புக்­களுள் அமைந்த ஒரு தொடர்­மா­டி­யி­லேயே நடத்­தப்­பட்டு வந்­தது.

nimal kame  பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!! nimal kameநிமல் கமகே

இதனை நடத்தி வந்­தவர் இலங்கை மருத்­துவ கல்­லூ­ரியின் எம்.பி.பி.எஸ்.பட்டம் பெற்ற சுமார் 50 வய­து­டைய வைத்­தியர் நிமல் கமகே என்­ப­வ­ராவார்.

அழகு சிகிச்சை மேற்­கொள்­ப­வர்­களில் அல்­லது அது சார்ந்த ஆர்வம் உடை­ய­வர்­களில் இவரை தெரி­யா­த­வர்கள் இலங்­கையில் இருக்க முடி­யாது எனும் அள­வுக்கு பிர­சித்­த­மா­னவர்.

அடிக்­கடி தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் தோன்றி அழ­குக்­கு­றிப்பு சொல்லி, அழகு சிகிச்சை தொடர்பில் விளக்கி பல பெண்­களின் மனங்­க­ளிலும் இடம் பிடித்­தி­ருந்த நிமல் கம­கே­யிடம் சிகிச்­சை­க­ளுக்­காக நாளாந்தம் வருவோர் ஏராளம்.

தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களை விட தான் அமெ­ரிக்­காவில் அழ­குக்­கலை சிகிச்­சைகள் தொடர்பில் பயிற்­சி­களை முடித்­தவர் எனவும் 25 வருட அனு­பவம் உள்­ளவர் எனவும் அழகு சிகிச்சை தொடர்­பி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்ட    இணை­யத்­த­ளத்தில் தனது படங்கள் மற்றும் சிகிச்சை முறை­களின்  படங்­க­ளுடன் வைத்­தியர் நிமல் கமகே முன்­னெ­டுத்த பிர­சா­ரங்­களும் அவரை நோக்கி அழகு சிகிச்சைப் பிரி­யர்­களை இழுத்­தெ­டுத்­தது எனலாம்.

இலங்­கையில் பிர­ப­ல­மான நடிகர், நடி­கைகள், அர­சியல் தலைமை­களின் மனைவி மக்­கள்கள் என வைத்­தியர் நிமல் கம­கேயை நாடி வருவோர் ஏராளம்.

இந் நிலையில் தான் கடந்த 12 ஆம் திகதி ஏற்­க­னவே திட்­ட­மிட்டு செலுத்­தப்­பட்ட 10 ஆயிரம் ரூபா முற்­ப­ணத்­துக்கு அமைய பெறப்­பட்ட நேரத்தில் வைத்தியர் பிரி­யங்கா பம்­ப­ல­பிட்­டியில் உள்ள அந்த அழகு சிகிச்சை நிலை­யத்­துக்கு சென்­றுள்ளார்.

piriyanka  பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!! piriyankaவைத்­தியர் பிரி­யங்கா
தான் கட­மை­யாற்­றிய லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து அலு­வ­லக விடு­முறை எடுத்­துக் கொண்டுள்ள அந்த வைத்­தியர் தனது  தோழி ஒருத்தியிடம் மட்டும் தான் போகும் நோக்­கத்தை குறிப்­பிட்­டு­விட்டு பம்­ப­ல­பிட்­டியை அடைந்த போது நேரம் நண்­பகல் 12.30 ஐ கடந்­தி­ருந்­தது.

வைத்­தியர் பிரி­யங்கா 10 ஆயிரம் ரூபா முற்­பணம் செலுத்­தி­யி­ருந்­தது liposuction என்ற பெயரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் தோல் சுருக்க நீக்கம் தொடர்­பி­லான சிகிச்­சை­க­ளுக்­காகும்.

இந்த சிகிச்­சை­க­ளுக்கு இலங்­கையை பொறுத்­த­வரையில் சுமார் ஒரு இலட்சம் ரூபா வரையில் அற­வி­டப்­ப­டு­கின்­றது. இந் நிலையில் தான் வங்கி ஊடாக செலுத்­திய முற்­ப­ணத்தை விட செலுத்த வேண்­டி­யி­ருந்த 90 ஆயிரம் ரூபா­வி­னையும் அங்கு சென்­றுள்ள வைத்­தியர் பிரி­யங்கி நேர­டி­யா­கவே செலுத்­தி­யுள்ளார்.

இந் நிலையில் பிற்­பகல் 1.15 மணி­ய­ள­வி­லேயே வைத்­தியர் பிரி­யங்க சத்­திர சிகிச்­சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந் நிலையில் அவ­ருக்கு சத்­திர சிகிச்­சைக்கு முன்னர் ஒரு வகை­யான நோய் எதிர்ப்பு நிவா­ரணி ஊசி ஒன்று ஏற்­றப்­பட்­டுள்­ளது. செப­ரொக்ஸி என்ற பெயரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் அந்த நோய் எதிர்ப்பு நிவா­ரணி ஊசி பென்­சிலின் மருந்து வகையை சேர்ந்­தது.

இந்த நிவா­ரண ஊசி மருந்தின் 2 மில்லி லீற்­றர்கள் வரையில் வைத்­தியர் பிரி­யங்­காவின் களுத்துப் பகு­தியில் உள்ள நரம்பில் ஏற்­றப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே அவர் உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

நிவா­ரணி ஊசியை ஏற்­றியதையடுத்த 9வினா­டியில் வைத்­தியர் பிரி­யங்­கா­வுக்கு கடு­மை­யான இருமல் ஏற்­பட்­டுள்­ள­துடன் அதிக நேரம் அந்த இருமல் நீடிக்க முன்­ன­ரேயே அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

இந் நிலை­யி­லேயே ஸ்தலத்­துக்கு சென்ற பம்­பலப்பிட்டி பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். பம்­ப­ல­ப்பிட்டி பொலி­ஸாரின் விசா­ர­ணை­க­ளுக்கு மேல­தி­க­மாக கொழும்­புக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் ஆலோ­ச­னையின் படி கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸா­ருக்கும் விசா­ர­ணைகள் கைய­ளிக்­கப்­பட்­டன.

குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஷான் டீ சில்­வாவின் பூரண கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜயரத்ன தல­மை­யி­லான பொலிஸ் குழு விசா­ர­ணைக்கு விரைந்து அன்­றைய தினம் இரவே புதுக்­கடை மேல­திக நீதிவான் மஹிஷ்டா அத்­த­பட்­டு­வுக்கு அறிக்கை சமர்­பித்து பெற்­றுக்­கொன்ட கைது உத்­த­ர­வுக்கு அமைய வைத்­தியர் நிமல் கமகேயை கைது செய்­தனர்.

செப­ரொக்ஸி என்ற நோய் தடுப்பு நிவா­ர­ணிகள் ஒரு போதும் அழகு சிகிச்சை தொடர்பில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என்­கின்றார் ருகுணு பல்­க­லைக்­க­ழகத்தின் சட்ட வைத்­திய பீடத்தின் பிர­தானி விஷேட சட்ட வைத்­தியர் யூ.சீ.பீ.பெரேரா.

பென்­ஸிலின் வகையை சேர்ந்த இவ்­வ­கை­யான மருந்­துகள் பல­ருக்கு ஒத்­துக்­கொள்­வ­தில்லை என குறிப்­பிடும் விஷேட சட்ட வைத்­தியர் யூ.சீ.பீ.பெரேரா இவ்­வ­கை­யான மருந்­துகள் பக்க விளை­வுகள் மிகக் குறைவா­னது எனவும் எனினும் அதனை ஒரு­வ­ருக்கு வழங்க முன்னர் அவ­ருக்கு அது ஒத்­துக்­கொள்ளுமா என அறிந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம் எனவும் குறிப்­பி­டு­கின்றார்.

எனினும் இந்த சம்­பவம் குறித்து கைது செய்­யப்­பட்­டுள்ள வைத்­தியர் நிமல் கமகே கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தில் வைத்­தியர் பிரி­யங்­காவின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­யவே நிவா­ரண ஊசி மருந்து வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜய­ரத்ன தலைமை­யி­லான பொலிஸ் குழு­வி­ன­ருக்கு அவர் வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்­களை சுருக்­க­மாக தரு­கின்றோம்.

‘இவ்­வ­கை­யான சத்­திர சிகிச்­சை­களில் எவ்­வி­த­மான நிவா­ரண மருந்­து­க­ளையும் நான் பயன்­ப­டுத்து­வ­தில்லை. எனினும் வைத்­தியர் பிரி­யங்­காவின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க அந்த நோய் தடுப்பு நிவா­ரண மருந்து அவ­ருக்கு வழங்­கப்­பட்­டது.

குறித்த மருந்தின் 10 மில்லி லீற்­றர்­களை ஊசி மூலம் நான் ஏற்ற தயா­ரானேன். முதல் இரு மில்லி லீற்­றர்­க­ளையும் நான் ஏற்­றிய போது அவர் படுத்­தி­ருந்த கட்­டி­லி­லி­ருந்து இரு­மிய வண்ணம் எழுந்திருந்தார்.. இதனை அடுத்து ஓரிரு தட­வைகள் இரு­மிய பெண் வைத்­தியர் ஒரே தட­வை­யாக உயி­ரி­ழந்­து­விட்டார்.

பெண் வைத்­தியர் பிரி­யங்­காவின் கையில் உள்ள நரம்பு சரி­யாக தென்­ப­டா­ததால் கழுத்தில் உள்ள நரம்பில் ஊசி ஏற்­றப்­பட்­டது. கழுத்தில் ஊசி ஏற்­றப்­பட்­ட­தற்கு வேறு விஷேட கார­ணங்கள் எதுவும் இல்லை.

அமெ­ரிக்­காவில் அழகு சத்­திர சிகிச்சை ஒன்­றுக்­காக நான் இலங்கை மதிப்பில் 10 இலட்சம் ரூபா வரை அற­விட்­டுள்ளேன். இந்த வைத்­திய சத்­திர சிகிச்சை முறை­மையை அமெ­ரிக்­கா­வி­லேயே நான் கற்­றுக்­கொண்டேன்.

அத்­துடன் 1981 ஆம் ஆண்டு மருத்­துவ கல்­லூ­ரி­யி­லி­ருந்து நான் வெளி­யே­றி­யதும் நீர்­கொ­ழும்பு மற்றும் பாண­ந்துறை வைத்­தி­ய­சா­லை­களில் பணி­யாற்­றினேன்.

அதனை தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு கலி­போர்­னி­யாவில் அழகு சிகிச்சை தொடர்பில் பயிற்­சி­களை பெற்றேன்.’ என குறிப்­பிட்­டுள்ள அவர் சான்­றி­தழ்கள் பல வற்றை பொலி­ஸ­ாருக்கு காட்­டி­யுள்ளார்.

குறித்த சான்­றி­தழ்கள் ஒவ்­வொன்­றிலும் வைத்­தி­யரின் பெய­ரா­னது மாற்­றங்­க­ளுடன் இருந்­ததால் அவ­ரது தகை­மைகள் குறித்தும் பொலி­ஸாரின் சந்­தேகம் திரும்­பி­யுள்­ளது. அது தொடர்பில் புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி எம்.எம்.சஹாப்­தீ­னிடம் அறிக்கை தாக்கல் செய்­துள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் வைத்­திய சபையின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதனை விட வைத்­தியர் நிமல் கமகே நடத்தி வந்த குறித்த அழகு சிகிச்சை நிலை­யத்தில் வர­வேற்­ப­றை­யிலும் ஏனைய வேலை­க­ளுக்கும் என நான்கு தாதி­யர்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களை தாதியர் என அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது. ஏனெனில் இவர்கள் தாதியர் பயிற்சி பெற்­ற­வர்கள் அல்ல. கல்விப் பொதுத்­த­ரா­தர சாத­ாரண தரம் வரை மட்­டுமே பயின்­றிருக்கும் இவர்கள் வைத்­தியர் நிமல் கம­கேவின் அறி­வு­ரை­களின் பிர­காரம் குறைந்த ஊதி­யத்­துக்கு வேலை செய்­த­வர்கள் என விசா­ர­ணை­களை மேற்கொண்டு­வரும் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் சுட்­டி­காட்­டினார்.

சந்­தேக நப­ரான வைத்­தி­ய­ருக்கு 50 வயது என குறிப்­பிடும் பொலிஸார் அவரும் இவ்­வாறு அழகு சத்­திர சிகிச்சை மேற்­கொண்­டவர் என குறிப்­பிட்­டனர். இவ்­வ­கை­யான சிகிச்­சை­களின் பின்னர் தனது உண்­மை­யான வயதை விட 10 வரு­டங்கள் வரை வயதை குறைத்து ஒரு­வரை இள­மை­யாக காட்டக் கூடிய சக்தி இந்த சிகிச்­சை­க­ளுக்கு உள்­ள­தாக குறிப்­பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண அத­னாலோ என்­னவோ பலரும் இவ்­வ­கை­யான சிகிச்­சை­களை மேற்­கொள்ள ஆசைப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்டார்.

அத்­துடன் வைத்­தியர் நிமல் கமகே இந்த அழகு சிகிச்சை நிலை­யத்தை நடத்­தி­வந்த இடத்தை விஷேட பொலிஸ் குழு சுற்­றி­வ­ளைத்த போது காலா­வ­தி­யான ஊசிகள், மருந்­துகள் உள்­ளிட்­ட­வற்றை கைப்­பற்ற முடிந்­த­தாக தெரி­வித்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண சம்­பவம் குறித்து மிக விரி­வான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு, புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றின் விஷேட உத்­த­ர­வுக்கு அமைய கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி உள்­ளிட்ட சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் இருவர், அரச இர­சா­யண பகுப்­பாய்­வாளர், ஒட்­டு­றுப்பு சத்­தி­ர­சி­கிச்சை (பிளஸ்டிக் சத்­திர சிகிச்சை )

தொடர்­பி­லான விஷேட வைத்­திய நிபுணர் ஒருவர், மயக்க மருந்து தொடர்­பி­லான நிபுணர் ஒருவர்  உள்ளிட்ட அறு­வ­ரைக்­கொண்ட விஷேட குழுவே இந்த சோதனை நட­வ­டிக்­கை­களை பொலி­ஸா­ருடன் இணைந்து மேற்­கொண்­ட­தாக  சுட்­டிக்­காட்­டிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண இதன் போதே இந்த காலா­வ­தி­யான மருந்­துகள் மீட்­கப்­பட்­ட­தா­கவும் அது தொடர்பில் மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் குறித்த அழகு சிகிச்சை நிலையம் சட்ட விரோ­த­மானதா என்ற கோணத்­திலும் பொலிஸார் விசாரணைகளை முன்­னெ­டுத்­துள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

comp-sex  பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!! comp sexஇது இவ்­வா­றி­ருக்க குறித்த சிகிச்சை நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் கைப்­பற்­றிய மடிக்­கணணி ஒன்­றி­லி­ருந்து பொலி­ஸா­ருக்கு பல்­வேறு தகவல்கள் கிடைத்­துள்­ளன.

இந் நிலையில் தான் பொலிஸார் மேற்­கொண்­டுள்ள விசா­ர­ணை­களில் குறித்த அழகு சிகிச்சை நிலையம் நடிகர், நடி­கைகள் மற்றும் பிர­ப­லங்கள் பலரால் அழகு சிகிச்­சை­களின் பொருட்டு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இது­வரை 14 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட அழகு சத்­திர சிகிச்­சை­களை தான் மேற்­கொன்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள சந்­தேக நப­ரான வைத்­தியர் இலங்­கையில் சுமார் 2000 பேர் வரையில் தன்­னிடம் இவ்­வாறு சிகிச்சைப் பெற்­றுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அவ்­வாறு சிகிச்சை பெற்­ற­வர்­களின் விப­ரங்கள் வைத்­தி­யரின் கணணியில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் சுட்­டிக்­காட்­டினார்.

இதனை விட குறித்த வைத்­தியர் சிகிச்­சை­களின் இடை நடுவே பாலியல் எதி­ராக அமெ­ரிக்­காவில் குற்­றச்­சாட்டு இருந்­துள்­ள­தா­கவும் அதன் பின்­னரே இவ்­வாறு அவர் இங்கு வந்­துள்­ள­த­ாகவும் பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பிலும் வைத்­தியர் நிமல் கமகே விப­ரித்­துள்ளார்.

‘ ஆம் எனக்கு எதி­ராக பாலியல் குற்­றச்­சாட்­றொன்று 1992 ஆம் ஆண்டு அமெரிக்­காவில் சுமத்­தப்­பட்­டது. அது தொடர்பில் வழக்கும் தொட­ரப்­பட்­டது. எனது சேவை­யா­ளர்கள் இரு­வரால் அது தொட­ரப்­பட்­டது. அந்த வழக்கில் அவர்கள் தோல்வி அடைந்­தனர். அதற்­கப்பால் சொல்­வ­தற்கு ஒன்­று­மில்லை’ என அந்த குற்­றச்­சாட்டு தொடர்பில் வைத்­தியர் நிமல் கமகே குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே கடந்த வார இறுதியில் அல்­லது இந்த வார ஆரம்­பத்தில் வைத்­தியர் நிமல் கமகே தொடர்பில் மீண்டும் அவ­தானம் செலுத்­தப்­பட்ட செய்திகள் இலண்­ட­னி­லி­ருந்து பம்­ப­லப்­பிட்டி பொலிஸா­ருக்கு செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்று ஊடாக அல­சப்­பட்­டது எனலாம்.

கடந்த சனிக்­கி­ழமை (23.08.2014) பம்­ப­லப்­பிட்டி பொலி­ஸா­ருக்கு பெண்­ணொ­ருவர் தொலை நகல் ஊடாக அனுப்­பி­யுள்ள முறைப்­பா­டொன்றில் ‘ தான் இரு மாதங்­க­ளுக்கு முன்னர் வைத்­தியர் நிமல் கமகேயிடம் அழகு சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்­ட­தா­கவும் அதனை தொடர்ந்து நோய் வாய்ப்­பட்ட நிலையில் இலங்­கையில் உள்ள வைத்­தி­ய­சாலையில் சிகிச்சைப் பெற்று தற்­போது லண்­டனில் உள்ள வைத்­தி­ய­சாலை ஒன்றில் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்று வரு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதனை விட குரு­ணாகல் பிர­தே­சத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒரு­வ­ருக்கும் வைத்­தியர் நிமல் கம­கே­யிடம் சிகிச்சை பெற்ற பின்னர் தோல் வியாதி ஒன்று அதி­க­ரித்­துள்­ள­தாக முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. எனினும் அந்த முறைப்பாடு தொடர்பில் இது­வரை எவ்­வித உத்­தி­யோக பூர்வ அறி­விப்­புக்­களும் வெளி­யா­க­வில்லை.

இது தொடர்பில் குரு­ணாகல் பொலி­ஸா­ருக்கு சிறு­மியின் பெற்றோர் முறை­யிட்­டுள்­ள­தக கூறப்­படும் நிலையில் இந்த வைத்­தி­யரின் சிகிச்­சை­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பலர் இன்னும் இருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். அவ்­வா­றான முறைப்பா­டுகள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அவை தொடர்­பிலும் விசா­ர­ணை­களை முன்னெடுக்க எதிர்ப்­பார்த்­துள்­ளனர்.

அழகு மோகத்தில் செல்லும் பல­ரிடம் பல இலட்­சங்­களை சுருட்­டு­வ­தற்­காக இந்த வைத்­தியர் காலா­வ­தி­யான மருந்­து­களைக் கூட தந்து சிகிச்­சை­க­ளுக்­காக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் உயிரிழந்த வைத்தியர் பிரியங்காவின் மரணத்துக்கான காரணங்களை கண்டறிய தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதுடன் வைத்தியர் பிரியங்காவின் உடல் பாகங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தி அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இன்று அனைத்துமே பணத்தை மையப் படுத்தி மேற்கொள்ளப்படும் நிலையில் வைத்தியர் நிமல் கமகே உயிர் பறித்த குற்றத் துக்காக சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் உள்ளார். இது தொடர்பி லான வழக்கு விசாரணைகளின் அடுத்த தவணை விசாரணைகள் நடைபெறவுள்ளது.

ஒரு எம்.பி.பி.எஸ். வைத்தி யருக்கு சாதாரண மருத்துவ நடவடிக்கை களை மேற்கொள்ளவே அனுமதி உள்ள நிலையில் இந்த வைத்தியரோ அழகு சிகிச்சை நிலையத்தை நடத்திவந்துள்ளார்.

அழகு சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்த வேறு தகுதிகள் கோரப்படும் நிலையில் சாதாரண மருத்துவ நிலையத்திற்கன அனுமதியின் பேரில் இந்த அழகு சிகிச்சை நிலையம் உரு வாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.

இன்று எவ்வித மருத்துவ ஆலோசனைகளும் இன்றி வெள்ளை தோலுக்காகவும் அழகுக்காகவும் பலதையும் பயன்படுத்தும் நாகரீக மோகத்தின் உச்ச கட்டத்தில் உள்ளவர்களைப் பார்த்து முகப் புத்தகத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த இரு வசனங்களை இந்த கட்டுரையின் இறுதி வசனங்களாக பதிவு செய்கின்றேன்.

‘ ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது ஒரு மொழி.

வெள்ளை என்பது அழகல்ல, அது ஒரு நிறம்’

எம்.எப்.எம்.பஸீர் –

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News