ilakkiyainfo

ilakkiyainfo

பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு

பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு
August 12
18:44 2019

 

பயங்­க­ர­வாதி ஸஹ்ரான் குழு­வி­னரால் முழு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டவன் நான் என சாய்ந்தம­ருது தற்­கொலைத் தாக்­கு­த­லை­ய­டுத்து இடம்­பெற்ற துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் உயி­ரி­ழந்த அஸ்­ரி­பாவின் கணவர் ஜாசிர் தெரி­விக்­கிறார்.

கடந்த 85 நாட்­க­ளுக்கு மேலாக தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் கல்­முனை நீதிவான் நீதி­மன்ற உத்­த­ரவின் பிர­காரம் பிணையில் விடு­த­லை­யான ஜாசிர் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் மேற்­கண்­ட­வாறு கூறினார்.சம்­பவ தினம் நானும் எனது மனை­வியும் எனது தாயின் வீட்டில் தங்கி இருந்தோம்.

saharan.2 பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு saharan

மாலை 7:10 மணி­ய­ளவில் மனை­வியின் தாயார் (மாமி) தொலை­பேசி மூலம் அழைத்து தாங்கள் வசிக்கும் சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்தில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இதனால் அங்­குள்ள தங்கள் வீட்­டுக்கு வர­வேண்டாம் என எனது மனை­விக்கு கூறினார் .

இந்த நேரத்தில் தான் தனது தங்­கை­களை உட­ன­டி­யாகப் பார்க்க வேண்டும் தாயைப் பார்க்க வேண்டும் என மனைவி அஸ்­ரிபா விடாப்­பி­டி­யாக கூற, எனது மனைவி எனது தாயார் எனது மன­நலம் பாதிக்­கப்­பட்ட சகோ­த­ரி­யையும் அழைத்­துக்­கொண்டு மாமியார் வீட்­டுக்கு முச்­சக்­க­ர­வண்­டியில் சென்றேன்.

அப்­போது நீங்கள் ஏன் வந்­தீர்கள் திரும்பிச் செல்­லுங்கள் இங்கே குண்டு வெடித்­துள்­ளது என மாமியார் கூற அவ்­வி­டத்­தி­லேயே நாங்கள் மீண்டும் திரும்பி வீட்­டுக்கு வந்து கொண்­டி­ருந்தோம்.

அவ் வேளையில் பல வெடிச் சத்­தங்கள் துப்­பாக்கி சூட்டு வேட்­டுக்கள் கேட்­டன. முச்­சக்­க­ர­வண்டி மூலம் நாம் எமது தாயின் வீட்­டுக்கு செல்­வ­தற்­காக வந்து கொண்­டி­ருக்கும் போது தான் இரா­ணு­வத்­தினர் எம்மை நோக்கி துப்­பாக்­கியால் சுட்­டனர்.

அவ்­வேளை நான் எனது அடை­யாள அட்­டையை எடுத்துக் கொண்டு உயர்த்­தி­ய­வாறு சுட வேண்டாம் என கூறினேன். அப்­போது எனது காலில் சூடு பட்­டது.

saharan-1.jpg-2-1 பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு saharan 1பின்னர் இறங்கி முச்­சக்­கர­வண்­டியை வீதி ஓர­மாக தள்ள முயற்­சித்­த­போது எனது மனைவி எவ்­வித உணர்வும் இன்றி இரத்த வெள்­ளத்தில் சரிந்து கிடந்தாள். அவரின் தலையில் இருந்து இரத்தம் வெளி­யேறிக் கொண்­டி­ருந்­தது.

 

அவ்­வேளை அவளை காப்­பாற்­று­மாறு கூறினேன். அது மாத்­தி­ர­மன்றி எனது தாயார் எனது சகோ­த­ரியும் சிறு சூட்டுக் காயங்­க­ளுக்கு உட்­பட்­டி­ருந்­தனர் .

இரா­ணு­வத்­தினர் உட­ன­டி­யாக எனது தாய், சகோ­தரி என்­னையும் அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் ஏற்றி வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.

எனது உடம்பில் ஐந்து துப்­பாக்கி ரவைகள் பாய்ந்­தி­ருந்­த­தனை அறிந்தேன். சம்­பவ தினம் இரா­ணு­வத்­தி­னரோ பொலி­ஸாரோ எங்­க­ளது ஆட்­டோவை நிறுத்தச் சொல்­ல­வில்லை.

இரா­ணு­வத்­தினர் இருளில் நின்­றதை நாங்கள் காண­வில்லை. அவ்­வாறு தெரிந்­தி­ருந்தால் முச்­சக்­க­ர ­வண்­டியை நிறுத்­தி­யி­ருப்போம்.

இன்று எனது மனை­வியை இழந்து நான் வாடிக்­கொண்­டி­ருக்­கிறேன் இதற்கு முற்­று­மு­ழு­தான கார­ணத்தை அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்டும்.

நான் வைத்­திய­ சா­லையில் இருக்கும் போதும் தடுப்பு காவலில் இருக்­கும்­போதும் என்னை அர­சி­யல்­வா­தி­களோ நண்­பர்­களோ உற­வி­னர்­களோ யாரும் பார்க்­கவும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

saharan.2. பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு பயங்கரவாதி ஸஹ்ரான் குழுவினரால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் -சாய்ந்தமருது சம்பவத்தில் மனைவியை இழந்த கணவர் தெரிவிப்பு saharanஅவ்­வாறு பார்க்க வரு­ப­வர்­க­ளிடம் பல மணி நேரம் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. இப்­போது எமது சமு­தா­யத்தில் பல­வாறு புர­ளி­களை பேசு­கின்­றனர்.

பாது­காப்புத் தரப்பு வீதித் தடை அல்­லது பாது­காப்பு சமிக்­கை­களை வைத்­தி­ருந்தால் எனது மனை­வியின் உயிர் வீணாக போயி­ருக்­காது.

இதற்கு அர­சாங்­கமே பதில் கூற வேண்டும். இன்று எனது மனை­வியை இழந்து தனி­மையில் வாடு­கிறேன். இன்று நான் எவ்­வித ஜீவ­னோ­பாயம் இன்றி சிர­மப்­ப­டு­கின்றேன்.

என்­னிடம் இருந்த முச்­சக்­கர வண்­டி­யையும் இழக்கும் சூழ்­நி­லைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

தற்போது என்னை விசாரணை மேற்கொண்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நான் நிரபராதி என்று கூறுகின்றனர். தற்போது பிணையில் வந்தாலும் மீண்டும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை வந்தால் மாத்திரமே நீதிமன்றத்துக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் எனக்கு தெரிவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

ராகுல் காந்தி சொன்னது மிகவும் சரி, கற்பழிப்புகளை செய்பவர்கள் BJP காரணகளும் முஸ்லிம்களும் , மோடி [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News