ilakkiyainfo

ilakkiyainfo

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!
October 11
04:01 2017

ஞாபகங்கள் அலாதியானவை. அவை ஒவ்வொரு மனிதரையும் காலத்துக்குக் காலம் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. பொக்கிசமாக புதைந்திருக்கும் நினைவுகள் அனைத்தையும் மனம் மீட்டுப் பார்க்கின்றபோது இதமான ஒரு பசுமை கனக்கும்.

அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களினதும் நிலைமை இற்றைக்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன என்பதைக் காட்டும் படத்தொகுப்பு ஒன்றினை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

early-years-006  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! early years 006

இது யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் பண்பாட்டு நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டையின் கோட்டைக்காடு பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும். விவசாயக் குடும்பம் ஒன்று தமது வளர்ப்புக் காளையொன்றின் முன்னால் நிற்கும் காட்சி. வட்டுக்கோட்டை விவசாயத்திற்கும் மாட்டுவண்டிச் சவாரிக்கும் பெயர்போன ஒரு பிரதேசமாகும்.

Main-street-Colombo-city-1980s  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! Main street Colombo city 1980s1

இது கொழும்பு மாவட்டத்தின் ‘பெட்டா’ பிரதான வீதி ஆகும். இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்ட புகைப்படம். பெட்டா கொழும்பு மாவட்டத்தின் முக்கியமான ஒரு வர்த்தக முக்கியத்துவம்வாய்ந்த இடமாகும்.

hikkaduwa 2 001  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! hikkaduwa 2 001

கிக்கடுவை அல்லது இக்கடுவை கடற்கரையாகும். ஸ்ரீலங்காவின் தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது. 1980ஆம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

59dd282021d7a-IBCTAMIL  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! 59dd282021d7a IBCTAMIL

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணம் கண்டி தலதா மாளிகையின் அன்றைய தோற்றம். இற்றைக்கு 1800ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும்.

Rambutan-fruit-sellers-1905  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! Rambutan fruit sellers 1905

ஸ்ரீலங்காவின் சப்ரகமுவ மாகாணத்தில் பிடிக்கப்பட்ட புகைப்படம். ரம்புட்டான் பழத்திற்குப் பெயர்போன இரத்தினபுரி பகுதியில் 1905ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டது. வீதியோரமாக ரம்புட்டான் வியாபாரத்தில் ஈடுபடும் மூன்று பெண்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

59dd281ff00f2-IBCTAMIL  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! 59dd281ff00f2 IBCTAMIL

ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் ஒரு வீதியோரமாக நடந்து செல்லும் இரண்டு இளம் பெண்கள். வீதியின் மறுபக்கம் எண்ணெய் வண்டில் செல்கின்றது. அன்றைய காலத்தில் வண்டில்களில் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று மண்ணெண்ணெய் விற்கப்பட்டுள்ளது. இன்றைய எண்ணெய்த் தாங்கிகளைப்போல அன்று இந்த வண்டில்கள் பயன்பட்டுள்ளன.

6c6fbc2e0299d449d93ee2c790d83142  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! 6c6fbc2e0299d449d93ee2c790d83142

கொழும்பில் ஒரு பிரதான சாலையில் ஓடும் அரசாங்க பேருந்து ஒன்று. 1970ஆம் ஆண்டளவில் பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏராளமான பேருந்துகள்தான் அன்றைய கால இலங்கையில் முக்கியமான போக்குவரத்துச் சாதனங்களாகும்.

L246-full  பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! L246 fullமட்டக்களப்பின் பிரதான ஏரி. வள்ளங்களில் சென்று மீன் பிடிப்பது இவ்விடத்தின் விசேடமாக இருந்தது. மீன்பாடும் தேன் நாடு என மட்டக்களப்பு அழைக்கப்பட்டதற்கு இது முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது.

இவ்வாறாக இலங்கைத் தீவின் எழில் மிகுந்த காட்சிகள் அந்த நாட்களை மீட்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. ஞாபகங்கள் இன்னும் தொடரும்……….

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News