ilakkiyainfo

ilakkiyainfo

பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர் …(வீடியோ)

பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர் …(வீடியோ)
February 16
20:15 2015
டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு நடக்கிறார்கள்.
அப்போது பாகிஸ்தான் வீரர் மிகவும் கர்வமுடன் காலை தூக்க இந்திய வீரரோ அவரைப் பார்த்த “யோவ் முதல்ல உன் காலைப் பாருய்யா” என்பது போல கண் ஜாடை செய்கிறார். பார்த்தால் பாகிஸ்தான் வீரரின் ஷூவின் அடிப்பக்கம் பிய்ந்து தொங்குகிறது.
இதைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் வீரர் விழிக்க இந்திய வீரர் கண் மூடித் திறக்கும் நேரத்தில் தனது பாக்கெட்டில் இருந்த ஃபெவிகுவிக்கை எடுத்து அவரின் காலணியை ஒட்டி சரி செய்து விடுகிறார்.
இதை பார்த்த பாகிஸ்தான் வீரர் நிம்மதி பெருமூச்சுவிட்டுவிட்டு மறுபடியும் கெத்துடன் திரும்புகிறார். இந்த விளம்பரம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Ice Cream Making In India

Forever In Love : Rajtv’s Special Music Program 2015

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2017
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

சிறந்த சேவை மேலும் தொடரட்டும் [...]

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு [...]

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் [...]

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க [...]

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News