ilakkiyainfo

ilakkiyainfo

பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா?

பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா?
May 24
13:05 2019

பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ‘பாரம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்புதான் திமுகவின் வெற்றிக்கு காரணம்’

இந்தியாவில் நடந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது. பெரும்பாலான இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் அல்லாமல், இடதுசாரிகளின் பலம் என்று கருதப்பட்ட மேற்கு வங்கம், அதோடு மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், பாஜக வலுவாக கால் பதித்திருக்கிறது.

கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, தற்போது 18 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், 26 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.

அதே போல ஒடிஷா மாநிலத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற பாஜக, தற்போது அங்கு எட்டு தொகுதிளில் வெற்றி பெற்றுள்ளது.

இப்படி அனைத்து மாநிலங்களிலும் வெற்றி முத்திரையை பதித்து வரும் பாஜகவால், தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய ஐந்து இடங்களில் பாஜக போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.

பாஜக போட்டியிட்ட தொகுதிகள்

தொகுதி வெற்றி வேட்பாளர் வாக்குகள்                                         இரண்டாம் இடம் வாக்குகள்
தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி (திமுக) 5,63,143    தமிழிசைசௌந்தரராஜன் (பாஜக) 2,15,934
கன்னியாகுமரி வசந்தகுமார் (காங்கிரஸ்) 6,27,235        பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக) 3,67,302
சிவகங்கை கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) 5,66,104        ஹெச். ராஜா (பாஜக) 2,33,860
ராமநாதபுரம் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)4,69,943   நயினார் நாகேந்திரன் (பாஜக) 3,42,821
கோவை பிஆர் நடராஜன்(சிபிஎம்) 5,71,150                சிபி ராதாகிருஷ்ணன் (பாஜக) 3,92,007

இந்த ஐந்து தொகுதிகளில், அங்கு அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளால் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, மற்றும் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டதில், இந்தக்கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார்.

_107091675_gettyimages-1145577718-1  பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா? 107091675 gettyimages 1145577718 1இதற்கு எதிர்க்கட்சிகளின் மோதி எதிர்ப்பு பிரச்சாரம்தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரம், அனிதாவின் மரணம், ஓக்கி மற்றும் கஜா புயலின்போது பாஜக தமிழகத்துக்கு சரியான உதவிகளை செய்யவில்லை போன்றவற்றை முன்னிறுத்தியே எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன.

மேலும், ஒவ்வொரு முறையும் பிரசாரம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மோதி தமிழ்நாட்டிற்கு வந்த போதும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா?

தமிழகத்தில் மோதிக்கு எதிரான அலை மிக வலுவாக இருப்பதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்பிரமணியன்.

“இது மோதிக்கு எதிரான அலை மட்டுமல்லாமல், அதிமுக மக்களிடையே தற்போது பிரபலமாக இல்லை என்பதையும் இது காண்பிக்கிறது. மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேலை பார்த்த அளவிற்கு மக்களவை தேர்லில் கவனம் செலுத்தவில்லை. திமுக முன்னெடுத்த பிரசாரம், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்” என்று லக்ஷ்மி தெரிவித்தார்.

திமுக-வின் எழுச்சி

2014 மக்களவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக 37 தொகுதிகளையும், பாஜக ஒரு தொகுதியையும் வென்றது. திமுக படுதோல்வி அடைந்தது. அதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு என இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் திமுக தோல்வியையே சந்தித்தது.

_107090900_b4d32fbb-315f-418f-9be1-6cc129a25997  பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா? 107090900 b4d32fbb 315f 418f 9be1 6cc129a25997தமிழ் ஈழ விவகாரம், 2ஜி விவகாரம் போன்ற பல்வேறு காரணங்கள் திமுகவின் இந்த தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வலுவான வெற்றியை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றுள்ளது. கருணாநிதி மறைந்த பிறகு திமுக எதிர்கொண்ட இத்தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது முக்கிய ஒரு விஷயமாக வல்லுநர்களால் கருதப்படுகிறது.

“நீண்ட கால திராவிட இயக்கத்தின் இருப்பும், சமூக அடிப்படையும்தான் பாஜகவை தமிழகத்தில் இருந்து தள்ளி வைக்க ஒரு முக்கிய காரணம்” என்கிறார் சென்னை பல்கலைகழகத்தின் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

“திமுக தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, தேர்தல் பணிகளை ஸ்டாலினால் சரியாக முன்னெடுக்க முடிந்துள்ளது” என்று அவர் தெரிவிக்கிறார்.

‘பாராம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்பு’

_107090901_efb44ed8-f37a-4ae6-b256-cd5ecf6f884f  பாஜக தமிழகத்தில் படுதோல்வி: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா? 107090901 efb44ed8 f37a 4ae6 b256 cd5ecf6f884fகருணாநிதி இருந்தபோதும் கூட, திமுக காங்கிரசிடமோ அல்லது பாஜகவிடமோ தோல்வி அடையவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், “தற்போது அதிமுக தலைமையையே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக ஆதரவாளர்களாகவே மக்கள் பார்க்கின்றனர். இத்தேர்தல் திமுக அதிமுகவுக்கு இடையே நடக்கவில்லை. மறைமுகமாக இது பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்த தேர்தல்” என்று அவர் கூறுகிறார்.

“திமுக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதது, கட்சித் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என திமுகவும் தற்போதைய சூழலில் வலுவாக இல்லை என்றுதான் கூற வேண்டும். அப்படியிருக்க பாராம்பரிய திராவிட இயக்கத்தின் சமூக அடிப்படைதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு. இது பாஜகவுக்கு இங்கு இருக்கும் எதிர்ப்போடு இணைந்துவிட்டது. சரியாக சொல்லப் போனால், தமிழ்நாடு அரசியலுக்கும், பாஜகவின் அரசியல் நிலைக்கும் உள்ள கருத்தியில் வேறுபாடு திமுகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலையையே தமிழக இளைஞர்கள் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் வாக்களிக்க இங்கு எந்த மூன்றாவது கட்சியும் இல்லை. அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை அவரால் மாநிலத்துக்காக பேச முடிந்தது. பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தால் அது முடியாது என்று மக்களுக்கு தெரியும். இதெல்லாம் சேர்ந்து திமுகவுக்கு ஆதரவான நிலை ஏற்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News