ilakkiyainfo

ilakkiyainfo

பாணியில் தந்தத்தை பிடித்து மேலே ஏற முயன்ற இளைஞரை தூக்கி வீசிய யானை! (வீடியோ

பாணியில் தந்தத்தை பிடித்து மேலே ஏற முயன்ற இளைஞரை தூக்கி வீசிய யானை! (வீடியோ
November 14
11:44 2017

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதன் தந்தத்தை பிடித்து சினிமாவில் வருவதைப் போல் முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை அந்த யானை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் அவர் மரத்தில் மோதி சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.

இந்தச் சம்பவம் முழுவதையும் அவருடன் இருந்த நண்பர் வீடியோ எடுக்க அது ஃபேஸ்புக்கில் நேரலையாகப் பதிவாகியுள்ளது.

பனை இலையைச் சாப்பிட்டு கொண்டிருக்கும் அந்த யானையிடம் அந்தப் பக்கமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் நெருங்கி அதிலிருந்து வாழைப்பழத்தை எடுத்து ஊட்டுகிறார்.

உடனிருக்கும் நண்பர் “ஜாக்கிரதை” என்று சொல்லியவரே வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். சில வாழைப்பழங்களைக் கொடுத்த பிறகு அதன் தந்தத்தை பிடிக்க முயல்கிறார்.

வீடியோ எடுத்துக் கொண்டிருப்பவர் “நீ குடிச்சிருக்க, யானையைத் தொடாதே அதற்கு மதம் பிடித்து விடும்” என்று எச்சரிக்கிறார்.

அதை பொருட் படுத்தாமல் அந்த இளைஞர் பயந்தவாறே யானைக்கு முத்தம் கொடுக்கிறார், முதலில் அமைதியாக இருந்த யானை அவர் மறுபடியும் ஒருமுறை முத்தம் கொடுக்க முயலும் போது தும்பிக்கையில் 10 அடி தூரத்திற்கு தூக்கியடித்துள்ளது.

அதில் எதிரில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்த இளைஞர் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் அதற்குள் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியுள்ளது.

பாகுபலி, கும்கி போன்ற படங்களில் வருவதைப் போல் யானையிடம் இவர் விளையாட முயன்றுள்ளதைப் போல் தெரிகிறது. அடிப்பட்ட இளைஞரான ஜின்னு ஜான் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் சுயநினைவிற்கு வந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News