ilakkiyainfo

ilakkiyainfo

பாமக வேட்பாளர்கள் பட்டியல்- தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி?

பாமக வேட்பாளர்கள் பட்டியல்- தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி?
March 11
04:51 2019

அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக உள்ள தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிக்கல் எதுவும் இல்லாமல் உடன்பாடு ஏற்பட்டு விட்டதால் பா.ம.க.வினர் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டனர்.

எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிடாவிட்டாலும் தலைவர்கள் மட்டத்தில் ஓரளவு முடிவு செய்து விட்டனர்.

அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரடியாகவே அழைத்து விசாரித்து வருகிறார்.

தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறை சவுமியா அன்புமணி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

201903081021349256_1_anbumani._L_styvpf  பாமக வேட்பாளர்கள் பட்டியல்- தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி? 201903081021349256 1 anbumaniசவுமியா அன்புமணி நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் ‘பசுமைத் தாயகம்’ என்ற அமைப்பின் மூலம் எல்லா பகுதியிலும் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், அரக்கோணம், விழுப்புரம், கடலூர் ஆகிய 6 தொகுதிகளும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே.மூர்த்தி தொடர்ந்து 2 முறை செங்கல்பட்டு தொகுதி எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு ஆரணியிலும், ஸ்ரீபெரும்புதூரிலும் போட்டியிட்டு வெற்றிப் பெறவில்லை.

இந்த முறை அரக்கோணம் தொகுதியில் களமிறக்கப்படுகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர், வைத்திலிங்கம், திண்டுக்கல் தொகுதிக்கு திலகபாமா, விழுப்புரத்துக்கு வடிவேல் ராவணன், கடலூருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மத்திய சென்னைக்கு இரா.சகாதேவன், ஜான்பால் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் இவர்களிடம் அந்தந்த தொகுதிகளில் எதிரணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் செல்வாக்கு, பணபலம் ஆகியவை பற்றி ராமதாஸ் விசாரித்து வருகிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News