ilakkiyainfo

ilakkiyainfo

பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தடுக்கலாம்??

பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தடுக்கலாம்??
November 10
21:29 2014

பாரி­ச­வாதம் என்­பது ஆங்­கி­லத்­திலே  ஸ்ரோக் (Stroke) அல்­லது cerebrovascular accident (CVA) எனப்­ப­டு­கி­றது. நமது உடலின் ஒவ்­வொரு அங்­கமும் தொழிற்­ப­டு­வ­தற்­கான அடிப்­படைச் சக்­தியைக் கொடுப்­பது ஒட்­சிசன்.

இந்த ஒட்­சிசன் இரத்தம் மூலமே உறுப்­பு­க­ளுக்கு சென்­ற­டை­கி­றது. இரத்தம் செல்லும் குருதிக் குழாய்கள் நாடிகள் எனப்­ப­டு­கின்­றன. இந்த நாடிகள் பாதிக்­கப்­ப­டு­வதால் அந்த நாடி மூலம் குரு­தியைப் பெறும் உறுப்பு போதிய ஒட்­சிசன் இல்­லாமல் பாதிக்­கப்­படும்.

Cerebrovascular-Accident  பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தடுக்கலாம்?? Cerebrovascular Accident உதா­ர­ண­மாக இத­யத்­திற்கு குரு­தியைக் கொண்­டு­செல்லும் நாடிகள் அடை­ப­டு­வதால் மார­டைப்பு ஏற்­ப­டு­வதைப் போல. இவ்­வாறு நமது மூளைக்கு குருதியைக் கொண்டு செல்லும் நாடிகள் பாதிக்­கப்­ப­டு­வதால் மூளைக்கு ஒட்­சிசன் கிடைக்­காமல் மூளையின் கலங்கள் பாதிக்­கப்­ப­டு­வதே பாரி­ச­வாதம் எனப்­ப­டு­கி­றது.

அந்த வகையில், கடந்த 29 ஆம் திகதி உலக பாரி­ச­வாத தினத்தை முன்­னிட்டு சுகா­தார கல்வி பணி­ய­கத்­தினால் கருத்­த­ரங்­கொன்று நடத்­தப்­பட்­டது. இந்­நி­கழ்வின் போது சமூ­கத்தில் இந்­நோ­யினால் பாதிக்­கப்­பட்டோர் தொடர்பில் அதி­க­ள­வான கவனம் செலுத்­தப்­பட்­டது.

உலகில் 6 நபர்­களில் ஒரு­வ­ருக்கு பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­கின்­றது. அதா­வது ஒவ்­வொரு வரு­டமும் 17 மில்­லியன் மக்கள் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­கின்றனர். அதே­வேளை 6 மில்­லியன் உயி­ரி­ழப்­புகள் பாரி­ச­வா­தத்­தினால் ஏற்­ப­டு­கின்­றன என உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­வித்­துள்­ளது.

atherosclerosis-plaque2  பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தடுக்கலாம்?? atherosclerosis plaque2பாரி­ச­வாதம் இரண்டு வித­மாக ஏற்­ப­டலாம். ஒன்று குருதிக் குழாய்­களில் அடைப்பு ஏற்­ப­டு­வதால் உண்­டா­கலாம், இந்த அடைப்­பா­னது குருதிக் குழாய்களில் உள்ளே படி­கின்ற கொழுப்பு (கொலஸ்ட்ரோல்) படி­வு­க­ளாக (atherosclerosis) இருக்­கலாம் அல்­லது வேறு பகு­தி­களில் உறைந்த குருதிக் கட்­டிகள் வந்து குருதிக் குழாய்­களை அடைப்­ப­தாக இருக்­கலாம்.

அடுத்­த­தாக குருதிக் குழாய்கள் வெடிப்­பதால் கூட பாரி­ச­வாதம் ஏற்­ப­டலாம். குறிப்­பாக அதிக இரத்தம் அழுத்தம் உடை­ய­வர்­க­ளிலே இது ஏற்­ப­டலாம்.

ei_2385  பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தடுக்கலாம்?? ei 2385Aneurysm

உயர் குரு­தி­ய­முக்­கத்தைத் தாங்­க­மு­டி­யாமல் தலையில் உண்­டாகும் தாக்கம் – விபத்து மூல­மா­கவோ அல்­லது விழுந்து தலை அடி­ப­டு­வதன் மூலமாகவோ குருதிக் குழாய்­களில் அதா­வது நாடி­களில் உரு­வாகும் வீக்கம் வெடிப்­பதால் (Aneurysm) ஏற்­ப­டலாம்.

பாரி­ச­வா­த­மா­னது சடு­தி­யாக ஏற்­ப­டு­கின்ற ஒரு நிகழ்வு. இந்த நோயின் தீவி­ர­மா­னது பாதிக்­கப்­பட்ட குருதிக் குழாயை பொறுத்து வேறு­படும்.

உதா­ர­ண­மாக சிறிய நாடி ஒன்று அடை­ப­டு­வதால் ஏற்­படும் பாதிப்பு சிறி­த­ள­வா­ன­தா­கவே இருக்கும். மேலும் மூளையின் குறிப்­பிட்ட ஒவ்­வொரு பகு­தியும் ஒவ்­வொரு வித­மான தொழிற்­பா­டு­க­ளுக்கு பொறுப்­பாக இருக்கும்.

பாதிக்­கப்­பட்ட பகு­தியைப் பொறுத்து ஏற்­ப­டு­கின்ற அறி­கு­றி­களும் வேறு­ப­டலாம். உதா­ர­ண­மாக பேச்­சினைக் கட்­டுப்­ப­டுத்தும் மூளையின் பகுதி பாதிக்­கப்­பட்டால் அந்த நபர் பேச முடி­யாத நிலையை அடைவார்.

மூளையின் பல பகு­தி­க­ளுக்கு குரு­தியைக் கொண்டு செல்லும் குழாய்கள் பாதிக்­கப்­படும் போது பல பாதிப்­புக்கள் ஏற்­படும்.

குறிப்­பாக பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்­கான பிர­தான அறி­கு­றி­க­ளா­வன தலை­யிடி போன்ற சிறிய அறி­கு­றி­களில் இருந்து முற்­று­ மு­ழு­தான மயக்க நிலை (Coma) அல்­லது ஊன­முற்ற நிலை அல்­லது மரணம் ஏற்­ப­டு­கின்ற நிலை­யாக இருக்­கலாம்.

பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்களும்  அறி­கு­றி­களும் என பார்க்கும் போது, திடீ­ரென ஏற்­படும் பார்வைக் குறை­பாடு அல்­லது மாற்றம், திடீர் கை, கால் மற்றும் முக விறைப்பு, அல்­லது பலம்  குறைவு, திடீ­ரென ஏற்­படும் நடக்கக் கடி­ன­மாதல், தலைச்­சுற்று மற்றும் சம­நிலை பிறழ்வு போன்­ற­வற்றை பிர­தான எச்­ச­ரிக்கை அறி­கு­றி­க­ளாக அறி­யலாம்.

இவ்­வாறு பாரி­ச­வாத்தின் எச்­ச­ரிக்கை அறி­கு­றி­களை அடை­யாளம் காண்­பது மிக முக்­கி­ய­மாகும்.

இச்­சந்­தர்ப்­பங்­களில் உட­ன­டி­யாக மருத்­துவ உத­வி­களை பெற்றுக் கொள்­வ­தி­னூ­டாக ஏற்­ப­டு­கின்ற உயிர் இழப்­புக்­களை தவிர்க்­கவும் முடியும், இதனால் ஏற்­ப­டு­கின்ற அங்­க­வீ­னங்­களை தடுக்­கவும் முடியும் என சுகா­தார கல்வி பணி­ய­கத்தின் வைத்­திய தரப்­பினர் தெரி­வித்­தனர்.

மிக முக்­கி­ய­மாக தற்­கா­லிக இரத்­தோட்டத் தடைத் தாக்­க­மா­னது, பாரி­ச­வா­தத்தில் ஏற்­படும் அதே குணங்­கு­றிகள் ஒரு சில நிமி­டங்கள் அல்­லது ஒரு சில மணித்­தி­யா­லங்கள் மட்டும்   நீடிக்­கக்­கூ­டிய ஒரு “குறும் பாரி­ச­வாத” நிலை­யாகும்.  இந்­நோய்க்­கு­ணங்­கு­றிகள்  ஆரம்­பித்­த­தி­லி­ருந்து 24 மணி நேரத்திற்குள் முற்­று­மு­ழு­தாக மறைந்து விடும்.

இவற்றை நாம் சரி­யாக கவனம் கொள்­ளாது விடும் பட்­சத்­தி­லேயே அதி­க­ள­வான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது. எனவே தற்­கா­லிக இரத்­தோட்டத் தடைத் தாக்­க­மா­னது பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்­கான உயர் ஆபத்தைச் சுட்­டிக்­காட்டும் எச்­ச­ரிக்கைக் குறி­யாக விளங்­கு­கின்­றது.

மேலும் உயர் குருதி அமுக்கம், நீரி­ழிவு நோய், அதி­க­ரித்த கொலஸ்ட்ரோல் அளவு, புகைப்­பி­டித்தல் போன்­றவை முக்­கிய கார­ணங்­க­ளாகும். அவை தவிர அதி­க­ரித்த உடற்­ப­ருமன், வய­தா­ன­வர்கள், ஆண்கள், பரம்­ப­ரை­யிலே மார­டைப்பு அல்­லது பாரி­ச­வாதம் ஏற்­பட்­ட­வர்­களைக் கொண்­ட­வர்கள், அள­வுக்­கதிகமாக மது அருந்­து­ப­வர்கள் இந்த நோயால் பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை அதி­க­மாக கொண்­ட­வர்கள்.

பாரி­ச­வா­த­மா­னது ஒரு கொடிய நோய் தாக்­க­மாகும். உணவுப் பழக்­கங்­களில் முறை­யான கட்­டுப்­பா­டின்மை மற்றும் புகைத்தல் குடி­போதை என்­ப­வற்­றா­லேயே இந்நோய் ஏற்­ப­டு­கின்­றது.. அந்த வகையில் மார­டைப்பைத் தடுப்­ப­தற்கு நாம் என்­ன­வெல்லாம் செய்ய வேண்­டுமோ அத்­த­னையும் இந்த பாரி­ச­வாத நோய் ஏற்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்கும் செய்­வது அவ­சி­ய­மாகும்.

நீரி­ழிவு நோய்: இந்த நோய் உள்­ள­வர்­க­ளுக்கு மார­டைப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் அதிகம். ஆனாலும் இவர்கள் ஒழுங்­காக மருந்­து­களை பாவிப்­பதன் மூலமும், உணவுக் கட்­டுப்­பாட்டின் மூலமும் இந்த நோயை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்தால் மார­டைப்பு மற்றும் பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை குறைக்­கலாம்.

புகைத்தல்-: புகைத்தல் மார­டைப்பு மற்றும் பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மான முக்­கிய கார­ணி­களில் ஒன்­றாகும். ஆனாலும் புகைக்­காத நபர்­களில் கூட மார­டைப்பு, பாரி­ச­வாதம் ஏற்­ப­டலாம்.

* உயர் குருதி அமுக்கம்:- – இந்த நோய் இருப்­ப­வர்­க­ளுக்கு மார­டைப்பு மற்றும் பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் அதிகம். சரி­யான மருந்­துகள், உடற்­ப­யிற்சி, உணவுக் கட்­டுப்­பாடு மூலம் நாம் உடலை கட்­டுப்­பா­டாக வைத்­தி­ருந்து மார­டைப்பு மற்றும் பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை குறைத்துக் கொள்­ள­மு­டியும்.

மன அழுத்தம்:- அதி­க­ரித்த மன அழுத்தம் உள்­ள­வர்­க­ளுக்கும் மார­டைப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் அதி­க­மாகும். தியானம் போன்ற ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு மன அழுத்­தத்தை குறைப்­பதன் மூலம் பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தைக் குறைக்­கலாம்.

இந்நோய் குணப்­ப­டுத்த முடி­யாத ஒன்­றா­கினும், சரி­யான பரா­ம­ரிப்பின் மூலம் அவர்­களின் வாழ்க்கைத் தரத்­தினை சீராக வைத்­தி­ருக்­கலாம். இந்­நோ­யா­ளர்­களில் 20% ஒரு­மா­தத்­திலும், 10% ஒரு­வ­ரு­டத்­துக்­குள்­ளா­கவும் இறக்க வாய்ப்­புண்டு.

முகம், கண், வாய் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், உடலின் அரைப்­பா­கத்­துக்கு மேல் முழு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் குறு­கிய காலத்­தி­னுள்­ளேயே இறக்கும் வாய்ப்­புண்டு.

ஆன­போ­திலும் முகம் பாதிக்­கப்­ப­டா­தி­ருப்பின் சாதா­ர­ண­மாக உணவு உட்­கொள்­ளலாம். முகம் பாதிப்பு இருப்பின் மூக்­கி­னூ­டாக செலுத்­தப்­படும் குழாய்­மூலம் மருத்­துவ ஆலோ­ச­னைப்­படி சத்­துள்ள நிறை­யு­ணவைத் திர­வ­மாகக் கொடுக்­கலாம்.

*உடற்­ப­யிற்சி: தகு­தி­பெற்ற உடற்­ப­யிற்சி நிபுணர் மூலம் முறை­யான உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­ளலாம். இதன் மூலம் மேல­திக பாதிப்­புகள் வராது தடுப்­ப­தோடு காலப்­போக்கில் சிறி­த­ளவு முன்­னேற்­றத்­தையும் எதிர்­பாக்­கலாம்.

* படுக்­கைப்­புண்கள்: இவை வராது பாது­காத்தல் – இரண்டு மணி நேரத்­துக்கு ஒரு தடவை திருப்­பிப்­பு­ரண்டு படுக்­க­வைத்தல்.தற்­போது விசே­ட­வகை மெத்­தைகள் கடை­களில் கிடைக்­கின்­றன.

வச­திக்­கேற்ப, காற்­ற­டைக்­கக்­கூ­டிய மெத்­தை­க­ளையோ அல்­லது  நீர­டைக்­கப்­பட்ட  மெத்­தை­க­ளையோ வாங்கிப் பாவிக்­கலாம். இவற்றின் மூலம் ஒரே வித­மாகப் படுப்­பதால் உரு­வாகும் படுக்­கைப்­புண்கள் வராது தடுக்­கலாம். ஒரு­வேளை படுக்­கைப்­புண்கள் ஏற்­படின் தகுந்த மருத்­து­வ­ரிடம் காட்டி புண்ணைச் சுத்­தப்­ப­டுத்தி சரி­யான மருந்­து­களைப் பாவித்தல்.

மாத­மொரு தட­வை­யேனும் மருத்­து­வ­ சோ­தனை செய்தல் போன்­ற­வற்றை மேற்­கொள்­ளலாம்.

இந்நோய் ஏற்­ப­டா­தி­ருக்க புகை­யிலைப் பாவ­னையை உடன் நிறுத்­துதல் அவ­சி­ய­மாகும். புகை­யி­லையை எவ்­வ­டிவில் பாவித்­தாலும் அது எமது உட­லா­ரோக்­கி­யத்தை நிச்­சயம் பாதிக்கும் (சிகரெட், பீடி, சுருட்டு, சுங்கான், புகை­யிலை சப்­புதல் மற்றும் மூக்­குப்­பொடி பாவனை). புகை­யி­லை­யி­லுள்ள நிக்கோடின் குரு­தி­ய­முக்­கத்தைக் கூட்டும்.மூளைக்கு கிடைக்கும் ஒட்­சி­சனைக் குறைக்கும், குரு­திக்­கு­ழாய்­களில் கொழுப் புப் படி­வதை கூட்டும், புகைப்­பதால் பாரி­ச­வாதம் மட்­டு­மன்றி மார­டைப்பு, நுரை­யீரல் தொண்டை மற்றும் வாய்ப்­புற்­று­நோய்கள், தொய்வு போன்ற நோய்­களும் உண்­டா­கலாம்.

மேலும் புகைப்­பவர் தன்னை மட்­டு­மன்றி தன்னைச் சுற்­றி­யி­ருப்­போ­ரையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கு­கின்றார் ஆதலால் புகைத்­தலை உடன் நிறுத்­து­வதன் மூலம் தன்னை மட்­டு­மன்றி தன் சுற்­றத்­த­வரின் ஆரோக்­கி­யத்­தையும் பேணலாம்.

மேலும், பலர் மூக்­குப்­பொ­டியை, அவை புகை­யி­லைத்தூள் என்று அறி­யாமல் மூக்­கினுள் அடைத்துக் கொள்­கின்­றனர். ஆகவே இப்­ப­ழக்­கத்­தையும் உடன் நிறுத்­துதல் சாலச் சிறந்­தது.

கொழுப்­புச்­சத்து நிறைந்த உண­வு­களைத் தவிர்த்தல், மன உளைச்­ச­லி­லி­ருந்து விடு­படல், மனதை ஓய்­வா­கவும் இல­கு­வா­கவும் வைத்­தி­ருப்­ப­தற்கு யோகா­சனம், தியானம் போன்­ற­வற்றை மேற்­கொள்­ளலாம்.

உணர்ச்­சி­வ­ச­ப்ப­டு­த­லையும், கோபப்­ப­டு­த­லையும் தவிர்த்தல் நலம். உண­வுக்­கட்­டுப்­பாடு, உடற்­ப­யிற்சி செய்­வதால் உடல் பரு­மனை சீராக வைத்­தி­ருத்தல் என்­பன அவ­சியம் என சுகா­தார கல்வி பணி­யகம் கருத்து தெரி­விக்­கின்­றது.

மக்கள் அதி­க­ளவு மருத்­துவ சேவை­களை பெறு­வதில் சிர­மப்­ப­டு­கின்­றனர் என்­பது பலரும் அறிந்த விட­யமே. அதா­வது நோய் தொடர்பில் அவர்­க­ளுக்கு இருக்­கின்ற அச்சம், பரா­ம­ரிப்பில் காணப்­ப­டு­கின்ற சிக்­கல்கள், சேவை­களை பெறு­வதில் இருக்­கின்ற தாமதம் மற்றும் வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை குறிப்­பிட்டு கூறலாம்.

இந்­நி­லையில், இந்­நோய்க்­கான சேவை­களை பெற்­றுக்­கொள்ள நரம்­பியற் துறையில் வச­தி­களைக் கொண்ட வைத்­தி­ய­சா­லை­களை நாடுவதே சிறந்ததாகும்.

எஸ்.டொரின்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News