ilakkiyainfo

ilakkiyainfo

பாலஸ்தீனத்தில் குடியிருப்பு பகுதி: ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் வெற்றி

பாலஸ்தீனத்தில் குடியிருப்பு பகுதி: ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் வெற்றி
December 26
07:46 2016

 

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசாங்கம் அமைத்துவரும் குடியிருப்பு பகுதி தொடர்பான கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டது.

1967-ஆம் ஆண்டு நடந்த நீண்ட போரின் இறுதியில் பாலஸ்தீன நாட்டில் இருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் பலவந்தமாக பறித்துக்கொண்டது.

இந்தப் பகுதியை இஸ்ரேலுக்கு சொந்தமானதாக சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

சமீபகாலமாக, பாலஸ்தீன நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் கிழக்கு ஜெருசலேமிற்கு நெருக்கமாக இஸ்ரேல் நிர்மாணித்து வரும் சட்டவிரோத குடியிருப்பு (செட்டில்மென்ட்) வீடுகள் பிராந்தியத்தின் அமைதிக்கு முக்கிய அச்சுறுத்தலாக அமையலாம் என்று உலக நாடுகள் அச்சப்பட்டன.

இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடான பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சினைக்கு முடிவுகட்டும் ‘இரு நாடுகள்’ என்ற தீர்விற்கு முக்கிய தடையாக இஸ்ரேல் கட்டி வரும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இரு நாடுகள் பரிகாரத்தை சாத்தியமற்றதாக மாற்றவேண்டும் என்பதே இஸ்ரேலின் எண்ணமாக உள்ளது என்று ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியது.

ஹார்ஹோமா, கிலோ, கிவாத் ஹமடோஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்த குடியிருப்பு கட்டுமானங்கள் மட்டுமின்றி, இவ்வாண்டு இறுதியில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் பெத்லஹமிற்கு இடையே மேலும் சில குடியிருப்புகளை கட்டும் பணிகளை ஆரம்பிக்க இஸ்ரேல் முயற்சிப்பதாக அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் 5 ஆயிரம் குடியிருப்புக்களை கட்டுவதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சர்வதேச எல்லைக்கோட்டு சட்டத்தை மீறிய வகையில் அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுமானப் பணிகளை எல்லாம் உடனடியாக தடுத்து நிறுத்தவும் நியூசிலாந்து, மலேசியா, வெனிசுலா, செனெகல் ஆகிய நாடுகளின் சார்பில் நேற்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் வாக்களிக்க இருந்த நிலையில், தனது வெட்டுரிமை (வீட்டோ) அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தி மேற்கண்ட தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு அவரது ஆலோசனையை நிராகரித்தது.

இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்காமல் அமெரிக்கா நடுநிலை வகித்தது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் மொத்தம் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகளின் அமோக ஆதரவுடன் இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை பாலஸ்தீன அரசு கொண்டாடிவரும் அதேவேளையில், தன்னை கைவிட்ட அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

எங்கள் நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலை கட்டுப்படுத்தக்கூடிய இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எதிர்வரும் ஜனவரி மாதம் 20-ம் திகதிக்கு பிறகு காட்சிகள் மாறும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

ஆசியாவின் துரோகிகள் அழியும் காலம் வந்து விட்ட்து போல் தெரிகிறது. அந்நியனை ஆசியாவில் தளம் அமைக்க விட்ட்து [...]

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

இலங்கை பத்திரிகைகள்

English News