ilakkiyainfo

ilakkiyainfo

சிறுமி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு கொலையுடன் தொடர்பு: விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

சிறுமி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு கொலையுடன் தொடர்பு: விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி
December 01
17:32 2019

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்   குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி அதனை தமது தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட மேலும் மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதுவும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் கோப்பாய், இருபாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், வீடு திரும்பிய சிறுமி, சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயாரும் ஒரு வாரத்தின் பின்னர் கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் சிறுமியின் நண்பரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர்.

உரும்பிராயைச் சேர்ந்த சிவலிங்கம் விஜிதரன் அல்லது குட்டி, இருபாலையைச் சேர்ந்த சற்குணம் ஜெம்சன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்திருந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தவேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர்.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 10ஆம் திகதி அடையாள அணிவகுப்பு உள்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி அன்றுவரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் மூன்று வெவ்வேறு வழக்குகளில் பொலிஸார் முற்படுத்தினர். கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக உரிமையாளர் கொலை, கொள்ளைச் சம்பவம் மற்றும் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட ஏற்கனவே உள்ள வழக்குகளிலேயே சந்தேகநபர்கள் இருவரும் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கும் கொலைக்கு தொடர்பு இருபதாக சான்று ஆதாரங்கள் உள்ளனவா? என்று பொலிஸாரிடம் மன்று கேள்வி எழுப்பிய நிலையில், கொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்று சந்தேகநபர்கள் இருவரும் அங்கு நின்றனர் என்று பொலிஸார் மன்றுரைத்துள்ளனர்.

அத்துடன், கொலைச் சம்பவ இடத்தில் பெறப்பட்ட குருதி மாதிரிகளுடன் சந்தேநபர்களின் குருதி மாதிரிகள் ஒத்துச் செல்கின்றவா என்று விசாரணைகளை முன்னெடுக்க அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

அதற்கு அனுமதியளித்த மேலதிக நீதிவான், கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News