இரண்டு நாளாக மாட்டிக்க ஜட்டியில்லாமல் சுத்திக்கிட்டிருந்த டானியல். சாப்பாட்டுக்காக நாளும் நடக்கும் சண்டை.!! பிக்பாஸ் வீட்டுக்குள் என்னதான் நடக்கிறது…(பார்க்கத் தவறாதீர்கள்)
‘ஃப்ரெண்டு… லவ் மேட்டரு’ என்கிற டேனியின் வசனத்தைப் போல, நேற்றைய நிகழ்ச்சியில் ‘நித்யா… வெங்காயம் மேட்டரு.. ஃபீல் ஆயிட்டாப்பல’ என்கிற விவாதம் சீரியஸாக ஓடிவிட்டதால் இன்று ரிலாக்ஸாக இருந்தார், கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியும் அப்படியே இருந்தது. ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் வராத காரணத்தால், இன்னொருவர் வந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினது போல இருந்தது, இன்றைய நாள்.
இது ஒரு பக்கம் சுவாரஸ்யமாக இருந்தாலும் சற்று சலிப்பும் தட்டியது. பஞ்சாயத்து + ஜாலி என்பதை இரண்டு நாட்களிலும் வருமாறு கலந்து சமநிலையுடன் அமைக்கலாம்.
“இன்று ஞாயிற்றுக்கிழமை. பிரத்யேகமான, உற்சாகமான மனநிலை ஏற்படும். வீட்டுக்குள்ளேயும் அது இருக்கான்னு பார்க்கலாம். அங்க பல உணர்வுகள் கலந்திருக்கு” என்றார், கமல்.
ஏழாம் நாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. ‘வீட்ல வாஸ்து சரியில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. உணவு தொடர்பான பிரச்னையொன்று மறுபடியும் எழுந்தது.
கேரட், வெங்காயம், ரசத்தைத் தொடர்ந்து இந்த முறை சாண்ட்விட்ச். 16 நபர்களுக்காக 16 சாண்ட்விட்ச்கள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் எவரோ இரண்டு எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள் போல. மும்தாஜிற்கு கோபம் வந்துவிட்டது.
எனக்கு இல்லைன்னாகூட பரவாயில்லை. நானும் வந்த நாள்ல இருந்து சொல்ல வேண்டாம்னு பார்க்கிறேன். இன்னொருத்தருக்கும் பசி இருக்கும்னு ஏன் நெனக்க மாட்டேங்கிறாங்க’. வைஷ்ணவியும் அவருக்கு பலமாக பின்தாளம் போட்டார். ‘ரொம்ப ஹார்ஷா சொல்லாதீங்க. யாராவது ஹர்ட்டாகப் போறாங்க” என்று அனந்த் ஆட்சேபிக்க “ஆகித் தொலையட்டும்” என்று எரிச்சல் பட்டார் வைஷ்ணவி.
கவுண்டமணி – செந்தில், வாழைப்பழ காமெடி போல “16 சாண்ட்விச் இருந்தது. ஒருத்தர் சாப்பிடலை. அந்த ஒண்ணு எங்க?” என்று இது தொடர்பாக நீண்ட விசாரணை நடந்தது. ’16 மட்டும்தான் இருக்குன்னு தெரியாம, யாராவது பசியில ரெண்டா எடுத்து சாப்பிட்டுட்டு இருப்பாங்க. இதை ஏன் பெரிய பிரச்னை ஆக்கணும்’ என்று பெருந்தன்மையாக விஷயத்தை முடிக்க முனைந்தார் மஹத்.
தொடர்ந்து…. வீடியோவை பாருங்கள்
PART 1
PART 2
SOURCE 2