ilakkiyainfo

ilakkiyainfo

பிடுங்கி ஏறியப்பட்ட மாவீரர் துயிலுமில்ல தாவரவியல் பூங்கா பெயர் பலகை !!

பிடுங்கி ஏறியப்பட்ட மாவீரர் துயிலுமில்ல தாவரவியல் பூங்கா  பெயர் பலகை !!
December 06
00:03 2017

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கரைச்சி பிரதேச சபையினால்  நேற்று முன்தினம்  அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா எனும் பெயர்  பலகை நேற்றிரவு இனந்த தெரியாதவா்களால் பிடுங்கி ஏறியப்பட்டுள்ளது.

இறுதியாக இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாவீரர் துயிலுமில்லங்களை தாவரவியல்  பூங்காவாக மாற்றம் வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தாா்.

இதற்கு  சமூகத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. துயிலுமில்லங்கள் துயிலுமில்லமாகவே இருக்க வேணடும் என  பொது மக்களும் மாவீரர்களின் உறவினர்களும் தெரிவித்திருந்தனர்.

botanicial  பிடுங்கி ஏறியப்பட்ட மாவீரர் துயிலுமில்ல தாவரவியல் பூங்கா  பெயர் பலகை !! botanicial

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் அரசின் அபிவிருத்தி திட்ட நிதி  நாற்பது இலட்சம் ரூபாவில் துயிலுமில்லம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றது.

இதற்கு தென்னிலங்கை அரசியல் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரசிங்க உடனடியாக அபிவிருத்திப் பணிகளை நிறுத்துமாறு  அறிவித்ததோடு, விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தாா்.

இதனையடுத்தே கரைச்சி பிரதேச சபையினரால் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் வளாகம் தாவரவியல் பூங்கா என பெயர் பலகை நாட்டப்பட்டிருந்தது. குறித்த  பெயர்  பலகையே நேற்றைய(04) தினம்  இனந்ததெரியாத நபர்களார் பிடுங்கி எறியப்பட்டுள்ளது

இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் அவர்களை  தொடர்பு கொண்டு வினவிய போது

bot2  பிடுங்கி ஏறியப்பட்ட மாவீரர் துயிலுமில்ல தாவரவியல் பூங்கா  பெயர் பலகை !! bot2இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது எனவும் கரைச்சி பிரதேச சபை கீழ் அது தாவரவியல் பூங்கா என்று வருகின்றது எனவும் மற்றும் அண்மையில் நடைப்பெற்ற  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இது தாவரவியல் பூங்கா என்று தீர்மானம் எடுக்கப்ப்பட்டதாகவும்

தாவரவியல் பூங்கா என்ற பெயரிலேயே இது தற்போது அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றமையால்   அதனை தெழிவூட்டும் வகையில்  கரைச்சி பிரதேச சபையினால் தான் இந்த பெயர் பலகை நாட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

இவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News