ilakkiyainfo

ilakkiyainfo

பிர­பா­கரன் உட்­பட 47 பேரின் பட்­டி­யலை தவிர்க்க ஜோர்தான் சென்­றி­ருந்த மஹிந்த!!-ஜனா­தி­ப­தியின் கருத்தை அடுத்து புதிய தகவல் அம்­பலம்

பிர­பா­கரன் உட்­பட 47 பேரின் பட்­டி­யலை தவிர்க்க ஜோர்தான் சென்­றி­ருந்த மஹிந்த!!-ஜனா­தி­ப­தியின் கருத்தை அடுத்து புதிய தகவல் அம்­பலம்
October 01
17:44 2018

புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பாகரன் உட்­பட 47 புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களின் பட்­டி­யலை அர­சாங்­கத்­திடம் கைய­ளிப்­ப­தற்­காக ஐ.நா. அதி­கா­ரிகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­திப்­ப­தற்கு எடுத்த முயற்­சியை தவிர்ப்­ப­தற்­கா­கவே இறுதி யுத்தம் முடி­வ­டை­வ­தற்கு சில நாட்கள் இருக்­கையில் மஹிந்த ராஜ­பக் ஷ ஜோர்­தா­னுக்கு விஜயம் செய்­த­தாக தகவல் தற்­போது வெளியா­கி­யுள்­ளது.

இறு­திக்­கட்ட யுத்­த­த்தின்­போது கடைசி இரண்டு வாரங்­களில் அப்­போ­தி­ருந்த ஜனா­தி­ப­தியோ பாது­காப்புச் செய­லா­ளரோ இரா­ணுவத் தள­ப­தியோ நாட்டில் இல்­லை­யெ­னவும் அந்த காலப்­ப­கு­தியில் விடு­தலைப் புலிகள் கொழும்பின் மீது சென்­னைப்­ப­கு­தி­யி­லி­ருந்து வந்து விமானத் தாக்­குதல் நடத்­த­வுள்­ள­தாக வெ ளியான தக­வல்­களை அடுத்து இவர்கள் வெளிநாடு சென்­றி­ருந்­த­தா­கவும் அப்­போது தானே பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக செயற்­பட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க்கில் இலங்­கை­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் இந்த கருத்துத் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஊடகம் ஒன்­றுக்கு கருத்த தெரி­விக்­கையில்,

யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்­தின்­போது கடைசி சில தினங்கள் தான் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு வெ ளிநாட்­டுக்கு சென்­றி­ருந்­தா­கவும் யுத்தம் முடி­வ­டைந்­தது தொடர்­பாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக 2009ஆம் மே 19ஆம் திகதி தானே அறி­வித்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

நான் மேற்­படி தினங்­களில் ஜீ -11 மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஜோர்­தானின் அம்மான் நக­ருக்கு சென்­றி­ருந்தேன். எவ்­வா­றா­யினும் அந்த மாநாட்­டி­லி­ருந்து இடை நடுவில் நாடு திரும்பி யுத்தம் முடி­வ­டைந்­தமை தொடர்பில் அறி­வித்தேன் என்றும் மஹிந்த ராஜ­பக்ஷ கூறி­யுள்ளார்.

இந்த நிலையில் இறுதிக் கட்ட யுத்­தத்­தின்­போது சில தினங்கள் மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டை விட்டு சென்­ற­மைக்­கான புதிய காரணம் தற்­போது வெ ளியா­கி­யுள்­ளது.

அன்­றைய அர­சாங்­கத்தை சேர்ந்த முக்­கிய அமைச்சர் ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ளார்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உட்­பட 47 புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களை காப்­பாற்­று­வ­தற்கு ஐ.நா. சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இதற்­கான பட்­டி­யலும் தயா­ரிக்­கப்­பட்­ட­துடன் அது குறித்த பேச்­சுக்­களும் நடை­பெற்­றி­ருந்­தன. அன்­றைய ஐ.நா. செய­லாளர் பான் கீ மூனும் தெற்­கா­சிய நாடு­க­ளுக்கு பொறுப்­பான அதி­காரி நம்­பி­யாரும் இலங்­கைக்கு விஜயம் செய்து இவ்­வி­டயம் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் கலந்­து­ரை­யாட எண்­ணி­ருந்­தனர்.

இந்தச் சந்­திப்பை தவிர்ப்­ப­தற்­கா­கவே மஹிந்த ராஜ­பக்ஷ ஜோர்­தா­னுக்கு பய­ணித்­தி­ருந்தார். யுத்­தத்தின் இறுதிக் காலப்­ப­கு­தியில் ஐ.நா. சபை­யா­னது பெரும் குற்ற உணர்வுக்கு உள்ளாகியிருந்தது. பெரும் இழப்பை தடுக்க முடியவில்லை என்று கருதி இருந்தது.

இதனால்தான் பிரபாகரன் உட்பட 47 பேரை காப்பாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தது. இதனை தவிர்ப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானுக்கு விஜயம் செய்திருந்தார் என்று அந்த அமைச்சர் தகவல் வெ ளியிட்டுள்ளார்.

Related Articles

1 Comment

  1. arya
    arya October 01, 23:39

    கொலைகார பயல் பிரபாகரனை அழித்தால் மஹிந்தவின் மேல் மதிப்பு கூடி கொண்டே போகின்றது. மகா பாரதத்தில் துரியோதனை அழித்த கிருஷ்ணர் போல் , அப்பா அர்ஜுனன் யார் என்று கேடடாள் அது கோட்டாபய அவர்களே. துரியோதனன் கூடடம் கௌரவர்களுக்கு 5 வீடு கூட தர முடியாது என்று சொல்லியது போல் புலி கொலை கார கூடடமும் 1987ல் மாற்று அமைப்புகளுக்கு இடைக்கால அரசில் ஒரு இடமும் தர முடியாது என்று சொல்லியது , ஆனால் அன்று புலிகள் அழிக்க முயன்ற எல்லா அமைப்புகளும் இன்று இலங்கையில் உள்ளனர் ஆனால் பாசிச புலி கூடடம் துடைத்தழிக்க பட்டு விட்ட்து , வெளிநாடுகளில் இருந்து மரண அடி வேண்டியதன் அழு குரல் மட்டும் ஐ.நா 6 மாதங்களுக்கு ஒரு தரம் கேட்கும், இலங்கையில் இனி ஒரு சீன வெடியை கூட இவர்களால் கொழுத்த முடியாது.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News