ilakkiyainfo

ilakkiyainfo

பிரதமர் ரனிலை தோற்கடிக்க ஜனாதிபதி என்னிடம் உதவி கோரினார்!!’: மஹிந்த ராஜபக்ஷ அளித்த விசேட செவ்வி!!

பிரதமர் ரனிலை தோற்கடிக்க ஜனாதிபதி என்னிடம் உதவி கோரினார்!!’: மஹிந்த ராஜபக்ஷ அளித்த விசேட செவ்வி!!
June 29
23:18 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்றுத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே, ஜனாதிபதி அதைக் கைவிட்டுவிட்டார் என்றுத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அது தொடர்பான தீர்மானம், ஜனாதிபதி கையிலேயே தங்கியுள்ளது என்று, தான் அப்போதே கூறியதாகவும் ஆனால், சமீபத்தில் இது பற்றி கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி, தன்னால் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது என்றும் ஏனெனில், தனக்கு மேல் சிலர் உள்ளமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார் என்றும் சுட்டிக்காட்டிய மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு மேல், யார் அப்படி தீர்மானம் எடுக்கக்கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்பது பற்றி, தன்னால் உணர்ந்துகொள்ள முடியாமல் உள்ளதென்றுக் கூறினார்.

கோத்தா தொடர்பில் வேறு கருத்துக்களும் உள்ளன.

பொருத்­த­மான நேரத்தில் தகு­தி­யான வேட்­பா­ளரை கள­மி­றக்­குவேன்

கோத்­த­பாய ராஜ­பக் ஷ பொருத்­த­மான ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று பலர் கூறு­கின்­றனர். அதற்­காக அவர் தெரி­வு­செய்­யப்­பட்­டு­விட்ட வேட்­பாளர் என்று அர்த்­த­மில்லை. அவர் தொடர்பில் வேறு கருத்­துக்­களும் உள்­ளன என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

டெய்லி மிரர் பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

செவ்­வியின் முக்­கிய விட­யங்கள் வரு­மாறு:

கேள்வி: சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து வெளி­வந்­துள்ள 16 பேர் கொண்ட குழுவை உங்கள் அணியில் இணைத்­துக்­கொள்­ள­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்: அப்­ப­டி­யொரு பிரச்­சினை இல்லை. பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அனை­வரும் ஒன்­றாக இணைந்து பணி­யாற்­ற ­வேண்டும் என்­பதே பொது­வான விருப்­ப­மாகும். இங்கு தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் இல்லை.

கேள்வி: 16 பேர் கொண்ட குழு அதற்குத் தயாரா?

பதில்: இறு­தியில் அதுதான் நடக்கும். ஒரு அர­சியல் செயற்­பாடு நடக்­கும்­போது இவ்­வா­றான சிக்­கல்கள் தோன்றும். ஆனால் ஒன்­றாக இணைந்து செயற்­படும் போது சுதந்­தி­ரக்­கட்சி என்ற அவர்­களின் அடை­யாளம் மறைந்­து­போய்­விடும்.

கேள்வி: கூட்டு எதி­ர­ணியின் சில உறுப்­பி­னர்கள் இந்த 16 பேரை விமர்­சிக்­கின்­றனர். அதா­வது சுக­போ­கங்­களை அனு­ப­வித்து விட்டு இறு­திக்­கட்­டத்தில் உங்­க­ளுடன் இணைந்­துள்­ள­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது. இதனை நீங்கள் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்: பாரா­ளு­மன்ற அர­சியல் என்றால் என்ன என்­பதை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அர­சாங்­கத்­திற்கு பாரா­ளு­மன்­றத்தில் நீடித்தால் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை செய்­து­கொள்ள முடியும்.

கடந்த காலங்­களில் அரச சொத்­துக்கள் விட­யத்தில் அர­சாங்கம் எவ்­வாறு செயற்­பட்­டது என எமக்கு தெரியும்.

ஆனால் இப்­போது அர­சாங்கம் ஸ்திர­மற்­ற­தா­கி­விட்­டது. எனவே தற்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிரிந்­து­வந்­த­வர்­களை இணைத்­துக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அவர்­களை நாம் நிரா­க­ரித்தால் பிரச்­சி­னை­யா­கி­விடும். எமது பக்கம் உள்­ள­வர்கள் குறு­கி­ய­ம­னப்­பான்மை உள்­ள­வர்கள் அல்லர். தற்­போது

ஐ.ம.சு.மு.வில் தெரி­வான 96 பேரில் 70 பேர் எமது பக்கம் இருக்­கின்­றனர்.

கேள்வி: பிரதி சபா­நா­ய­கரைத் தெரிவு செய்­யும்­போது சில கூட்டு எதி­ரணி எம்.பி.க்கள் சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்­ளே­வுக்கு ஆத­ரவு வழங்­க­வில்லை ஏன்?

பதில்: இதில் தொடர்­பாடல் இடை­வெ­ளி­கா­ணப்­பட்­டன. பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில் சுதர்­ஷி­னிக்கு ஆத­ரவு வழங்­கவே தீர்­மானம் எடுத்தோம்.

ஆனால் கம்­பஹா மாவட்­டத்தில் உள்ள எம்.பி.க்களுக்கு அவர்­க­ளுக்குத் தேவை­யான வகையில் தீர்­மானம் எடுக்க அனு­மதி வழங்­கினோம். இது சில­ரினால் தவ­றாக புரிந்­து­கொள்­ளப்­பட்­டு­விட்­டது. அதுதான் இந்த விட­யத்தில் நடை­பெற்­றது.

கேள்வி: பாரா­ளு­மன்­றத்தை கலைக்க போராட்டம் நடத்­தப்­போ­வ­தாக கூட்டு எதி­ரணி கூறி­யுள்­ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில்: மக்கள் போராட்­டமே தற்­போது இருக்­கின்ற ஒரே தெரி­வாக இருக்­கின்­றது. இல்­லா­விடின் பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பது கடி­ன­மாகும்.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் ஒரு பிரே­ர­ணையை நிறை­வேற்­றலாம். ஆனால் அதனை எத்­தனை எம்.பி.க்கள் விரும்­பு­வார்கள் என்று தெரி­யாது. காரணம் ஓய்­வூ­தியப் பிரச்­சினை குறித்து எம்.பி.க்கள் சிந்­திப்­பார்கள்.

எனவே மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையில் பிரே­ர­ணையில் கையொப்­ப­மிட எம்.பி.க்கள் சம்­ம­திப்­பார்கள் என நான் நினைக்­க­வில்லை. நாம் அர­சாங்­கத்தை தோற்­க­டிக்­கவே முயற்­சிக்­கின்றோம்.

அதுதான் எமது இலக்கு. எமது அர­சியல் செயற்­பா­டு­களில் ஒரு பக்­க­மாக அது இருக்­கி­றது. ஐ.தே.க. எம்.பி.க்களும் பல அசௌ­க­ரி­யங்­களை சந்­தித்து வரு­கின்­றனர்.

அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு நிதி இல்­லாமல் கஷ்­டப்­ப­டு­கின்­றனர். உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் அர­சாங்கம் அதி­கா­ரத்தை இழந்­து­விட்­டது. எனவே அவர்கள் இன்னும் நெருக்­க­டியை எதிர்­கொள்­வார்கள்.

கேள்வி: அர­சாங்கம் கம்­பெ­ர­லிய என்ற பெயரில் அபி­வி­ருத்தித் திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளது. அது­தொ­டர்பில் உங்கள் கருத்து?

பதில்: நாம் கிரா­மங்­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பி­விட்டோம். அவர்கள் செய்­வ­தற்கு ஒன்றும் இல்லை.

கேள்வி: அடுத்­த­வ­ருட இறு­திப்­ப­கு­தியில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வேண்­டி­யுள்­ளது. அதற்­கி­டையில் பாரா­ளு­மன்றத் தேர்தல் குறித்து ஏன் பேசு­கின்­றீர்கள்?

பதில்: எமக்கு அதுவும் முக்­கி­ய­மா­ன­துதான். அதற்கு முன்னர் அர­சாங்கம் மாகா­ண­சபைத் தேர்­தல்­களை நடத்­த­வேண்டும். பாரிய தாமதத்­திற்குப் பின்னர் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­களை நடத்­தினர்.

நாம் கொடுத்த அழுத்தம் கார­ண­மா­கவே அதனை செய்­தனர். தற்­போது மூன்று மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்தல் தாம­த­மா­கி­யுள்­ளது.

இவ்­வ­ருடம் வட­மா­கா­ண­சபைத் தேர்­தலை நடத்­த­வேண்­டி­யுள்­ளது. டிசம்பர் மாதம் ஆகும் போது அர­சாங்கம் வட­மா­கா­ண­சபைத் தேர்­தலை நடத்தி ஆக­வேண்டும்.

செப்­டெம்பர் மாதம் அந்த மாகா­ண­சபை கலைக்­கப்­படும். நாம் கிழக்கில் அமைத்த மாகா­ண­சபை இப்­போ­தில்லை. அக்­கா­லத்தில் மாகாண அதி­கா­ரத்­துக்­காக தமிழ் கூட்­ட­மைப்பு அழு­து­கொண்­டி­ருந்­தது. ஆனால் கூட்­ட­மைப்­புக்கு இன்று மாகாண அதி­காரம் கூட இல்லை.

கேள்வி: அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலை நீங்கள் மட்­டுமே தெரி­வு­செய்ய முடியும் என கூட்டு எதி­ரணி கூறு­கின்­றது. உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: என்­னு­டைய சொந்த விட­யங்­களைக் கொண்டு நான் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை நிய­மிக்­க­மாட்டேன். நான் இந்த நாடு முழு­வதும் சுற்­றும்­போது மக்­க­ளி­ட­மி­ருந்து பல கருத்­துக்­களை பெறு­கின்றேன்.

எந்­த­வொரு தலை­வரும் செல்­லா­த­வ­கையில் நான் நாடு­மு­ழு­வதும் பய­ணிக்­கின்றேன். இதன்­போது மக்­களின் கருத்­துக்­களைப் பெறு­கின்றேன்.

அவற்றை நான் கருத்தில் கொள்வேன். அத்­துடன் கூட்டு எதி­ர­ணியும் இருக்­கின்­றது. நாம் சரி­யான நேரத்தில் ஒன்­று­கூடி சரி­யான வேட்­பா­ளரை தெரி­வு­செய்வோம். பொருத்­த­மான அர­சாங்­கத்தை நடத்­தக்­கூ­டிய ஒரு வேட்­பா­ளரை தெரி­வு­செய்வோம்.

கேள்வி: சிலர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ குறித்து பேசு­கின்­றனர். அது­தொ­டர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: கோத்­த­பாய ராஜ­பக் ஷ பொருத்­த­மான வேட்­பாளர் என்று அவர்கள் கூறு­கின்­றனர். அதற்­காக அவர் தெரி­வு­செய்­யப்­பட்­டு­விட்டார் என்று அர்த்­த­மில்லை. வேறு கருத்­துக்­களும் உள்­ளன.

கேள்வி: அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வகி­பாகம் எப்­ப­டி­யி­ருக்கும்?

பதில்: அது பற்றி எனக்குத் தெரி­யாது. நான் அவ­ருடன் தொடர்­பில்லை. பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கும்­போது அவரே என்னைத் தொடர்­பு­கொண்டு ஆத­ரவு வழங்­கு­மாறு கூறினார்.

நாம் அதற்கு இணங்­கினோம். எனினும் இடை­ந­டுவில் அவர் அதனை கைவிட்டு விட்டார். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் அனைத்து விட­யங்­களும் ஜனா­தி­ப­தியின் கையில் உள்­ள­தாக நான் அப்­போதே கூறினேன்.

அவர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி அவ­ருக்கு மேல் தீர்­மானம் எடுப்­பவர் யார் என்று எனக்குத் தெரி­யாது. சமூக ஊட­கங்­களில் தவ­றான தக­வல்கள் வெளி­வ­ரு­கின்­றன.

கேள்வி: அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் எவ்­வாறு தீர்க்­க­மாக அமையும்?

பதில்: அனைத்து சமூ­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து வாக்­கு­களைப் பெற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சிறு­பான்மை சமூகம் ஒரு­ பி­ரி­வுக்கு வாக்­க­ளித்தால் அது தாக்­கத்தை செலுத்தும்.

ஆனால் அது இறுதி முடி­வாக இருக்­காது. எனவே ஜனா­தி­ப­தி­யாக வர விரும்­பு­கின்­றவர் அனைத்து சமூ­கங்­க­ளி­லி­ருந்தும் வாக்­கு­களைப் பெற­வேண்டும்.

கடந்த தேர்­தலில் எமக்கு எதி­ராக பொய்­ப் பி­ர­சா­ரங்கள் செய்­யப்­பட்­டன. எம்­முடன் இருந்­த­வர்­களே அதனை செய்­தனர். எம்­மைக்­காட்­டிக்­கொ­டுத்து விட்டு எம்­மி­ட­மி­ருந்து பிரிந்து சென்­றனர்.

தற்­போது சிறு­பான்மை மக்கள் உண்­மையை புரிந்­து­ கொள்ள ஆரம்­பித்து விட்­டனர். நாம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு கைகொ­டுத்­த­தைப்­போன்று தற்­போது யாரும் செய்­ய­வில்லை. முஸ்லிம் மக்கள் எமது அர­சாங்­கத்தின் கார­ண­மாக இன்று தமது கிரா­மங்­களில் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர்.

நாம் பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்து வடக்கு, கிழக்கில் அவர்கள் வாழ்­வ­தற்­கான சூழலை உரு­வாக்­கினோம். புலி­க­ளால்­ வி­ரட்­டப்­பட்ட அந்த மக்­களை நாம் மீள் குடி­யேற்­றினோம்.

அவர்கள் அதனை புரிந்­து­கொண்­டுள்­ளனர். அவர்­களின் பகு­தி­களில் அபி­வி­ருத்தி நடக்­கா­த­தனால் உண்­மையைப் புரிந்­து­கொண்­டுள்­ளனர். பிரி­வி­னையை அவர்­க­ளது அர­சி­யல்­வா­திகள் பிர­சா­ர­மாக செய்­கின்­றனர். மக்கள் அதனை நம்­ப­மாட்­டார்கள்.

கேள்வி: நீங்கள் அமெ­ரிக்கத் தூதுவர் அப்துல் கேசாப்பை சந்­தித்­தமை தொடர்பில் பல தக­வல்கள் வெளி­யா­கின. என்ன நடந்தது?

பதில்: நாம் ஒரு சந்­திப்பை நடத்­தினோம். தூதுவர் பத­விக்­காலம் முடிந்து செல்­ல­வுள்­ளதால் மரி­யாதை நிமித்தம் அவர் தலை­வர்­களை சந்­தித்தார். அந்த அடிப்­ப­டை­யி­லேயே எனது சந்­திப்பு நடை­பெற்­றது. அது ஒரு வழ­மை­யான சந்­திப்பு மட்­டு­மே­யாகும்.

கேள்வி: தேர்தல் முடி­வு­களைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தியா மற்றும் மேற்கு நாடு­களின் அழுத்தம் எப்­ப­டி­யி­ருக்கும்?

பதில்: அவர்­க­ளினால் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். குறிப்­பாக இந்­தி­யா­வினால் பாரிய அர­சியல் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும்.

கேள்வி: இந்­தி­யாவின் தாக்கம் எவ்­வ­ளவு பெரி­ய­தாக இருக்கும்?

பதில்: ஒரு மட்­டத்­திற்கு இந்­தி­யாவின் தாக்கம் இருக்கும். அந்த அழுத்­தங்­களை தாண்­டு­வ­தற்கு நாம் ஒரு நிலை­மைக்கு வந்­தா­க­வேண்டும். ஆனால் இந்­தியா இலங்­கையின் உள்­ளக அர­சியல் விவ­கா­ரங்­களில் தலை­யி­டாது என்று நம்­பு­கின்றோம்.

கேள்வி: மேற்கு நாடு­களின் அழுத்தம்?

பதில்: அது அந்­த­ளவு பெரி­ய­தல்ல.

கேள்வி: அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் நிர்­வா­கத்தின் கீழ் அமெ­ரிக்க நிலைமை குறித்து ?

பதில்: அமெ­ரிக்­காவில் யார் பத­விக்கு வந்­தாலும் அவர்­க­ளது கொள்கை மாறாது. அவர்­க­ளது வெளி­வி­வ­கார கொள்கை ஒன்­றுதான்.

கேள்வி: நீங்கள் மீண்டும் பத­விக்கு வந்தால் ஐ.நா. மனித உரிமை பேர­வையை எவ்­வாறு கையாள்­வீர்கள்?

பதில்: எமது இரா­ணுவ வீரர்­க­ளுக்கு எதுவும் நடக்க நாம் அனு­ம­திக்­க­மாட்டோம். நாம் மனித உரிமை குறித்து பேசு­கின்றோம். மக்கள் சித்­தி­ர­வ­தைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் கொலை செய்­யப்­ப­டு­வ­தையும் நாங்கள் எதிர்­க்கின்றோம்.

கேள்வி: மலே­ஷி­யாவில் முன்னாள் பிர­தமர் மஹதீர் மீண்டும் ஆட்­சிக்கு வந்­துள்ளார். அது­போன்று ரஷ்ய ஜனா­தி­பதி புட்­டினும் மீண்டும் ஆட்­சிக்கு வந்தார். இதனை நீங்கள் எவ்­வாறு அவ­தா­னிக்­கின்­றீர்கள்?

பதில்: அது இலங்­கை­யிலும் நடக்­கலாம். (சிரிக்­கின்றார்)

கேள்வி: 20ஆவது திருத்தம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: அர­சி­ய­ல­மைப்பின் ஒரு பகுதி பற்றி பேசு­வதில் அர்த்­த­மில்லை. நாம் அதனை ஆராய்ந்தோம். அதில் பாரா­ளு­மன்­றத்­தினால் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற ஜனா­தி­ப­தியை விலக்­கிக்­கொள்­வது குறித்து சரி­யான விதி­மு­றைகள் இல்லை.

அதற்கு சாதா­ரண பெரும்­பான்மை போது­மா­னது. எந்­த­வொரு கட்­சி­யா­வது சாதா­ரண பெரும்­பான்­மையை பெறாவிடின் ஜனாதிபதியை தெரிவுசெய்வதில் நெருக்கடியாகிவிடும்.

கேள்வி: தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக சுதந்திரக்கட்சியின் புதிய செயலாளர் தெரிவித்திருக்கின்றார். அது தொடர்பில்?

பதில்: அது குறித்து எனக்குத் தெரியாது. நாம் அப்படி எண்ணவில்லை. அவரின் தகுதிகளை நாம் ஆராயவேண்டும். மக்களின் கருத்துக்களைப் பெறவேண்டும். அவருக்கு சந்தர்ப்பம் இருக்கின்றதா என மக்களிடம் கேட்கவேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதியில் ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்துகொள்வார் என நான் நம்பு கின்றேன். அவர் தற்போதே ஐ.தே.க. வுடன்தான் இருக்கின்றார். அவரின் இறுதி அரசியல் வாழ்க்கையிலும் அவர் அதனை செய்வார் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி: ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு­மிடையில் பகைமை இருப்பதாக கூறப்படு­கின்றதே?

பதில்: அதனால்தான் நாட்டை முன்னேற்ற முடியாமல் இருக்கின்றது. ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்கத்தினால் இரண்டு யானைகளைக்கூட இடமாற்ற முடியாமல் இருக்கின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்  “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News