ilakkiyainfo

ilakkiyainfo

பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம்

பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம்
July 09
01:17 2016

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. திருகோணமலைத் துறைமுகப் பாதுகாப்பு குறித்து சந்திரிகாவின் கவனம் திரும்பியிருந்தது.

வடக்கு, கிழக்கில் அரசியல் வேலைகளைச் செய்ய புலிகளை அனுமதித்ததால் அங்கு பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் பத்திரிகைகளால் வெளியிடப்பட்டன.

ரணில் தனது அதிகார இருப்பை நோக்கி நகர்வதால் பாதுகாப்பில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதாக சந்திரிகா கருதினார்.

இப் பின்னணியில் இடைநிறுத்தியிருந்த பேச்சுவார்த்தைகளைத்  தொடர புலிகள்  சம்மதித்ததாலும், அரசின்  இடைக்கால நிர்வாக சபை, புலிகளின்  இடைக்கால தன்னாட்சி  அதிகாரசபை முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க இரு தரப்பினரும் தயாராக இருந்ததாலும், நோர்வே தரப்பினர் பேச்சுவார்தைகளை ஆரம்பிக்க துரித கதியில் செயற்பட்டனர்.

இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக புலிகள் முதன் முதலாக எழுத்து வடிவில் தமது கோரிக்கையினை முன் வைத்துள்ளதால் அதன் உள்ளடக்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடர உதவுமா? என்பது குறித்து அவர்களது கவனம் திரும்பியது.

அரச தரப்பினர் புலிகளின் கோரிக்கைகள் எட்ட முடியாத அளவுக்கு சென்று விட்டதாக உணர்ந்தார்கள்.

இருப்பினும் பேசிப்பார்க்கலாம் என்ற முடிவில் இருந்தார்கள். ஆனால் நோர்வே தரப்பினரின் அபிப்பிராயம் வேறு விதமாக இருந்தது.

25 வருடங்களுக்கு மேலாக புலிகள் போராடி வந்த போதிலும் இப்போதுதான் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்கள்.

pirapaharan_delegation பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் pirapaharan delegation

ஆனாலும் புலிகள் தரப்பில் இப் பேச்சுவார்த்தைகளை நடத்துபவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அதாவது பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரு போதும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைப்பவர்களாக இருக்கவில்லை.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் கூட உருத்திரகுமாரன், மகேஸ்வரன் போன்றவர்கள் தலைமையிலான அறிஞர்கள் குழுவினரால்தான் தயாரிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் இம் முன் மொழிவுகள் குறித்து பாலசிங்கம் மகிழ்ச்சியடையவில்லை தாம் ஒரு மூத்த உறுப்பினர் என்ற வகையிலும், எது சரியானது என்பதில் தமக்கு போதுமான தகைமை இருக்கிறது என்ற எண்ணத்தினாலும், அவை தனது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை அவர் விரும்பினார்.

Erik-Solheim பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் Erik SolheimErik-Solheim

எரிக் சோல்கெய்ம் அவர்களின் கருத்துப்படி இக் கோரிக்கை புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை மட்டுப்படுத்துவதாகவும், மிகவும் இறுக்கமாக இருப்பதாலும் அவை ரணிலிற்கு பெரும் சவாலாக அமையலாம் எனவும் பாலசிங்கம் கருதினார்.

அதுமட்டுமல்ல…,

புலிகள் தரப்பில் ஆலோசனைகளை வழங்கிய புலம்பெயர் அறிஞர்கள் பிரச்சனைகளை கோட்பாட்டு அடிப்படையில் அணுகினார்களே தவிர, அரசியலில் காணப்படும் சிக்கல்களை அவர்களால் உணர முடியவில்லை.

பாலசிங்கம் மட்டுமே தனது அபிப்பிராயத்தை சுயாதீனமாக பிரபாரனுக்கு தெரிவித்து வந்தார். ஏனையோர் பிரபாகரனை மகிழ்ச்சிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தினார்கள் என்கிறார் சோல்கெய்ம்.

பாலசிங்கம் குறித்து சோல்கெய்ம் மேலும் தெரிவிக்கையில்……

பல்வேறு வகைப்பட்ட வகையிலான சமஷ்டி வழிமுறைகளையும், அதில் அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கும் நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்து பிரபாகரனை அதில் தலைவனாக அமர்த்துவதே அவரது நோக்கமாக இருந்தது.

பிரிந்து செல்வது முடியாத காரியம் என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தார்.

இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் ரணிலிற்கு பெரும் பாதகமாக அமையும் என்பதை பிரபாகரன் எண்ணிப் பார்க்கவில்லை ஏனெனில் அது அவரது பிரச்சனையாக உணர்ந்தார்.

சுயநிர்ணய உரிமை குறித்து பாலசிங்கத்தின் அபிப்பிராயங்களை சோல்கெய்ம் இவ்வாறு விபரிக்கிறார். “சுயநிர்ணய உரிமை என்பது இலட்சியமாக கருதும் அவர் அது சுதந்திரமாக பிரிந்து செல்வதாக கருதவில்லை என்கிறார்.

சுயநிர்ணய உரிமை குறித்த புலிகளின் விளக்கங்களில் பிரிந்து செல்வதை வற்புறுத்திச் செல்லவில்லை என்கிறார்.

அது வளைந்து கொடுக்கக்ககூடியது. புிரிந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. வேறுவிதமாகவும் அமையலாம் எனக் கருதும் பாலசிங்கம் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் தனித்துவமானவர்கள் ஆனாலும் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட உயர்ந்தவர்கள் என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது.

தேசிய இனப் பிரச்சனை குறித்த அணுகுமுறைகளில் சுயாதீனமான எண்ணப் போக்கினைக் கொண்டிருந்த பாலசிங்கம் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைப் பேச்சுவார்த்தைகளில் ஓரம் கட்டப்பட்டார்.

தனது மனதில் இன்றுவரை தொடரும் கவலை குறித்து சோல்கெய்ம் தெரிவிக்கையில் மிகச் சொற்பமானவர்களே தெற்கில் காணப்படும் அரசியல் போக்கு குறித்து அல்லது  இந்தியா அல்லது உலக கவனம் சம்பந்தமாக  அறிந்துள்ளார்கள் எனத் தெரிவிக்கிறார்.

இதன் போக்கினை அவர்கள் நன்கு தெரிந்திருந்திருந்தால் ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்திருக்க மாட்டார்கள். புலம்பெயர் தமிழர்கள் பொருளாதாரம், சமூக, கலாச்சார அம்சங்களைப் புரிந்துள்ள போதிலும் அவை அரசியல் புரிதலில் வெளிப்படவில்லை என்கிறார்.

Ranil-Chandrika பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் Ranil Chandrikaசந்திரிகா, ரணில் அரசின் அமைச்சுகளைப் பறித்தார்.

2003ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி ரணில் அரசின் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சுகளைப் பறித்து தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அரசின் முக்கிய துறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உதாரணமாக, தேசிய தொலைக்காட்சி நிறுவனம், அரச அச்சகம் என்பன கட்டுப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி சந்திரிகாவின் இத் திடீர் நடவடிக்கைகள் நாட்டின் சிக்கலான அரசியல் நிலவரத்தை உணர்த்தின.

ஓரு சில நாட்களுக்குள் ஏற்பட்ட இத் திடீர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் சகலரையும் அமைதியைப் பேணுமாறு கோரிய அதே வேளை விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அவை நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு, தேசத்தின் இறைமை என்பவற்றை மதிப்பதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

சந்திரிகாவின் இந் நடவடிக்கைகள் ரணில் அமெரிக்கா சென்றிருந்த தருணத்தில் நிறைவேற்றப்பட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அடுத்த சில தினங்களில் ரணில் நாடு திரும்பியபோது பெரும் வரவேற்பு காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவசரகால நிலை எடுக்கப்பட்டு ஐ தே கட்சியுடன் தேசிய ஐக்கிய அரசு ஒன்றை அமைக்கப் போவதாக சந்திரிகா அறிவித்தார்.

அவ் வேளையில் கட்சித் தாவல்கள் நடைபெறும் என்ற ஊகங்கள் வெளியாகியிருந்தன.

தனது கட்சியில் எதிர்க்கட்சியினர் சேரலாம் என சந்திரிகா எண்ணியிருந்தார்.

தேர்தல் ஒன்றிற்கான வாய்ப்புகளும் அதிகரித்திருந்த காரணத்தால் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளையும் காரசாரமாக விமர்ச்சித்திருந்தார்.

புலிகளுடன் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை குறித்து ரணில் பேசத் தயாராக இருந்தமையால் அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் கூறி சிங்கள தேசியவாத சக்திகளை தனது பக்கம் திருப்ப அவர் முயற்சித்தார்.

முக்கியமான மந்திரிப் பதவிகளை சந்திரிகா பறித்தமையால் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சினைப் பறித்தமையால் புதிய அரசியல் களம் தயாராகியது.

முக்கியமான மந்திரிப் பதவிகள் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு தமது கையில் இல்லாத காரணத்தால் தம்மால் சமாதான முயற்சிகளை மேலும் எடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதியே பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் எனவும் ரணில் நோர்வே தரப்பினரிடம் தெரிவித்தார்.

2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தில் தனது ஒப்புதல் இல்லாத காரணத்தால் அது சட்ட விரோதமானது எனத் தெரிவித்த சந்திரிகா தாம் சமாதானத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதால் ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்க உதவுவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி சந்திரிகாவின் இத் தலையீடு குறித்து எரிக் சொல்கெய்ம் குறிப்பிடுகையில் இடைக்கால தன்னாட்டசி அதிகாரசபை முன்மொழிவுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்பது வாதமாக இருந்தது.

ரணில் அரசைப் பலவினப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்த அவர் புலிகள் தமது கோரிக்கையை முன்வைத்த மறுநாளே அமைச்சுப் பதவிகளைப் பறித்துள்ளார்.

இந்திய தரப்பினரும் இந் நிகழ்வுகள் குறித்து சந்தேகத்துடனேயே காணப்பட்டனர். இவ்வாறான பல பின்னணி நிகழ்வுகள் இம் முடிவுகளை நோக்கித் தள்ளின.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன்- பிரபாகரன் சந்திப்பு

patpirapa பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் patpirapa

Mr. Patten wishing the LTTE leader

அரசிற்குள் காணப்பட்ட பிணக்குகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன் 2003ம் ஆண்டு நவம்பரில் இலங்கை வந்தார்.

இவர் பிரித்தானியாவில் 1987இல் சர்வதேச அபிவிருத்தி  அமைச்சராக இருந்து போது  இலங்கைக்குச் சென்றிருந்தார்.

இவரும் ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ் போலவே நோர்வே முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவே சென்றிருந்தார். 2003ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி வன்னிக்குச் சென்றிருந்தார்.

இவ் வேளை மாவீரர் தின காலமாகையால் அங்கு சிங்கள எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரமாகக் காணப்பட்டன.

பிரபாகரனைச் சந்தித்த பின்னர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தாம் வன்முறையை முழுமையாக கைவிடுமாறு வற்புறுத்தியதாகவும், போரைக் கைவிடுமாறு கோரியதாகவும் தெரிவித்தார்.

தனது வன்னி அனுபவங்கள் குறித்து கிறிஸ் பற்றன் தெரிவிக்கையில்.. “ தாம் கிளிநொச்சி சென்றிருந்தபொது சிறுவர்கள் புலிக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் தெருவோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தாகவும், பிரபாகரனின் குணங்கள் குறித்த பயங்கர தோற்றம் தனது நினைவுக் வந்ததாகவும், அவரைப் பார்த்ததும் சிறிதளவு தாக்கமே ஏற்பட்டதாகவம்,

அவரைச் சுற்றிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்தவர்களே காணப்பட்டதாகவும், மிகவும் பலவீனமான கை குலுக்கலே இடம்பெற்றதாகவும், தனது அருகிலிருந்த  இருவரையே அதிகம் பேசவைத்ததாகவும், தம்மை அவர் நேரடியாக பார்த்துப் பேசியது மிகக் குறைவு எனத் தெரிவித்தார்.

patten_meet_06 பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் patten meet 06  LTTE  leader  Mr. Velupillai Pirapaharan,  European Union’s Commissioner Mr. Patten

அவரது தோற்றம் குறித்துத் தெரிவிக்கையில் இரக்கமற்ற தோற்றமாக இருந்ததாகவும், குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சிகூட இருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

கிறிஸ் பற்றனைச் சந்தித்த மறுநாள் இடம்பெற்ற மாவீரர் தின உரையில் சந்திரிகாவின் தலையீடு மிக மோசமான முறையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை பாதித்துள்ளதாகவும், இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவகள் நிரந்தர தீர்வை நோக்கிய வரைவுகள் அல்ல எனத் தெரிவித்து அவை புனர்வாழ்வு, புனரமைப்பு போன்ற அலுவல்களை மேற்கொள்ள வரையப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இனப் பிரச்னையைத் தீர்க்க ஒரு கட்சி முயலும் போது மற்றக் கட்சி எதிர்க்கும் நாடகம் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் தொடரும் ….
– வி. சிவலிங்கம்

முன்னைய தொடர்களை வாசிக்க  இங்கே அழுத்தவும்>> (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-1….2..3….4..5..6..7…8…9.10…11..12..13..14)

 

OLYMPUS DIGITAL CAMERA பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் welcoDr. Jay Maheswaran, Mr. Thamilchelvan and Mr. Thangan welcoming Mr. Patten at the Kilinochchi grounds

patten_meet_03 பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் patten meet 03Mr.patten

patten_meet_05 பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் patten meet 05patten_meet_07 பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-15) – வி. சிவலிங்கம் patten meet 07

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News