ilakkiyainfo

ilakkiyainfo

பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்

பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்
February 24
00:20 2018

அன்பார்ந்த வாசகர்களே!

மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று இப் பிரச்சனையில் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத  ஒருவர் பதவியை அலங்கரித்த போதிலும் இதற்காக  முக்கிய தலைவர்களும், சாமான்ய மக்களும் அதிக விலை கொடுத்துள்ளனர்.

அதேவேளை சிங்கள மக்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்புகள் காணப்பட்டன. குறிப்பாக ஜே வி பி இனர் தமது அரசியலை முன்னெடுப்பதற்காக இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தினர்.

விடுதலைப்புலிகளின் முடிவுகள் காரணமாக இந்திய சமாதானப் படையினருக்கும், அவர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக இப் பிரச்சனையில் சம்பந்தப்படாத பொது மக்களும் மரணத்தைத் தழுவினார்கள்.

EconomistDec241988 பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம் EconomistDec241988

இப் பின்னணியில் நூலில் தொடரும் செய்திகளைப் படியுங்கள்…

இம் மோதல்  நிலை மிக மோசமாகத் தொடர்ந்த  அதே வேளை  இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் 1987ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி கொண்டு வருவதென  அறிவிக்கப்பட்டது.

இவ் ஒப்பந்தத்திற்கு எதிராகவும், தனது அதிகாரத்தை மேலும் விஸ்தரிப்பதற்கான  வாய்ப்புக் கிடைத்துள்ளதையும் பயன்படுத்த ஜே வி பி திட்டமிட்டது. இவ் ஒப்பந்தத்திற்கு எதிராக மக்களைத் திரட்டியது.

இதே  தருணத்தில் விடுதலைப் புலிகள் முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் திரும்பினர். 1987ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து திருகோணமலைப் பகுதியிலுள்ள கண்டகாடு என்னும் இடத்தில் வாழ்ந்த 30 முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு புறத்தில் சிங்கள மக்களின் கொந்தளிப்பும், மறு புறத்தில் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்த நிலையில் 13வது திருத்தத்தின் அடிப்படையில் வடக்கு –கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கில் இலங்கை -இந்திய அரசுகள் தொடர்ந்தும் பேசின.

இத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை என அறிவித்த புலிகள் தேர்தலைத் தடுக்க உபாயங்களைத் தேடினர்.

இத் தேர்தலை நடத்துவதற்காக முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி நளீன் செனிவிரத்ன  இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபையின் ஆளுனராக ஜனாதிபதி ஜே ஆரினால் நியமிக்கப்பட்டார்.

Varatharaja_perumal-720x450 பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம் Varatharaja perumalஇத் தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரதராஜப்பெருமாளின் தலைமையில் இத் தேர்தலில் குதித்து அவர் இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் ஆனார்.

நாடு முழுவதும் பிரச்சனைகள்  உக்கிரமடைந்து சென்ற வேளையில் ஜனாதிபதி ஜே ஆரின் பதவிக் காலம் முடிவடைந்தது.

அதன் பின்னர் அப்போதைய பிரதமர் பிரேமதாஸவும், முன்னாள் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டனர்.

தெதற்கில் ஜே வி பி  இனதும், வடக்கில் புலிகளினதும் பயங்கரவாதம் பீடித்திருந்த வேளை பிரேமதாஸ அத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

premadasa பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம் premadasaநாடு முழுவதும் பயங்கரவாதம் என்ற தீ பற்றி எரிந்த வேளையில் பதவியைப் பெற்ற பிரேமதாஸ அத் தீயை அணைக்க வழி வகைகளைத் தேடினார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தினைத்தொடர்ந்து நிராகரித்த அவர் அவ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட இந்தியப் படைகளை மீள அனுப்பி பயங்கரவாதத்தைத் தணிக்க எண்ணினார்.

இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகள் தொடர்பாக அவர்கள் எமது நாட்டின் மைந்தர்கள்.

தவறான  கோட்பாட்டில் வழி நடத்தப்படுகிறார்கள். எமது பிள்ளைகள் அவ்வாறு தவறாக வழி தவறினால்  அயலவர் நல்வழி கூறித் தண்டிப்பது வழமை. எனவே தற்போது அயலவரின் கடமை முடிவடைந்துள்ளது.

எமது  பிள்ளைகளை எம்மிடம் கையளித்து நாம் சரியான வழிக்குத் தொடர்ந்து எடுத்துச் செல்ல உதவுதல் வேண்டும். எனவே அயலவர்கள் எமது பிள்ளைகளை எம்மிடம் கையளியுங்கள். என மிகவும் பகிரங்கமாகக் கூறினார்.

இச் செய்தி இந்திய அரசிற்கும், சமாதானப் படையினருக்கும் பெரும் இடியாக அமைந்தது.

ஒரு புறத்தில் இந்தியப் படைகளை விலகுமாறு கோரிய அவர் மறு புறத்தில் விடுதலைப்புலிகளுடன் நிபந்தனை அற்ற சமாதான முயற்சிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

இந்தியப் படைகளின் தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இவ் அறிவித்தல் பெரும் ஆறுதலை அளித்தது. 1989ம் ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி இலங்கை அரசிற்கும், புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன.

மிகவும்  நம்பிக்கையோடு ஜனாதிபதி பிரேமதாஸ இவற்றை ஆரம்பித்த போதிலும் நாம் புலிகள் தொடர்பாக  மிகவும் அவநம்பிக்கை கொண்டிருந்தோம்.

தம்மை மீளவும் பலப்படுத்திக் கொள்ள இத் தருணத்தைப் புலிகள் பயன்படுத்தினர். இச் சமாதான முயற்சிகள் எதிர்பார்த்தவாறு செல்லவில்லை.

அதன் காரணமாக  படையினராகிய நாம் உளவியல் ரீதியாக இறுதி நிலைக்குத் தயாரானோம்.

ஜனாதிபதி பிரேமதாஸ பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு அவர்களின் கோரிக்கைகளுக்குப் பணிந்தார்.

வடக்கு, கிழக்கின் சட்டம், ஒழுங்குப் பாதுகாப்பை அப் பகுதியின் மாகாணசபைத் தேர்தல் முடியும் வரை புலிகளிடம் கையளிக்கச் சம்மதித்தார்.

ராணுவத்தையும், பொலீசாரையும் முகாம்களுக்குள் முடக்கவும் சம்மதித்தார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென உருவாக்கப்பட்ட படைகள் மிகவும் வெட்கப்படத்தக்க, அவமானப்படுத்தப்படத்தக்க, வருத்தப்படத்தக்க விதத்தில் முகாமிற்குள் முடங்கின.

இத் துன்பத்தை ஜனாதிபதியோ, அவரைச் சூழவுள்ளவர்களோ இதனை உணர்ந்திருக்கவில்லை.

இப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த வேளையில் 1989ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி திருகோணமலையில் புலிகளின் குண்டுத் தாக்குதலால் 51 பொதுமக்கள் பலிகொள்ளப்பட்டனர்.

ஆனாலும் புலிகள் தரப்பினர் அதன் பிரதித் தலைவர் மாத்தையா தலைமையில் யோகி எனப்படும் யோகரத்னம், அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் சமாதானம் பேச கொழும்பு வந்தனர்.

ஐந்து நட்சத்திர விடுதியில் அவர்களுக்குரிய பாதுகாப்பை நாம் வழங்கியது எமது முகத்தில் நாமே அடிப்பது போலிருந்தது.

p11-poli பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம் p11 poliமாத்தையா, யோகி

புலிகளின் தந்திரங்கள்

மாத்தையா ஒரு நல்ல மனிதர்என ஜனாதிபதி புகழும்  அளவிற்கு மாற்றம்  பெற்றிருந்தன.

இவற்றிற்கு மத்தியில் 1989ம் ஆண்டு யூலை 13ம் திகதி தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைவர் எனவும், ஒரு சந்தர்ப்பத்தில்

AA052413 பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம் AA052413பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்ட  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

அவருடன் கூடவே இன்னொரு  பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண அமைப்பாளர் சின்னத்தம்பி  சம்பந்தமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பிரபாகரனுடன் நெருக்கமான  உறவுகளை வைத்திருந்தவர்கள்.

எனது கடந்த கட்டுரை ஒன்றில் அமிர்தலிங்கம் அவர்கள் யாழ்தேவி புகையிரதத்தில் மறைந்த இந்தியப்  பிரதமர் இந்திராகாந்தியின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கொழும்பு சென்ற போது  அவருக்கு எதுவும்  நிகழக்கூடாது என அவர் எம்மைக் கடிந்து கொண்ட போதும் பாதுகாப்பு வழங்கியதைக்  குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் பின்னாளில் ஏற்பட்ட இச் சம்பவங்கள் அதாவது மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவரும்,  தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக ஓய்வில்லாது உழைத்த தலைவர்களும், ஜனநாயக வழியில் தமிழ்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட இத் தலைவர்கள் புலிகளின் ஏகபோகத் தலைமை நோக்கங்களுக்காக  அழிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியது.

அமிர்தலிங்கத்தின் மரணம்  பொது மக்கள் மத்தியில்  மட்டுமல்ல, ஆயுதப் படைகள் தரப்பிலும் கவலையை அளித்தது.

அமிர்தலிங்கம் அவர்களால் கருத்தரிக்கப்பட்ட ஈழக் கோட்பாடும், அதன் மூலம் இளைஞர் மத்தியில்  ஏற்பட்ட வீரியமும், புலிகளை அவர்  எமது பையன்கள் என விபரித்த விதமும் பலருக்கும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும் அவரால் ஊட்டப்பட்டு வளர்த்தவர்களே அவரது மரணத்திற்குக்  காரணமாக இருந்துள்ளனர். பொதுவாகவே  ‘வாளோடு வாழ்பவர்கள் வாளாலே மடிவார்கள்’ என்பார்கள்.

எனது கணிப்பில் ‘வாளோடு வாழ்பவர்கள் மட்டுமல்ல, அதற்கு ஊட்டியும், ஆசீர்வதித்தும்  வாழ்பவர்களும் வாளால் மடிவார்கள்’ என மாற்றி எழுத விரும்புகிறேன்.

Umamakeswaran_1 பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம் Umamakeswaran 1
பிரபாகரனுக்குச் சமமான விதத்தில் சவால் விட்டுச் செயற்பட்ட பலமான இன்னொருவர்  ‘உமா மகேஸ்வரன்’ஆகும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரான அவர் 1989ம் ஆண்டு யூலை 16ம்  திகதி கொழும்பில் புலிகளால் கொல்லப்பட்டார்.

ஒருவர் தனது சக தோழர்களைக் கொல்வாராயின் அவர் தனது தாய் நாட்டின் துரோகி எனக் கருதப்பட வேண்டும். இது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறாக தமக்குப் போட்டியாகக் காணப்படும் தலைவர்களை அழித்ததால் நாட்டின் ஒரே ஒரு பயங்கரவாத இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பு மாறியது.

உமா மகேஸ்வரனின் மரணம் என்றோ ஒரு நாள் நிகழும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

 

தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்

புலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை!: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள் தாக்குதல்கள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-11) -வி.சிவலிங்கம்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகவும் கவலையான நிகழ்வு. அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியாவது இந்த அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அநேக தமிழ் [...]

மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவது உங்கள் உடல் உள ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறான வியாதிகளிலிருந்து விரைவில் [...]

ஐசிஸ் பயங்கரவாதிகளை தேடி ராணுவம் நாடு முழுவதும் தேடுதல் நடத்த வேண்டும், அவசர கால அமுலில் உள்ள இந்த வேளையில் [...]

ஓவ்வொரு மதத்தவரிலும் கிருக்கனுகள் பலர் இருக்கிறார்கள். இவர் எங்கள் மார்கத்தில் உள்ள ஒரு பச்ச வெங்காயம் ஆவார், இவரை போலிஸ் [...]

இந்த மனநோய்க்கு மருந்தில்லை. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News