ilakkiyainfo

ilakkiyainfo

பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு!!

பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு!!
March 24
13:01 2018

பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார்.

_100550476_1a1dce75-2d41-43a3-8392-8eff51fbae23 பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு!! 100550476 1a1dce75 2d41 43a3 8392 8eff51fbae23

Arnaud Beltrame

உயிரிழந்த அர்னாட் பெல்ட்ராம் ஒரு சிறந்த நபர் என அந்நாட்டு அதிபர் இமேனுவேல் மெக்ரோன் பாராட்டியுள்ளார்.

முன்னதாக பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்தத துப்பாக்கிதாரி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால், அந்த துப்பாக்கிதாரி ஒரு பெண்ணை மனித கேடயமாக வைத்திருந்தார்.

_100540296_279842fd-69dc-47e0-8488-24401d028cc0 பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு!! 100540296 279842fd 69dc 47e0 8488 24401d028cc01

அந்த பெண்ணிற்கு பதிலாக, பிணையாக அர்னாட் உள்ளே சென்றார்.

_100551115_045725488 பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு!! 100551115 045725488

Redouane Lakdim

மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த துப்பாக்கிதாரி லக்டிம், தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியிருந்தார்.

போலீஸ் அதிகாரியான அர்னாட் உயிரிழந்ததை ட்விட்டரில் அறிவித்த அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கெரார்ட் கொலொம்ப், “அவர் தன் நாட்டுக்காக உயிரிழந்துள்ளார். அவரது துணிவையும் தியாகத்தையும் ப்ரான்ஸ் என்றும் மறக்காது” என்று கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர்  படுகாயமடைந்தனர். இது “இஸ்லாமிய பயங்கரவாதத்தின் செயல்” என்று அதிபர் மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

_100550477_1175ae59-1ffc-4887-a93b-ad411b049366 பிரான்ஸ்: பிணைக்கைதிக்கு பதிலாக தன்னை பணையம் வைத்த போலீஸ் உயிரிழப்பு!! 100550477 1175ae59 1ffc 4887 a93b ad411b049366

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13ல் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேகத்திற்குரிய நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு இத்துப்பாக்கிதாரி வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லக்திமின் கூட்டாளி என்று நம்ப்பபட்ட மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி இதே நபர் சுட்டதில் போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.

பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை பிடித்து வைக்கும் முன், அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவரையும், வாடிக்கையாளரையும் சுட்டுக் கொன்றார்.

இதுவரை பிரான்சில் நடந்த முக்கியமான தாக்குதல்கள்

அக்டோபர் 1, 2017 – மார்சே ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் குத்தி கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

ஜூலை 26, 2016 – நார்மண்டியிலுள்ள தேவாலயத்தில் இரண்டு தாக்குதலாளிகள் மதகுரு ஒருவரின் தொண்டையை அறுத்தனர். தாக்குதலாளிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜூலை 14, 2016 – நைஸ் கடற்கரையோர பகுதியில் பாஸ்ட்டீல் தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் அதிகளவில் குழுமியிருந்த இடத்தில் லாரி ஒன்றை கொண்டு ஏற்றியதில் 86 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது; தாக்குதலாளி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜூன் 13, 2016 – மான்யாங்வில் பகுதியில் போலீஸ் ஒருவரும், அவரது இணையும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறிய ஜிகாதி ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு, அவர் போலீசால் கொல்லப்பட்டார்.

நவம்பர் 13, 2015 – ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜிகாதிகள் பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடத்திய தாக்குதலில் 130 உயிரிழந்தனர், 350 பேர் காயமுற்றனர்.

ஜனவரி 7-9, 2015 – பிரெஞ்சு மொழி இதழான சார்லி ஹெப்டோவில் இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த தினங்களில் நடந்த தாக்குதல்களில் ஒரு போலீஸ் உள்பட ஐந்து பேரும், தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டனர்.

Related Articles

1 Comment

 1. Arya
  Arya March 26, 02:15

  Real Real Hero , salut him

  *** Salut à lui ***

  Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News