பிரித்தானிய இளவரசி டயானாவை ஆட்டிப் படைத்தவரும் காதலர்களில் ஒருவருமான ஒலிவர் ஹோஹார் புற்று நோயின் கோரப்பிடியில் சிக்கி பிரான்ஸில் தனது 73ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இளவரசி டயானாவின் காதலர்களான ஜேம்ஸ் ஹெவிட், ஜேம்ஸ் கில்பே, வில் கார்லிங் மற்றும் டோடி ஃபாய்டு ஆகியோரில் மிக கவர்ச்சியானவர் என்ற புகழ் ஒலிவர் ஹோஹாரையையே சாரும்.

500066CA00000578-6153061-One_of_Princess_Diana_s_ex_lovers_Oliver_Hoare_has_died_of_cance-m-5_1536619502585  பிரித்தானிய இளவரசியை ஆட்டிப் படைத்த கவர்ச்சியான காதலர் காலமானார்! 500066CA00000578 6153061 One of Princess Diana s ex lovers Oliver Hoare has died of cance m 5 1536619502585

ஓலிவர் கலைப் பொருட்களை சேகரிக்கும் பிரபல கலைஞராவார்.

0002A889000001F4-6153061-image-m-9_1536620178733  பிரித்தானிய இளவரசியை ஆட்டிப் படைத்த கவர்ச்சியான காதலர் காலமானார்! 0002A889000001F4 6153061 image m 9 1536620178733

டயானாவை விட 16 வயது மூத்தவரும் ஏற்கனவே திருமணமானவருமான ஒலிவர் ஹோஹார் இளவரசர் சார்லசின் நெருங்கிய நண்பராவார்.

4020E67600000578-6153061-Princess_Diana_and_Prince_Charles_pictured_with_Oliver_Hoare_his-m-10_1536620270384  பிரித்தானிய இளவரசியை ஆட்டிப் படைத்த கவர்ச்சியான காதலர் காலமானார்! 4020E67600000578 6153061 Princess Diana and Prince Charles pictured with Oliver Hoare his m 10 1536620270384

ஒலிவருக்கும் டயானாவிற்கும் 90களின் ஆரம்பத்தில் உறவு மலர்ந்ததாக கூறப்படும் அதே வேளை ஒலிவர் ஒரு போதும் வெளிப்படையாக தனக்கும் டயானாவிற்குமிடையிலான உறவு தொடர்பில் கருத்து வெளியிட்டதில்லை எனவும் அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டள்ளன.

5000366E00000578-0-image-a-95_1536614400407  பிரித்தானிய இளவரசியை ஆட்டிப் படைத்த கவர்ச்சியான காதலர் காலமானார்! 5000366E00000578 0 image a 95 1536614400407

டயானா தனது காரின் முன் பக்கத்தில் மறைத்து வைத்து ஒலிவரை அரண்மனைக்கு கடத்தி வந்த சந்தர்ப்பத்தில் ஒலிவர் நள்ளிரவில் அரண்மனையை விட்டு வெளியேற முயற்சித்த வேளையில் அரண்மனை பாதுகாவலர்களிடம் அரை நிர்வாணமாக பிடிபட்டுள்ளார் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலிவர் மீது அளவுகடந்த காதலில் வீழ்ந்த டயானா இராஜ தந்திரி ஒருவரின் மனைவியாக இருந்த விதவைப் பெண்ணான லேடி போக்கரிடம் தான் எப்பொழுதும் ஒலிவரின் நினைவில் இருப்பதாகவும் அழகான ஒலிவருடன் இத்தாலியில் வாழந்து கொண்டிருப்பதாகவும் பகல் கனவு காண்பதாக கூறியுள்ளார்.

எது எப்படியிருந்த போதிலும் 3 குழந்தைகளின் தந்தையான ஒலிவர் குழந்தைகளையும் தனது மனைவியையும் பிரிய மனமில்லாது டயானாவுடனான உறவை முறித்துக் கொன்டுள்ளார்.

ஆனாலும் டயானா ஒலிவரின் வீட்டிற்கு அடிக்கடி தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி தொல்லை கொடுத்ததால் ஒலிவரின் மனைவியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் நிலையத்தில் ஒலிவர் டயானாவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

ஒலிவரின் முறைப்பாட்டிற்கமைய சுமார் 300 தொலைப்பேசி அழைப்புக்களை பொலிஸார் கண்காணித்ததாகவும் பின்பு ஒலிவர் தான் அளித்த முறைப்பாட்டை மீளப்பெற்றுக்கொள்வதாக கூறியதற்கமைய குறித்த விடயம் தொடர்பான விசாரணையை பொலிஸார் நிறுத்திக் கொண்டதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பின்னர் டயானா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ஒலிவருக்கு அவ்வப்போது தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்துவதுண்டு எனவும் ஆனால் தொந்தரவு செய்யுமளவிற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஒலிவரின் புகைப்படம்50011A7E00000578-6153061-image-a-7_1536627811904  பிரித்தானிய இளவரசியை ஆட்டிப் படைத்த கவர்ச்சியான காதலர் காலமானார்! 50011A7E00000578 6153061 image a 7 1536627811904