ilakkiyainfo

ilakkiyainfo

‘பிரெக்சிட்’ பிரிய தெரியாத விவாகரத்து

‘பிரெக்சிட்’ பிரிய தெரியாத விவாகரத்து
September 06
19:22 2019

உடன்படிக்கை இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது ஆபத்தில் முடியும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. அதாவது பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையை ஒரே இரவில் இழந்துவிடும்.

இந்த ஒற்றை சந்தையானது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

அதனை இழந்தால் பிரிட்டன் பயங்கர பொருளாதார விளைவுகளை சந்திப்பதோடு அரசியல், சமூகம் என்று ஏகப்பட்ட நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.

பிரெக்சிட்டுக்கு இருப்பது இன்னும் ஒருசில வாரங்களே… காலம் கடந்துகொண்டு போகிறது… எந்த ஒரு மாற்று வழியும் இல்லை. தெரிந்த தூரத்தில் தீர்வு தெரியவில்லை.

பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் எந்த உடன்படிக்கையும் இன்றி விவாகரத்துப் பெறுவதற்குத்தான் இப்போது காலம் கூடி வருகிறது.

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் அதற்கு ஏற்ப தனது காய் நகர்த்தல்களை செய்கிறார். உடன்படிக்கை எட்டப்பட்டாலும், இல்லாவிட்டாலும்  ஒக்டோபர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்பதுவே அவரின் நிலைப்பாடு. ஆனால் அது அத்தனை இலகுவான காரியம் இல்லை.

ஒப்பந்தமில்லாமல்  பிரெக்சிட் இடம்பெறுவதை  தடுப்பதற்கு  ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பிக்கள் ஜோன்சனுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் எதற்கும் அஞ்சாத பிரதமர் அப்படி கிளர்ச்சி செய்யும் எம்.பிக்களை நீக்குவது, இல்லை என்றால் முன்கூட்டியே தேர்தலுக்கு போவது என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

உடன்படிக்கை இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது ஆபத்தில் முடியும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

q1  ‘பிரெக்சிட்’ பிரிய தெரியாத விவாகரத்து q1 e1567797698430அதாவது பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையை ஒரே இரவில் இழந்துவிடும். இந்த ஒற்றை சந்தையானது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

அதனை இழந்தால் பிரிட்டன் பயங்கர பொருளாதார விளைவுகளை சந்திக்கும் என்று எல்லா பக்கமும் எச்சரிக்கைகள் வருகின்றன.

இது மட்டுமல்ல அரசியல், சமூகம் என்று ஏகப்பட்ட நெருக்கடிகளை பிரிட்டன் எதிர்நோக்க வேண்டி இருக்கும்.

ஆனால் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவளிக்கு சில கொன்சர்வேடிவ் எம்.பிக்கள் உடன்படிக்கை இன்றி வெளியேறுவது நல்லது என்று கூறுவதிலும் அவர்கள் தரப்பில் தர்க்கம் இல்லாமல் இல்லை.

அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் ஒட்டுறவை அறுத்துக் கொள்வது பிரிட்டன் ஒரே இரவில் சுதந்திரம் பெறுவதற்கு நிகரானது என்கிறார்கள்.

பிரிட்டன் எந்த இறுக்குதலும் இன்றி வர்த்தக உடன்படிக்கைகள், சட்டங்கள் மற்றும் எல்லை நிர்ணயங்களை செய்ய முடியும் என்கிறார்கள்.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளை பிரிட்டன் மாற்றி அமைக்க முடியும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்று ஏனைய நாடுகளுடன் சுதந்திர உடன்படிக்கையில் ஈடுபட முடியும் என்று அவர்கள் கூறும் தர்க்கத்திலும் நியாயம் இருக்கிறது.

அதுமட்டுமல்ல பிரிட்டனால் சொந்தமாக குடிவரவு கொள்கைகளை வகுத்து குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தவும் முடியும் என்பது அந்த எம்.பிக்களின் தர்க்கமாகும்.

ஆனால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் கன்சர்வேடிவ்களின் ஒருசிலர் இந்த தர்க்கத்தை கேட்பதாக இல்லை. அதாவது இந்த தர்க்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

ஆளும் கட்சிக்கு ஏற்கனவே ஒரு இடம் தான் பெரும்பான்மை இருக்கும்போது பிரதமர் ஜோன்சனுக்கு தனது புரட்சிகரமாக நடவடிக்கையை முன்னெடுக்க சில தகிடுதத்தங்களை செய்ய வேண்டி இருக்கிறது.

அதன் ஒரு திட்டமாகவே பாராளுமன்றம் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை இடைநீக்கம் செய்யும் அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார். இதன்மூலம் பிரெக்சிட் காலக்கெடு முடிவதற்குள் அதற்கு எதிராக எம்.பிக்கள் கிளர்ச்சி செய்வதை அவரால் தடுக்க முடியுமாகிறது.

என்றாலும் இந்த பிரச்சினைக்கு இன்னும் உறுதியான முடிவு ஒன்று இல்லை. பெரும்பான்மை எம்.பிக்களை பொறுத்தவரை உடன்படிக்கை இன்றி பிரிட்டன் வெளியேறுவதை தடுக்க சட்டம் கொண்டுவர முயற்சிப்பார்கள்.

இதற்கு பதிலடியாக பிரதமர் முன்கூட்டியே தேர்தலுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனினும் முன்கூட்டி தேர்தலை நடத்துவதற்கு மூன்றில் இரண்டு எம்.பிக்களின் ஆதரவு தேவை.

எனினும் புதிய சட்டத்தின்படி புதிய தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் சாதாரண பெரும்பான்மை போதுமாக அமையும்.

அதன்படி ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலுக்காக திகதி நிர்ணயிக்கப்பட்டால் பிரிட்டன் பிரெக்சிட் உடன்படிக்கையுடன் அல்லது இல்லாமல் விலகுவது பற்றி மக்கள் தீர்மானிப்பதாக இருக்கும்.

இதுவல்லாமல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் ஒன்றும் எதிர்க்கட்சிகளிடையே உண்டு. ஆனால் அது எத்தனை சாத்தியப்படும் என்று தெரியவில்லை.

பிரெக்சிட் பிரச்சினைக்கு மற்றொரு தீர்வுதான், பேசாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வருவது. முன்னாள் பிரதமர் தெரேசா மே செய்து கொண்ட உடன்படிக்கை ஒன்று பிரிட்டனின் கைவசம் தற்போதும் இருக்கிறது. அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது மாத்திரமே செய்ய வேண்டிய ஒரே வேலை.

ஆனால் இந்த உடன்படிக்கையானது பல தடவைகள் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு தேரேசா மேயும் முடியாமல் பதவி விலகிய நிலையில் அந்த பழைய குப்பையை கிளற யாருக்கும் விருப்பம் இல்லை.

பொரிஸ் ஜோன்சன் அரசு புதிதாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள விரும்புகிறார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதனை விரும்பவில்லை. அதனை பொறுத்தவரை பிரிட்டனுடன் ஏற்கனவே உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுவிட்டது.

இதற்கு மற்றொரு தீர்வு பிரெக்சிட்டை மேலும் தள்ளிப்போடுவது. அதனைத்தான் தற்போது பாராளுமன்றம் கேட்கிறது.

ஆளும் கட்சிக்கு அதில் ஈடுபாடு இல்லை. இன்னும் ஒத்திப்போடுவான் ஏன் என்று அரசு கூறுகிறது. இவ்வாறு ஒத்திப்போடுவதால் பிரட்டனில் அரசியல் இழுபறி மேலும் தீவிரம் அடைவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப்போதில்லை என்ற பயம் அரசுக்கு இருக்கிறது.

இதுவெல்லாவற்றையும் தாண்டி பிரிட்டனுக்கு மற்றொரு தேர்வு இருக்கிறது. இந்த பிரெக்சிட் விவகாரத்தையே கைவிடுவது. இதற்கு பிரிட்டன் செய்ய வேண்டியது அதனைத் தூண்டும் கட்டுரை 50ஐ நீக்கிக்கொள்வது.

எனினும் பிரிட்டன் அரசு, எதிர்க்கட்சி, குடிமக்கள் எவருக்கும் இது பற்றி உறுதியான முடிவு ஒன்று இல்லை. எனவே, இதற்கான தீர்வு என்பது இப்போதைக்கு எதிர்வுகூற முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News