ilakkiyainfo

ilakkiyainfo

பிறந்த குழந்தையை கழிவறையில் போட்டுவிட்டு தப்பிய இளம் தாயார்- ( அதிர்ச்சி தரும் சி.சி.டிவி காட்சிகள்)

பிறந்த குழந்தையை கழிவறையில் போட்டுவிட்டு தப்பிய இளம் தாயார்- ( அதிர்ச்சி தரும் சி.சி.டிவி காட்சிகள்)
October 24
03:12 2017

மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தையை அதன் தாயார் கழிவறையில் விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டில் பரபரப்பான மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தையை அதன் தாயார் கழிவறை குப்பைத் தொட்டியில் விட்டுவிட்டு தப்பியுள்ளார்.

அந்த இளம் தாயாருக்கு இரண்டு பெண்கள் கூடவே சென்று உதவுவதும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

குறித்த இளம்பெண் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற பின்னர் கழிவறையை பயன்படுத்திய ஒருவர், குழந்தை ஒன்று கண்டெடுத்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட மருத்துவர்களால் குழந்தையை காப்பாற்ற் முடிந்தது என கூறுகின்றனர்.

பெருவில் அமைந்துள்ள Solidaridad Salud மருத்துவமனையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் குறித்த இளம்பெண்ணின் உதவிக்கு கூடவே செல்லும் பெண் ஒருவர் அவருக்கு மஞ்சள் நிற தூண்டு ஒன்றை அளிக்கின்றார். அவர் அதை தனது இடையில் கட்டிக் கொள்கிறார்.

குறித்த இளம்பெண்ணின் உடலில் பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தம் படிந்திருக்கலாம், அதனால் அவர் வேறொரு துண்டால் அதை மறைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

அந்த பச்சிளம் குழந்தையை தனியாக தவிக்க விட்டு தப்பிச் சென்ற அந்த இளம் தாயாரும், அவருக்கு உதவிய பெண்கள் இருவர் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.

குழந்தை குறித்த மருத்துவமனையில் மருத்துவர்களின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

சிவா முருகுப்பிள்ளை சொல்கிறார். “பல இடங்களில் திலீபனின் கொலை வெறி செயற்பாடுகளை பதிவு செய்து வந்திருக்கின்றேன். மீண்டும் பதிவு செய்கின்றேன். ரெலோவை [...]

ஆனந்திக்கு விசா கொடுத்து தானே உள்ளார்கள் , காதலர்களை பிரித்த பாவம் இந்தியாவை சும்மா விடாது. [...]

Traitor Mano Kanesan , since when have new job as Chicks Broker ? didnt he [...]

தற் போது உள்ள அரசு நாட்டுக்கு மட்டுமல்ல முழு ஆசியாவுக்கே துரோகம் செய்கின்றது , [...]

தேச துரோகம் ( முன்னைய அரசை கவிழ்க்க சாதி செய்தது ) , செய்து வந்த இவன் இப்ப [...]

இலங்கை பத்திரிகைகள்

English News